Wednesday, November 16, 2011

அமெரிக்காவில் ஜெயலலிதா சிலை அமைக்க ஹில்லாரி கிளிண்டன் ஏற்பாடு



ஹலோ நான் ஒபாமா பேசுறேன் ஹில்லாரி அம்மா இருக்காங்களா? அம்மா டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க கொஞ்சம் அப்படியே லைனில் இருங்க கூப்பிடுறேன். என்ன அவங்க டான்ஸ் ஆடிட்டு இருக்காங்களா? ஆமாங்க அவங்க இந்தியா போயிட்டு வந்ததுல இருந்து  எப்ப பார்த்தாலும் சந்தோஷத்துல தலைகால் தெரியாம டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க

இந்தாங்க அவங்களே லைனில் வந்துட்டாங்க நீங்க அவங்ககிட்டேயே கேட்டுக்குங்க...

என்னம்மா ஹில்லாரி உங்க இந்திய பயணமெல்லாம் எப்படி இருந்துச்சு?

பயணம் மிக சிறப்பாக இருந்தது அந்த பயணத்தின் போது இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்க மாநிலத்திற்கு என்னை அழைத்தார்கள் அவர்கள் கூப்பிட்டு அப்படி நான் போகாமல் வந்தால் உங்களை இன்சல்ட் பண்ணிய மாதிரி இருக்குமென்று நான் போய் வந்தேன்.

என்ன இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்காவா?

ஆமாங்க அங்க கருப்பு கலர்ல மனிதங்க இருந்தாங்க நான் ஆப்பிரிக்கான்னு நினைச்சேன் ஆஆஆ இப்ப அந்த இடம் பேரு ஞாபகம் வந்திடுச்சி அந்த இடம் பேரு என்னவோ தமிழ்நாடுன்னு சொன்னாங்க.

அங்க போன்னா என்ன மாதிரி வெள்ளை கலர்ல ஒரு அம்மையார் இருந்தாங்க அவங்களை என்னிடம் அறிமுகப்படுத்தி வைச்சாங்க அப்பா என்ன அறிவு என்ன அறிவு எல்லாருக்கும் தலையில சிறிதளவுதான் மூளை இருக்கும் ஆனா அவங்களுக்கு உடம்பு எல்லாம் மூளைங்க.

அவங்க கடந்த ஐந்தாண்டு ஏதோ பங்களாவில சும்மா சும்மா படுத்து இருந்தாங்களாம் தேர்தல் வரும் போது ஏதோ கூட்டத்தில் பேசினாங்களாம். அவங்க பேசின பேச்ச கேட்ட தமிழக மக்கள் அப்படியே அவங்களை அமோக மெஜாரிட்டில ஜெயிக்க வைச்சுட்டாங்களாம்

அப்பட்ன்னா பாருங்க, அவங்க பேச்சு திறமையை .அது மட்டுமல்ல அவங்கள பார்க்க வர ஆம்பிளைங்க எல்லாம் அப்படியே அவங்க கண்ணை கூட பார்க்க பயந்து அப்படியே கால்ல விழுறாங்க அதை என் கண்ணால பார்த்தேன் நான் உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கின்றேன் ஆனா இந்த மாதிரி ஆண்கள் பெண்ணின் காலில் விழுறதை எங்கேயும் நான் பார்த்தது இல்லை. நமக்கே நல்லா தெரியும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் மக்கள் எல்லாம் மிக திறமைசாலி என்று, அதிலும் தமிழக ஆட்கள் மிக புத்திசாலிகள் என்று, அவர்களே இந்த பெண்ணின் காலில் விழுவது என்றால் இந்த அம்மையார் இந்தியாவில் மிக புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும். அதனால் அவர்களிடம் நான் ஆலோசனை பெற்று நான் வரும் தேர்தலில் அமெரிக்காவின் முதல் பெண் பிரசிடெண்டாக ஆகிவிடலாம் என்று கருதுகிறேன் என்று மூச்சு விடாமல் ஹில்லாரி அம்மா சொன்னார்.

