Tuesday, November 22, 2011


அமெரிக்காவில் இருந்து  தமிழகம் செல்லும் இந்தியர்களூக்கு! ஒரு எச்சரிக்கை!!!



தமிழகத்தில் பயணம் செல்ல விரும்பும் அனைத்து அமெரிக்கா வாழ் இந்திய மக்களே! தமிழகம் அம்மாவின் ஆட்சியில் ரொம்பவே மாறிவிட்டது. அதனால் நீங்கள் தமிழகம் செல்லும் போது கவனிக்க & யோசிக்க, செய்ய வேண்டியது இதுதான்.



தமிழகத்திற்கு நீங்கள் அமெரிக்காவில் இருந்து போகும் விமான டிக்கெட்டை நீங்கள்  குறைந்த செலவில் வாங்கிவிடலாம். ஆனால் தாம்பரத்திலிருந்து பாரிஸுக்கு செல்ல பஸ் டிக்கெட் எடுக்க உங்களின் ஒரு வருட அமெரிக்கா சம்பாத்தியம் போதாது.பஸ் டிக்கெட் எல்லாம் டீல்ல கிடைக்காதுமக்களே.



ஊரில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு நீங்கள் ஐபேடு அல்லது லேப் டாப் வாங்கி செல்ல வேண்டாம் அதற்கு பதிலாக நீங்கள் அமெரிக்காவில் இருந்து ஒரு பாக்ஸ் பால் பவுடர் வாங்கி சென்றால் அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவியாகும்



தமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் வீட்டிற்கு சென்றால் பழக்க தோஷத்தில் ஒரு கப் காபி தரீங்களா என்று தப்பி தவிர கேட்டு வீடாதிர்கள். அதற்கு பதிலாக என்ன பீர்  ஒரு க்ளாஸ் தரிங்களா என்று கேளுங்கள்.



பால் கடைக்கு முன் அதிக நேரம் நிற்காதீர்கள். & போட்டோ எடுக்காதீர்கள் அப்படி செய்தால்  நீங்கள் குண்டர் தடை சட்டத்தின் படி கைது செய்யபடுவீர்கள்.



பவர் கட்டைப் பற்றி குறை கூறாதீர்கள் முந்தைய ஆட்சியில் உள்ள பவர்கட் அவர்களின் திறமையில்லாத காரணத்தால் ஏற்பட்டது. ஆனால் இப்போது ஏற்படும் பவர்கட் "படித்த முதல்வரால்" சுற்றுபுற சூழ்நிலையை பாதுகாக்கவும் மக்களை டிவியின் மயக்கத்திலிருந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட திட்டத்தால் நடக்கிறது. எனவே முந்தைய அரசோட கம்பேர் பண்ணி வீணான விவாதத்தில் ஈடுபடாதிர்கள்.



சிறந்த காமெடி ஷோ(show)  பார்க்க எங்கே செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா? பா..க கட்சி தலைவர் மீட்டிங்க் எங்கே நடக்கிறது என்று கேட்டு அங்கே செல்லுங்கள். அவர்தான் தமிழகத்தில் தற்போது மிக சிறந்த காமெடி பேச்சாளார்.



அமெரிக்காவில் நாயா உழைத்து கஷ்டப்பட்டது போதும் நிம்மதியா மகாராஜனாக உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று ஆசையா தமிழகத்தில் உள்ள கோயில் குளம் என்று சுற்றி கடவுள்களிடம் ஆசிர்வாதம் வாங்க அலைய  வேண்டாம். மிகச் சிறந்த பாட்டிலை (ஃபாரின் சரக்கு) வாங்கி தமிழகத்தின் கருப்பு எம்ஜியார் என்று அழைக்கப்படுவரிடம் சென்றால் அவர் அதை அருந்தி விட்டு அவர்கையால் உங்கள் தலையில் ஆசிர்வாதம்  பண்ணுவார் அதன் பிறகு நீங்கள் மகாஆஆஆஆஅ ராஜன் தான் போங்க



தப்பி தவறி நீங்கள் பெங்களுர் பக்கம் போனால் வீதி நிறைய போலீஸார் நின்று போக்குவரத்து ஒரு நபரின் வரவால் தடைபட்டு இருக்கிறது என்றால் யார் அவர் என்று ஆச்சிரியப் படாதீரகள். அவர் நாட்டின் சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்தவர் அல்ல அல்லது அமெரிக்காவில் இருந்த வந்த பிரெசிடண்ட் ஒபாமாவும் அல்ல அவர் தமிழகத்தில் இருந்து குற்ற விசாரணைக்காக கோர்ட்டுக்கு செல்லும் தமிழக முதல்வர்தான்.



