உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, September 30, 2010

எச்சரிக்கை !!!!!இதயம் பலமினமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்.

இணையத்தில் உலாவும் போது இந்த குறும் படம் பார்த்தேன். என் இதயமே நின்றது போல ஒரு உணர்வு. இப்படி ஒரு கொடுரம் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. பூவையே தவறுதலாக மிதித்துவிடும் போது மனம் வருந்தும் நம்மை போல உள்ளவர்களுக்கு பூவைவிட மென்மையான பெண்களுக்கு இந்த மாதிரி கொடுரம் ஏற்படும் போது நம் மனம் படும் பாட்டை எப்படி சொல்வது என்பது தெரியவில்லை. கடவுள் என்பவர் இருக்கிறாரா என்ற கேள்விதான் எழுகிறது.

இந்த குறும்படத்தை பார்த்தவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்ய வேண்டுகிறேன்

Tuesday, September 28, 2010

உலகத்திலே அதிபயங்கரமான ரோலர் கோஸ்டர்.

உயரமான, வேகமான ரோலர் கோஸ்டர்களில் மக்கள் செல்லும் போது வழக்கமாக சொல்வது இதுதான்.. ஒ மை .காட்..... ஒ ஒ ஒ ஒ நோ........ ஒரு தடவை ஆசைக்கு நானும் என் மனைவியும் உலகத்திலே மிகவும் உயரமான ரோலர் கோஸ்டரில் சென்றதுண்டு. இனிமேல் செல்வதாக ஆசை ஏதும் கிடையாது. இதை படிக்கும் உங்களுக்கு ஆசை ஏதும் இருந்தால் நான் உங்களை அங்கே இலவசமாக அழைத்து செல்கிறேன். என் வலைப்பக்கத்திற்கு வந்த உங்களுக்கு இதை நான் செய்யவில்லை என்றால் நானெல்லாம் ஒரு மதுரைக்காரனல்ல.


Kingda Ka: மிகவும் உயரமான வேகமான ரோலர் கோஸ்டர்கள்.

இது அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸ்சி மாநிலத்தில் (Six Flags Great Adventure) உள்ளது. இது மணிக்கு 128 மைல் வேகம் செல்லக்கூடியது. ரைடின் முடிவில் இது 456(139 மீட்டர் ) உயரம் சென்று இறங்கும். படமும் விடியோவும் கிழே...

2. Dodonpa இது ஜப்பானில் உள்ள உயரமான ரோலர் கோஸ்டர்

மக்கள் உட்கார்ந்தவுடன் இது முதலில் ஒரு இருட்டு குகைக்குள் இருந்து ஆரம்பிக்கும். திகிலுடன் ஆரம்பிக்கும் இந்த பயணம் 90 டிகிரியில் 170 அடி உயரத்திற்கு 107 mph வேகத்தில் சென்றுவரும். படமும் விடியோவும் உங்களை அங்கு அழைத்து செல்லும்.3. Steel Dragon .

இதுவும் ஜப்பானில் உள்ளது. இது உலகத்திலேயே மிகவும் நீளமான ரோலர் கோஸ்டர். இது 8,133ft நீளமானது. கவலைப்பாடாதிர்கள் இதிலும் நான் உங்களை இலவசமாக அழைத்து சென்று காண்பிக்கின்றேன்.கலைஞர் இலவசம் கொடுத்தால் வோட்டு போடுறீங்க.. எனக்கு வோட்டு போடவேண்டாம். கமண்ட்ஸ் மட்டும் போடுங்க.. ஒகேவா?