அதை கேட்டு ஆச்சிரியப் பட்ட ஒபாமா சொன்னார் ஹேய் ஹில்லாரி வரும் தேர்தல்ல நான் ஜெயிக்க முடியாது என்று எனக்கு நல்லா தெரியும் அதனால நாம் ஒன்று செய்வோம் நாம் அந்த அம்மையாரை அமெரிக்கா கூப்பிட்டு கெளரவித்து அவர்களிடம் ஐடியா கேட்போம் நீ வேண்ணா பிரசிடெண்டாக இரு நான் வெளித்துறை அமைச்சராக இருந்து விடுகிறேன். இதற்கு நீ சம்மத்திதால் நாம் உடனே அவர்களுக்கு விசா அனுப்பி அவர்களை இங்கு கூப்பிட்டு கெளரவிப்போம்.

அதற்கு ஹில்லாரியும் சம்மத்திதார். ஒபாமாவுக்கும் சந்தோஷம் அந்த சந்தோஷத்தில் அவர் ஹில்லாரியிடம் கேட்டார் அந்த அம்மையார் செய்த சாதனையை என்னிடம் சொல்வாயா நானும் என் மனைவியிடம் அதை பகிர்கிறேன் என்றார்.

அதற்கு ஹில்லாரி ஒபாமாவிடம் சொன்ன சாதனை பட்டியல்

முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளைப் பட்டியல் போட்டு அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு தமிழக முதல்வர் தரப்பில் கொடுக்கப்பட்ட சாதனைப் பட்டியலை அப்படியே ஒரு காப்பி ஒபாமாவிடம் கொடுக்கப்பட்டது அது கிழே உங்களுக்காக தரப்பட்டுள்ளது


புதிய தலைமைச் செயலகம் மூடப்பட்டு அதை மருத்துவமனையாக மாற்ற உத்தரவு பிறப்பித்தது..

அண்ணா நூலகத்தை மாற்றி அதை சிறுவர் ஹாஸ்பிட்டலாக மாற்ற உத்தரவு பிறப்பித்தது.

சமச்சீ ர் கல்வியை தடை செய்து குழந்தைகளை பள்ளிக்கு வர செய்து சும்மா மாணவர்களை கில்லி விளையாட விட்டது.

ஆயிரக்கணக்கான போலீசார் புடை சூழ நீதி மன்ற கூண்டில் தொடர் கதையாக நிற்பது


தான் ஆட்சிக்கு வந்தவுடன் குஜராத்லிருந்து கரண்ட் வந்து விடும் என்று சொல்லி 6 மாதம் ஆன பின்னால் மின் வெட்டை  சில மணி நேரங்களில் இருந்து பல மணி நேரமாக அதிகரித்தது?

ஒரே நிமிடத்தில் 12,600 சாலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.

போலிசாரின் துப்பாக்கி சூட்டு பயிற்சிக்காக மக்களை உபயோகித்தது.

இதெல்லாம் வந்த ஆறுமாதத்தில் செய்து முடித்தது .கிழே வருபவை செய்ய நினைப்பவைகள்

வாஸ்து படி பழனி மலையையும், காஞ்சி கோயிலையும் இடமாற்ற  தமது   நண்பர்களுடன் ஆலோசனை செய்வது.

முடிந்தால் பெங்களுரை தமிழ்நாட்டோடு இணைப்பது. இதனால் விசாரணைக்காக வெளி மாநிலம் செல்லும் அவப்பெயரை தவிர்ப்பது.

முடிந்தால் இலங்கையிலும் அதிமுக கட்சியின் கிளைகள் அமைத்து ஆட்சியில் சம பங்கு கேட்பது

வரும் பார்லிமெண்ட் தேர்தலில் அவர் கூட்டணி ஜெயித்தால் இந்திய பார்லிமெண்டை சென்னைக்கு மாற்றுவது.

இன்னும் நிறைய சொல்லலாம்

இதையெல்லாம் படித்த ஒபாமா  இவ்வளவு  சாதனைகளை பண்ணிய  அவரை நம் எதிர்கட்சி ஆட்கள் கூப்பிடும் முன்னே நாம் அவர்களை அமெரிக்காவிற்கு கூப்பிட்டு பாராட்டி விடுவோம் நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த  லிபர்டி சிலையை எடுத்து விட்டு அதற்கு பதிலாக இந்த ஜெயா அம்மா சிலையை நாம் வைப்போம் என்றார் ஒபாமா.

