Sunday, November 27, 2011


இப்படி மோசமாகவா இருப்பான்? (மதுரைத் தமிழனின் Dirty Mind)



நான் நேற்று ஷாப்பிங்க் சென்றுவிட்டு வீட்டுக்கு தேவையானதை வாங்கிவிட்டு, வாங்கியதற்கு பில் போடுவதற்காக வரிசையில் நின்றிருந்தேன்.அப்போது ஒரு அழகிய அமெரிக்க பெண் மிக புன்னைகையுடன் ஹலோ என்று சொல்லியாவாறே  என் தோளை தொட்டு கூப்பிட்டாள்.



திரும்பி பார்த்த நான் அழகிய பெண்ணை ஆச்சிரியத்துடனும் ஒரு வித குழப்பத்துடனும் உங்களுக்கு யார் வேண்டும் என்ற ஒருவித பார்வையுடன் அவளை பார்த்தேன்.

நான் பார்த்த பார்வையிலே அவளுக்கு புரிந்துவிட்டது தான் தவறு செய்துவிட்டோமோ என்று கருதியாவாறே ஸாரி சொல்லியபடி என்னிடம் சொன்னாள் உங்களை பார்த்தவுடன் என் குழந்தைகளில் ஓன்றிற்கு நீங்கள் தகப்பானார் என்று கருதிவிட்டேன் மீண்டும் ஸாரி சொல்லியவாறு அந்த இடத்தைவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.



நானும் ஒரு வித குழப்பத்துடன் என்னடா இந்த அமெரிக்கா பெண்களே இப்படிதானோ தான் பெற்ற குழந்தைகளுக்கு யார் தந்தை என்று கூட ஞாபகத்தில் வைத்து கொள்ள மாட்டாரகளோ என்று நினைத்தவாறே காரில் வந்து அமர்ந்தேன்.

காரில் அமர்ந்த எனக்கு மீண்டும் அதே நினைப்பு அப்போது எனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி ஓன்று ஞாபகத்திற்கு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன் மனைவி இந்தியா சென்ற போது ஒரு பாருக்கு நண்பர் கூட சென்று நன்றாக குடித்துவிட்டு அங்கு வந்த பெண்களை காலாய்த்தது ஞாபகம் வந்தது அப்போது நாம் எதோ தவறு செய்து அதனால் நாம் இந்த பெண்ணின் குழந்தைக்கு நாம் அப்பாவாகிவிட்டோமோ என்று நினைத்து குழம்பியவாறு வீட்டிற்கு சென்றேன்.....



டிஸ்கி : இந்த அப்பாவி மதுரைத்தமிழன் ரொம்ப நல்லவங்க அப்படி எல்லாம் தவறு செய்பவன் அல்ல ஆனால் அவனுக்கு கொஞ்சம் ஞாபக மறதி இருப்பதால் அவனுக்கு அந்த பெண் அவனுடைய குழந்தையின் இரண்டாம் வகுப்பு டீச்சர் என்பது இன்னும் ஞாபகத்திற்கு வரவில்லை. பாவம் அவன் இந்த குழப்பம் காரணமாக கடந்த இரண்டு நாளாக கோப்பையும் கையுமாக இருக்கிறான்.

முடிந்தால் அவனுக்கு யாரவது எடுத்து சொல்லுங்களேன்.



டிஸ்கி 2 : நான் படித்த சிறு ஆங்கில ஜோக்கை அப்படியே மாற்றி என் வழியில் தந்துள்ளேன். பிடித்தால் படியுங்க மக்கா இல்லை என்றால் இதுவரை படித்தற்கு நன்றி மக்காஸ்.. ஹீ....ஹீ.......
27 Nov 2011

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.