Monday, September 27, 2010

ஹெல்த் டிப்ஸ் - மலச்சிக்கல்

நம் மூதையர் காலத்தில் இருந்து தற்காலம் வரையுள்ள அநேக பேர்களுக்கு உள்ள பிரச்சனை மலச்சிக்கல் பிரச்சனை ஆகும். தற்போது எடுத்துள்ள சர்வேயின்படி உலகத்திலுள்ள 10 % க்கும் மேலே உள்ளவர்கள் மலச்சிக்களால் அவதிப்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதற்கு 70 க்கும் மேற்ப்பட்ட மருந்துக்கள் உள்ளன. டாக்டர்கள் எப்போதுமே மருந்துக்கள் எழுதி தருவார் அல்லது நிறைய காய்கறிகள், பழம். தண்ணீர் & உடல் பயிற்ச்சி செய்ய கூறுவார்கள்.
மருந்துக்கள் முலம் சரி செய்வது ஒகே என்றாலும் அது இயற்கையான வழியாகாது. இதை மனதில் வைத்து வலையில் மேய்ந்த போது சில நல்ல பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அந்த குறிப்புகள் நல்ல உபயோகமாக இருக்கும் என்று தோன்றியதன் விளைவே இந்த ஹெல்த் டிப்ஸ் பக்கம். இதை நம் தமிழ் உலக மக்களுக்கு பயன் பட வேண்டுமென்று அதை நான் இங்கு தருகின்றேன்.


ஒவ்வொரு நாளும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். எப்போது மலம்வரும் போல இருக்கும் போது உடனே கழித்துவிட வேண்டும். அடக்கி கொண்டு பிறகு போகலாம் என்று நினைக்க கூடாது.


டாய்லெட்டில் எப்படி உட்காரவேண்டும் என்பது மிக முக்கியம். கீழேயுள்ள படத்தை பாருங்கள்.

படத்திலுள்ள படி முன்புறமாக 45-50 டிகிரி சாய்ந்த படி உட்கார்ந்தால் மலவாய் தளர்வாகவும், நேவாகவும் இருப்பதால் எந்த வித முயற்ச்சியில்லாமல் எளிதாக மலம் போகலாம். காலை படத்தில் உள்ளபடி வைக்கவும்.. இது மலம் கழிப்பதற்கு மிகவும் குட் பொஸின் ஆகும்.ரொம்ப மலச்சிக்கல் உள்ளவர்கள் எனிமா முறையை கடைப் பிடிக்கலாம்.. இதற்கு என மருத்துவ கடையில் எனிமா சிரின்ஸ் விற்ப்பார்கள் அதை வாங்கி உபயோகிக்கலாம்.எனிமா சிரின்ஸ் படம் கிழேயுள்ளது.


சிம்பிள் சால்ட் வாட்டர் எனிமா எளிதானது. மிதமான வார்ம்முள்ள 4 கப் வாட்டரில்( 8 oz = 1 cup) 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கரைத்து உபயோகிக்கவும். நெட்டில் நீங்கள் வேறுவிதமான முறைகளையும் காணலாம்.
இது உபயோகமாக இருக்கும் என்று தோன்றினால் இதை தேவைப்படுபவர்களுக்கு சொல்லுங்கள்

Thursday, September 23, 2010

நக்கீரற்க்கோ ஒரு சந்தேகம் எனக்கோ பல சந்தேகம்

நக்கீரற்க்கோ ஒரு சந்தேகம் எனக்கோ பல சந்தேகம்.


இதை தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் அல்ல பல்லாயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும்.பரிசு பற்றி விபரம் கடைசியில் கொடுத்துள்ளேன்.1. நாய் உணவு விளம்பரத்தில் நியூ அண்ட் இம்புருவ் டேஸ்டிங் என்று விளம்பரபடுத்தியுள்ளார்கள். அதை டேஸ்ட் பண்னியது யார்?

2. காப்பிரைட் சிம்பலை யாரும் காப்பிரைட் பண்ணி வைத்துள்ளார்களா?

3. தண்ணிர்க்குள் உங்களால் அழுக முடியுமா?

4. நாம் நாய்போல வேலை செய்கின்றோம் என்று சொல்கிறோம். ஆனால் நாய் எப்போதுமே உட்கார்ந்துதானே இருக்கிறது.? பின் ஏன் அப்படி கம்பேர் பண்ணுகிறோம்?

5. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

6. வட்ட வடிவமான ருமில் இருக்கும் போது உங்கள் குழந்தை தவறு செய்தால் நீங்கள் கோ டூ கார்னர் (Go To Corner) என்று சொன்னால் உங்கள் குழந்தை எங்கே போய் நிட்கும்?

7. கார்னில் இருந்து கார்ன் ஆயில் தயாரிக்கிறார்கள், வெஜிடபிலிருந்து வெஜிடபல் ஆயில் தயாரிக்கிறார்கள், பேபி ஆயில் பேபியை யூஸ் பண்ணியா தாயரிக்கீறார்கள்?