அதற்கு ஒகே சொன்ன ஹில்லாரி அம்மா பிரசிடெண்ட் ஒபாமா நீங்க இப்போதே உங்க வீட்டிற்கு போய் உங்கள் மனைவியின் காலில் விழுந்து எழுந்திரிக்க பழகி கொள்ளுங்கள் என்றார்
 
-----

கிழ்கண்ட செய்திதான் மேலேயுள்ள பதிவை எழுத தூண்டியது. அதற்காக ஜூனியர் விகடனுக்கு எனது நன்றிகள்

 

கடந்த இதழ் ஜூனியர் விகடனின் கழுகார் ஜெயலலிதாவின் அறிவாற்றலை புகழ்வது போல மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். அந்த செய்தியின் ஒரு சிறு பகுதி உங்கள் பார்வைக்காக (நன்றி ஜூவி)

நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன் என ஆரம்பித்தார் கழுகார்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் அமெரிக்கா செல்கிறார்! - ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த ஜூலையில் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தாரே........... அதன் தொடர்ச்சியா இந்த விசிட்?



முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளைப் பட்டியல் போட்டு அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு தமிழக முதல்வர் தரப்பில் அனுப்பப்பட்டது. அது அப்படியே, ஹிலாரியின் கவனத்துக்கும் சென்றதாம். நன்றாகப் படித்து திருப்தி ஆன பிறகே, சென்னை புரோகிராமிற்கு ஹிலாரி ஒப்புக்கொண்டாராம். '''ஹிலாரியும் ஜெயலலிதாவும் நீண்ட நேரம் பேசினார்கள். அந்தச் சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் ஆழமான அறிவாற்றல் மிகுந்த பேச்சை ரசித்து, 'தமிழகத்தின் மாபெரும் சாதனைகளை அமெரிக்கர்கள் அறிந்துகொள்ள நீங்கள் எங்கள் நாட்டுக்கு அவசியம் வர வேண்டும். அரசு முறைப் பயணமாக நீங்கள் அங்கே வரும் வகையில் எங்கள் தரப்பில் இருந்து அழைப்பு அனுப்புகிறேன்' என்று வெளிப்படையாக சொல்லிவிட்டுப்போனாராம்!''

''முதல்வர் ஜெயலலிதாவும் அமெரிக்கா போக ரெடியாகிவிட்டாரா? எப்போது விசிட்?''

''ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம். எப்போது வேண்டுமானாலும் கிளம்பத் தயார். ஆனால், அமெரிக்காவில் இருந்து முறைப்படி அழைப்பு வர வேண்டுமே? தற்போதைய அரசியல் சூழ்நிலை அங்கு பிஸியாக இருப்பதால், ஆட்சியாளர்களும் பிஸி. அதனால், இன்விடேஷன் வருவது தற்காலிகமாகத் தள்ளிப்போகிறதாம். தே நேரத்தில், இந்திய அரசியலின் அசைக்க முடியாத சக்திகளில் ஜெயலலிதாவும் ஒருவர் என அமெரிக்க அரசு நினைக்கிறதாம். இந்தியாவில் நிலவும் அரசியல் குழப்பங்களால் எப்போது வேண்டுமானாலும் பாராளுமன்றத் தேர்தல் வரலாம். அதற்கு சற்று முன்பாக ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு அழைத்துக் கௌரவிக்கலாம் என யோசிக்கிறார்களாம்!''



Source : http://www.vikatan.com/article.php?mid=2&sid=345  நன்றி ஜுவி

5 comments:

  1. நக்கல் நல்லா தூக்கலாவே இருக்கு
    என்ன சொல்லி என்ன
    அந்த அம்மா மாறப் போவதில்லை
    வெந்த மனதை இதுபோல் ஜோக் அடித்து
    ஒரு ஐந்து வருடங்களுக்கு ஆற்றிக்
    கொண்டிருக்க வேண்டியதுதான்
    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான கதை அருமையான பதிவு
    250 பதிவு என்பது இமாலய சாதனைதான்
    தொடர்ந்து வருகிறோம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி. காலம் வெகு விரைவாக ஒடிவிடும் மறுபடியும் அந்த அம்மா உங்களிடம் கெஞ்சும் காலம் வரும்

    ReplyDelete
  4. ரமணி சார் உங்களின் தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி.

    ReplyDelete
  5. சரமாரி எள்ளல் . சிரித்து விட்டேன்.சிந்திக்கவும் வைத்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.