என்ன ஆச்சிரியாமா இருக்கா எப்படி குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டை ஆள்கின்றார் என்றா. என்னங்க அரசியல் தலைவர் மட்டும்தானா காமெடி பண்ணணும் தமிழக மக்கள் ஓன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லவா அதுதானங்க

யாரைய்யா அது நீங்க  லேப்டாப் மனோவை தேடுகீறிர்களா? அவரை காணோமா? அவரெல்லாம காணமா போக கூடிய ஆள் அல்ல அவர் பெயர் இப்போது பால்கார மனோவாக மாறிவிட்டது அவ்வளவுதான் அவர் கடைசியாக இந்தியா போகும் போது பால் பவுடர் அவர் நண்பருக்காக வாங்கி சென்றதால் இந்த பெயர் மாற்றம்)

என்னங்க நம்ம தமிழகத்தை பற்றி தெரிஞ்சுகிட்டீங்களா? இப்ப நீங்க அங்க போறீங்களா அல்லது உங்களது உறவினர்களையும் நண்பர்களையும் இங்கே நம்ம செலவில் கூப்பிட போறிங்களா?( என்ன நீங்க என் நண்பரா. நண்பர்கள் எல்லாம் எனக்கு கிடையாதுங்க.  வேவ்வே வ்வ்வ்வ்வ்வ்)

எனக்கு என்ன தோணுகிறது என்றால் தமிழகத்தில் போய் பஸ்ஸுக்காக பணத்தை செலவிடுவதைவிட அந்த செலவில் எல்லோரையும் இங்கே கூப்பிடலாம் சரிதானே.

 இதை படித்து விட்டு சிரிப்பதா அல்லது அழுவதா தெரியவில்லை என்று என்னை குற்றம் சுமத்தாதீர்கள் அது உங்கள் பாடு. .படிக்காதவன் என் மண்டையில் பட்டதை நான் சொல்லிட்டேன். அம்புட்டுதாங்க......

9 comments:

  1. அருமை நண்பரே...அப்பட்டமான உண்மை..தங்களது பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //இப்போது ஏற்படும் பவர்கட் "படித்த முதல்வரால்" சுற்றுபுற சூழ்நிலையை பாதுகாக்கவும் மக்களை டிவியின் மயக்கத்திலிருந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட திட்டத்தால் நடக்கிறது.// :)

    ReplyDelete
  3. படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் நீங்க சொன்னது எல்லாமே அப்பட்டமான உண்மைதானே.

    ReplyDelete
  4. தொலைகாட்சியின் மாயையிலிருந்து மக்கள் மீட்கப்பட்டனர். உண்மைதான், சாதாரணமாக பவர்கட் 5 மணி நேரம். அரசு கேபிள் ஒளிபரப்பப்படும் பகுதியிலிருந்து ஒரு 5 மணி நேரம் பவர்கட் என்பதால் தொடர்ந்து 10 மணி நேரம் ஒளிபரப்பாவதில்லை. காலை 8-மாலை 8வரை எப்போது வேண்டுமானாலும் கேபிள் கட் ஆகும். நல்லாயிருக்குல்ல.

    ReplyDelete
  5. எனக்கு என்ன தோணுகிறது என்றால் தமிழகத்தில் போய் பஸ்ஸுக்காக பணத்தை செலவிடுவதைவிட அந்த செலவில் எல்லோரையும் இங்கே கூப்பிடலாம் சரிதானே.//

    முதல் டிக்கெட்டை எனக்கு போடுய்யா பேரிக்காவுக்கே ஸாரி அமெரிக்காவுக்கே வந்துர்றேன் ஹி ஹி...

    ReplyDelete
  6. யாரைய்யா அது நீங்க லேப்டாப் மனோவை தேடுகீறிர்களா? அவரை காணோமா? அவரெல்லாம காணமா போக கூடிய ஆள் அல்ல அவர் பெயர் இப்போது பால்கார மனோவாக மாறிவிட்டது அவ்வளவுதான் அவர் கடைசியாக இந்தியா போகும் போது பால் பவுடர் அவர் நண்பருக்காக வாங்கி சென்றதால் இந்த பெயர் மாற்றம்)///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
    என்னா பேரு இது, இந்த தலைப்புல பதிவு எழுதி உங்க எல்லாரையும் கொல்லப்போறேன் ஹி ஹி...

    ReplyDelete
  7. பதிவு அருமை. சிரிப்பை வரவழைத்தாலும், சிந்திக்க வைக்கும் பதிவு.

    ஆமா, அம்மா பதிவெல்லாம் படிப்பாங்களா?

    ReplyDelete
  8. எல்லாம் பழகிடுச்சு.. இல்லாட்டியும் பழகிக்கிவோம் #தமிழன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.