8. டி.வியை ஒரு டிவியாக இருந்தாலும் ஏன் டி.வி செட் என்று கூறுகிறார்கள்?

9. தியோட்டரில் உள்ள சீட்டில் உள்ள எந்த (arm rest) கைவைக்கும் இடம் நம்மது?

10. காரில் உள்ள ஸ்பிடோமீட்டரில் ஏன் 130 மைல் அளவு ஸ்பீடு வைத்துள்ளார்கள்? எந்த நாட்டிலும் அந்த அளவு ஸ்பிடில் ஒட்ட அனுமதியில்லை? ஏன்?

11. டாக்டர் ஆபிஸில் நாம் டிரெஸ் மாற்றும் போது டாக்டர் அல்லது நர்ஸ் ஏன் வெளியே போகிறார்கள்? எப்படியும் அவர்கள் நம்மை நிர்வாணமாகத்தான் பார்க்க போகிறார்கள்.12. ஒரு லெஸ்பியன் பொண்ணு இன்னொரு பொண்னிடம் மட்டும்தான் செக்ஸ் உறவு வைத்துள்ளாள் ஆண்களிடம் உறவே வைக்கவில்லை, அவள் இன்னும் வெர்ஜின் தானா? இல்லையா?13. ஒரு கை உள்ளவனை போலிஸார் எப்படி கைவிலங்கு போட்டு கூப்பிட்டு செல்வார்.?

14. கடலில் உள்ள எல்லா கப்பலையும் வெளியே எடுத்துவிட்டால் கடலின் நீர் மட்டம் குறையுமா?

15. நாம் குளிச்சிட்டு ரொம்ப சுத்தமா வெளியே வந்து துண்டை வச்சு துடைச்ச பிறகு ஏன் அந்த துண்டை அழுக்கு துண்டு என்று சொல்லி அழுக்கு கூடையில் போடுகிறோம்?என் சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டு கிழேயுள்ள பொற்காசுகளை எவ்வளவு வேண்டுமோ பிரிண்ட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.


"Everytime you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing." — Mother Teresa

பெண்களை இப்படித்தான் திருத்த வேண்டும்.

நீண்ட கார் பயணத்திற்கு பின் நாங்கள் வீட்டிற்க்கு வந்து ட்டிரிங்ஸ் அடிக்கும் போது என் நண்பரின் மனைவி எங்களுக்காக ப்ரைடு எக் கிச்சனில் தாயாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது என் நண்பர் திடிர் என கிச்சனில் நுழைந்து ஏய்ய்ய்ய் ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஏய்ய்ய் இன்னும் கொஞ்சம் பட்டர் போடுடி! ஏய்ய்ய்ய் என்ன பண்னுர ஒரே சமயத்தில் மூணு . நாலு எக் போடதடி.. ஏய்ய்ய்ய் தீயைப் பாருடி.. சிறிது தீயைக் குறைடி ...கருகிறபோதுடி... பார்த்துடி... பார்த்து...பட்டர் போதுமாடி... இந்த நேரத்தில் எங்கடி போய் பட்டர் தேடுறதுடி......ஏய்ய்ய்ய் சட்டியில் ஒட்ட போதுடி,, நீ எங்க பார்த்து பண்ணுறடி.... பார்த்து பார்த்து ஜாக்கிரதை... ஓ மை காட்!!!!!!!!!நான் எத்தனை தடவை சொன்னாலும் நீ சமைக்கும் போது எப்போதும் காதில் வாங்கிறதுயில்லை.. ஆர் யூ க்ரேஸி? ஹவ் யூ லாஸ்ட் யுவர் மைண்ட்? ஓகே ஒகே!!!!!! உப்பு போட மறந்துடாத........நீ எப்பவுமே உப்பு போட மறந்துடுவ...ஏய்ய் பார்த்து போடுடி....பார்த்து..பார்த்து...........
அவரது மனைவி அவரைத் திரும்பி பார்த்து உங்களுக்கு என்ன ஆச்சு? ஏதாவது பைத்தியிம் கியித்தியம் பிடிச்சிருச்சா? ஒரு சாதாரணமான எக்கை எப்படி பொறிப்பதென்று பொண்ணாகிய எனக்கு தெரியாதா? எவ்வளவு நாளா சமைச்சிக்கிட்டு இருக்கிறன். போங்க. பேசம போய் உங்க வேலையை பாருங்க என்றார்.அதற்கு அவள் கணவன் மிகவும் அமைதியாக பதில் சொன்னார். கண்ணம்மா நான் கார் ஓட்டும் போது, நீ எனக்கு இன்ஸ்ரக்ட்ஷென் கொடுக்கும் போது, நான் எப்படி பீல் பண்ணுவேன் என்பதை உனக்கு உணர்த்த வேண்டுமென்றுதான் நான் கிச்சனுக்குள் வந்து இப்படி சொன்னேன். இப்போதாவது உனக்கு புரிஞ்சு இருக்குமென்று நினக்கின்றேன் என்று சொன்னார்.

Monday, September 20, 2010

இலவச தமிழ் புத்தகங்கள்

நான் வலைத்தளத்தை மேய்ந்த போது என் கண்ணில்பட்ட வலைத்தளம் இது. இதில் நுழைவதின் மூலம் 500 க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை இலவசமாக டவுன் லோடு செய்துக் கொள்ளலாம். உதாரணமாக : அலை ஓசை, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற பல அறிய புத்தகங்களை இங்கு காணலாம். நான் இந்தியாவிற்கு சென்றுவரும் போது எல்லாம் இந்த மாதிரியான புத்தகங்களை வாங்கி வர வேண்டும்மென்று நினைப்பேன் ஆனால் பெட்டியில் இடம் இல்லாததால் வாங்கி வரமுடியாமல் போகும். என்னைப் போன்று உள்ளவர்களுக்கு இந்த தளம் ஒரு ஜாக்பாட் ஆகும்.


நீங்களும் விரும்பினால் இந்த தளத்திற்கு சென்று வாருங்கள். http://www.tamilcafe.net/tamilbooks.html  தமிழின் அனைத்து சிறந்த நூல்களும் இங்கே தரப்பட்டுள்ளன.

Thursday, September 16, 2010

இதுதாண்டா வாழ்க்கை......

இதுதாண்டா வாழ்க்கை......
கடவுள் ஒரு கழுதையை முதலில் படைத்து அதனிடம் சொன்னார். நீ ஒரு கழுதை. நீ உன்முதுகில் நிறைய சுமைகளை சுமந்து காலை முதல் மாலை வரை உழைக்க வேண்டும். உனக்கு மூளை கிடையாது. உனக்கு புல்தான் உணவு. நீ 50 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு கழுதை பதில் சொன்னது. 50 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 20 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.-----------------------------------------------------------------------------------------------

கடவுள் ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்.

நீ ஒரு நாய் , நீ மனிதனுக்கு நல்ல நண்பண். நீ அவனது வீட்டை பாதுகாக்க வேண்டும்.உனக்கு வேண்டிய உணவை அவன் தருவான்.. நீ 30 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு நாய் பதில் சொன்னது. 30 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 15 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.----------------------------------------------------------------------------------------------

கடவுள் ஒரு குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

நீ ஒரு குரங்கு. நீ மரத்துக்கு மரம் தாண்டுவாய்.. பல வித்தைகளை காட்டுவாய். நீ 20 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்அதற்கு குரங்கு சொன்னது. 20 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 10 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.


-----------------------------------------------------------------------------------------------

கடவுள் கடைசியில் ஒரு மனிதனைப் படைத்து அவனிடம் சொன்னார்.

நீ ஒரு மனிதன். இந்த உலகில் நீ ஒரு முழுமையான படைப்பு . நீ எல்லா மிருகங்களுக்கும் தலைவன். நீ இந்த உலகத்தேயே ஆளுவாய். நீ 20 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.அதற்கு மனிதன் சொன்னான். 20 ஆண்டுகள் ரொம்ப குறைவு. எனவே கழுதை வேண்டாம் என்று சொன்ன 30 வருஷங்களையும், நாய் வேண்டாம் என்று சொன்ன 15 வருஷங்களையும், குரங்கு வேண்டாம் என்று சொன்ன 10 வருஷங்களையும் எனக்கு தாருங்கள் என்று கேட்டான். கடவுளும் அதற்கு சம்மாதித்தார்.

அதிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், அதன் பிறகு கல்யாணம் , வேலை செய்து எல்லா சுமைகளையும் முதுகில் சுமந்து 30 வருடங்கள் கழுதைப் போல வாழ்ந்தான்.பிறகு குழந்தைகளை நல்ல படியாக பாதுகாத்து வளர்த்து கிடைத்தவைகளை சாப்பிட்டு நாய் போல 15 வருடம் வாழ்ந்து வந்தான். பின் வேலையில் இருந்து ஒய்வு பெற்று 10 வருடங்கள் குரங்கு போல மரத்துக்கு மரம் தாவுவது போல வீட்டுக்கு வீடு, பையன் வீட்டில் இருந்து பொண்ணு வீட்டுக்கும் மாறி மாறி சென்று பேரக் குழந்தைக்களுக்கு வேடிக்கை காட்டி வாழ்ந்து வருகிறான்.

--------------

Monday, September 13, 2010

பெண்கள் ஒரு புதிரானவர்கள்.

காதலிக்கும் போது (கல்யாணமான புதிதில்) என்னவளை

கோபத்தில் நாயே என்று கத்திய போது

குட்டி நாய் போல வாலை ஆட்டி

என் பக்கத்தில் வந்தவள்.


கல்யாணத்திற்கு (கல்யாணமான சில ஆண்டுகளுக்கு) அப்புறம் அவளை

செல்லமாக நாயே என்று கூப்பிட்டபோது

வள்ளென்று நாய் குரைப்பது போல குரைக்கிறாள்.-------ஆகா எனக்கு கூட கவிதை மாதிரி ஏதோ எழுத வருதே...

நெக்ஸ்ட் செந்தமிழ் மாநாட்டுக்கு போய்விட வேண்டியதுதான்.எனக்கு பிடித்த கவிதை. எனது இளம் (13) வயதில் படித்தது. இன்னும் மறக்காமல் இருக்கிறது.

தபால்காரனுக்கு கூட இரக்கம் இருக்கிறது

எவர் விட்டிற்கோ போட வேண்டிய கடிதத்தை

என் வீட்டிற்குள் போடுகிறான்.

ஆனால்

நீதான் எனக்கு வரவேண்டிய கடிதத்தை

இன்னும் எழுத தொடங்காமல் இருக்கிறாய்!

Friday, September 10, 2010

உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க

இந்த பிஸி உலகில் பெண்கள் வேலைக்கும் சென்று , வீட்டிலேயும் வேலை செய்து லேட்டாக தூங்க செல்வார்கள். ஒழுங்கான நேரத்திற்கு தூங்க செல்லாதது உங்கள் தோலுக்கு அதிக கெடுதலை கொடுக்கும்.


உங்கள் முகம் பொலிவோட இருக்க அதிக பணம், காலம் செலவழித்தும் அழகு நிலையத்துக்கு சென்று வருவோம். ஆனால் நான் உங்களுக்கு அதிக செலவுயில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க ஒரு எளிமையான அட்வைஸ் தருகின்றேன்.ஒரு தக்காளி பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக ஸ்லைஷ் பண்ணி முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணிரில் கழுவுங்கள்.அதன் பிறகு உங்கள் முகம் கண்ணாடி போல பளபளனு இருப்பதை உணர்விர்கள். காலையில் உங்கள் கணவர் உங்கள் அருகில் வந்தால் உங்களை முத்தமிட வருகிறார் என்று நினைக்காதீர்கள். கண்ணாடியை தொலைத்து விட்டு சேவிங் செய்ய கண்ணாடியில்லாததால்தான் உங்கள் அருகில் வருவார், காலை நேரத்தில் நம்ம ஆட்களுக்கு ரொமன்ஸ் மூடு ஏதுவும் வராதுங்கோ...

கடைசியாக ஆண்களுக்கும் ஒரு குறிப்பு. நீங்களும் இந்த குறிப்பை கடைப்பிடிக்கலாம்.அதன் பிறகு சிவாஜி படத்தில் வரும் ரஜினியை போல பளபளக்காலாம்.

Wednesday, September 8, 2010

தங்கமான சங்கங்கள்

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..இப்படிக்கு
ஸ்பெல்லிங்க(Spelling) தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம்
காதல் ஒன் சைடாக பண்ணினாலும்
இரண்டு சைடாக பண்ணினாலும்
கடைசியா சுசைடு (Suicide)- தான் பண்ணக்கூடாது


இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்


அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"


இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்புலிக்கு பின்னாடி போன மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..


இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க இந்த வலைப்பதிவை அப்ரூவ் பண்ணலைன்னா ( கமெண்ட்ஸ் போடலென்னா)
நான் மூடு அவுட்


இப்படிக்கு
பாசக்கார பய புள்ளை சங்கம்


குறிப்பு. இது என் நண்பர் எனக்கு அனுப்பியது.

Sunday, September 5, 2010

பண தத்துவம்

பணம்


பணத்தால் நல்ல வீடு வாங்கலாம். ஆனால் நல்ல குடும்பத்தை வாங்க முடியாது.

பணத்தால் நல்ல கடிகாரம் வாங்கலாம். ஆனால் நேரத்தை வாங்க முடியாது.பணத்தால் நல்ல பதவியை வாங்கலாம். ஆனால் உண்மையான மரியாதையை வாங்க முடியாது.பணத்தால் நல்ல மெத்தையை வாங்கலாம். ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது.
பணத்தால் நல்ல புத்தகத்தை வாங்கலாம். ஆனால் அறிவை வாங்க முடியாது.
பணத்தால் நல்ல மருந்தை வாங்கலாம். ஆனால் உடல் நலத்தை வாங்க முடியாது.

பணத்தால் நல்ல இரத்தம் வாங்கலாம். ஆனால் உயிரை வாங்க முடியாது.எல்லாமே பணத்தால் நடக்காது. பணத்தால் நமக்கு கிடைப்பது வலியும் வேதனகளும்தான். நான் இதையெல்லாம் என் சொல்கிறேன் என்றால் நான் உங்களின் தோழன் அல்லது உண்மையான நண்பன்.. அதனால் நான் உங்களின் வலிகளையும் வேதனைகளையும் எடுத்துக் கொள்கின்றேன். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்ருதான் உங்களிடம் உள்ள பணம் முழுவதையும் கேசாக எனக்குஅனுப்பவும். நான் உங்கள் கஷ்டங்களை தாங்கிக் கொள்கின்றேன். எதையும் தாங்கும் இதயம் எனக்கு.என்ன புரிந்ததா? இன்னும் எதற்கு காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சகோதரனாகிய, நண்பணாகியா நான் இதை உங்களுக்கு செய்யவில்லை என்றால் வேறு யாரு உங்களுக்கு உதவ போகிறார்கள்.


Thursday, September 2, 2010

நாங்கள் எல்லாம் படிக்காத மேதைகள்

அமெரிக்கன் நாசாவில் இருந்து விண்வெளிக்கு முதன் முதலில் விஞ்ஞானிகளை அனுப்பும் போது அவர்கள் எழுதுவதற்கு பேனாக்களை கொடுத்து அனுப்பினார்கள். விண்வெளிக்கு போன பின் தான் விண்வெளியின் ஜீரோ க்ராவிட்டியில் இந்த பேனாக்கள் எழுதுவதற்கு பயனில்லை என்று கண்டுபிடித்தார்கள். அதன் பிறகு பல விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக 12 ஆயிரம் மில்லியன் டாலர் பணம் செலவழித்து ஒரு புதிய பென் ஒன்றை கண்டுபிடித்தார்கள். அது விண்வெளியில் உட்கார்ந்து எப்படி எழுதினாலும் ஏதன் மேலும் வைத்து எழுதினாலும் எழுதக்கூடியது. இதைப் பற்றி மதுரையில் உள்ள நண்பரிடம் ஒரு டீக்கடையில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள படிக்காத ஒரு வயதான ஆள் சொன்னார். அமெரிக்கன் எல்லாம் புத்தியில்லாதவன் எதற்கு இவ்வளவு பணம் செலவலிக்கனும் பேசாம ஒர் பென்சில் எடுத்து போயிருக்கலாமே என்று ஒரு போடு போட்டாரே பாருங்கள்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog