உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 30, 2010

மகாத்மா காந்திப்பற்றிய ரப் ( Rab ) Music.

இந்த பாடலைப் பாடியவர் M.C. யோகி. ரொம்ப அருமையாக உள்ளது.மாகாத்மா காந்தி சொன்னதிலிருந்து எனக்கு பிடித்த சில வரிகள் : நான் உங்களுக்கு தீவிரவாதத்தை போதிக்க இயலாது. ஏனெனில் நான் எனக்குள்ளேயே அதனை நம்பியதில்லை. நான் ஒன்றைமட்டும் போதிக்க இயலும். அதாவது உங்கள் தலையே போனாலும் எவரிடமும் நீங்கள் தலைவணங்காதீர்கள்!இந்தவரிகளை நம் அரசியல் தலைவர்கள் படிக்க நேர்ந்தால் ஒருமுறைக்கு பல முறைப் படித்து மனதில் இருத்தி இதைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, August 28, 2010

என்ன சொல்லப் போகிறீர்கள்?

நண்பர்களே இதைப் பார்த்த பிறகு இன்னுமா குறைக் கூறிக் கொண்டுயிருக்கிறீர்கள். மாறுங்கள் நண்பர்களே மாறுங்கள். சில விஷயங்கள் சிலருக்கு மோஷமானதாக இருக்கலாம். அதே விஷயம் நமக்கு மிகவும் நல்லதாக இருக்கும். எனவே இருப்பதை வைத்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்

Thursday, August 26, 2010

இலவச ஹெல்த் டிப்ஸ்

வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும். இது மருத்துவரின் அட்வைஸ் . இதைப் பார்த்துவிட்டு வயிற்று வலி வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.பெண்கள் வாயாடிகளா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒரு உதாரணம்.


இப்போது நீங்கள் சொல்லுங்கள் . பெண்கள் வாயாடிகளா இல்லையாயென்று..

வெட்கக்கேடு ( தமிழா நீ இவ்வளவு கேவலமானவனா )

70.000 போலீஸ் பாதுகாப்போடு பய பீதியில் நடந்த விழாவுக்கு பேருதான் சுதந்திர தின விழாவா?
போபாஸ் குற்றவாளி ஆண்டர்சனை பத்திரமாக அமெரிக்கா திரும்பி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது உண்மை. ஆனால் அந்த அனுமதியை யார் அளித்தது என்று தெரியவில்லை. சொன்னது ப.சிதம்பரம் ( உள்துறை அமைச்சர்)கிழேயுள்ள விடியோ க்ளிப்பை பாருங்கள். இதை விட வெட்ககேடான விஷயம் வேறு ஏதும் இருக்க முடியாது. இதைப் பார்த்த பின் தமிழன் என்று சொல்ல வெட்க கேடாக இருக்கிறது.

Thursday, August 19, 2010

உலகத்தின் நம்பர் 1 ஹாட்டஸ்ட் போட்டோ

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவப்படையின் புதிய ஆயுதம் உலகத்திலேயே மிக காரமான மிளகாய்.(Bhut Jolokia," or "Ghost Chili ). இந்த மிளகாயை கொண்டு கண்ணீர் வெடி குண்டுகளை தாயாரித்துள்ளனர்.இந்த சில்லி இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்தில் விளைகிறது. இந்த மிளகாய் உலகதிலேயே மிகவும் காரமான மிளகாய் என்று உலக கின்னஸ் ரிகார்டால் (2007) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிளகாய் எவ்வளவு காரம் என்பதை கிழேயுள்ள படத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

Monday, August 16, 2010

உனக்கு மட்டும் இலவசம்.

எனது மனைவி அமெரிக்கா வந்த நேரத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு நாள் என் மனைவியின் ஆபிஸில், அவள் குருப்பில் உள்ள அனைவரும் "லஞ் அவுட்" போவது என முடிவு செய்து ஒரு ரெஸ்டரண்டிற்கு சென்றனர். அவள் குருப்பில் அநேக பேர் அமெரிக்கர்கள் சில இந்தியர்களும் உள்ளனர். அதில் என் மனைவிமட்டும் சைவம் மற்ற அனைவரும் அசைவம். எல்லோரும் அவரவர்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்தார்கள், என் மனைவியின் டைம் வந்த போது அவள் ப்ளையின் ரைஸும் சில வெஜிடபுளும் ஆர்டர் செய்தாள். அந்த மாநிலத்தில்( மிச்சிகன் ) உள்ளவர்களுக்கு நம் நாட்டின் வெஜிடேரியன் கான்ஸ்ப்ட் புரியாதது. எனவே எப்போதும் உணவு ஆர்டர் பண்ணும் போது நோ எக், நோ சிக்கன், நோ மீட், நோ ஃபிஷ் என்று சொல்ல வேண்டும் இல்லையென்றால் எதையாவது போட்டு எடுத்து வந்து விடுவார்கள் . ப்யூர் வெஜிடேரியன் என்றால் அட்லிஸ்ட் நியுயார்க்கில் உள்ளவர்களோ கொஞ்சம் புரிந்து கொள்வார்கள். இங்கு உள்ளவர்களுக்கோ எல்லாம் நோ சொல்ல வேண்டும்.எல்லோருக்கும் நல்ல பசி உணவுக்காக காத்திருந்தனர். முக்கால் மணி நேரம் கழித்து உணவு வந்தது. என் மனைவிக்கு பறிமாறும் போது ரைஸுக்கு மேல் ஒரு பெரிய சிக்கன் வைத்து இருந்தார்கள். என் மனைவியோ சர்வரிடம் நான் ரைஸும் வெஜிடபுளும்தான் ஆர்டர் பண்ணினேன் நீ தவறாக நான் வேறு யாருக்கோ உள்ளதை தவறாக எடுத்து வந்து விட்டாய் என்று கேட்டாள். அதற்கு அந்த சர்வரோ மிகுந்த புன்னகையுடன் உங்களுக்காக நாந்தான் எக்ஸ்ட்ரா சிக்கன் வைத்துளேன் இது என்னுடைய காம்பிளிமெண்ட் என்று சொன்னார். எனது மனைவியும் மற்றவர்களும் பசியின் மயக்கதில் அந்த சர்வரை சத்தம் போட்டனர். அந்த சத்தத்தை கேட்ட மேனேஜர் உடனே விரைந்து வந்து விசாரித்தபோதுதான் புரிந்தது அந்த சர்வர் என் மனைவியிடம் பணம் அதிக அளவில் இல்லையென்று எண்ணி இரக்கப் பட்டுதான் அந்த சிக்கனை இலவசமாக கொடுத்துள்ளார் என்று எல்லோருக்கும் புரிய வந்தது. எல்லோரும் சிரித்தபடி பணம் இங்கு மேட்டர் அல்ல மத வழக்கப்படி இந்த பெண் சைவம் மட்டும்தான் சாப்பிடும் என்று விளக்கினர். கடைசியில் என் மனைவி ஒரு குக்கியையுன் தண்ணிரையும் மட்டும் குடித்து விட்டு வந்தார். இந்த மிஸ் அண்டர்ஸடண்டிர்க்காக மொத்த பில் தொகையில் 25 சதவிகிதம் தள்ளுபடி கொடுத்துவிட்டார். என் மனைவியைத் தவிர எல்லோருக்கும் மிகுந்த கொண்டாடம். இங்கு எல்லோரும் குருப்பாக போனாலும் அவரவர் சாப்பிட்டதுக்கு அவரவர்தான் பணம் கொடுப்பார்கள். நாம் இந்தியர்கள் மட்டும் தனி குருப்பாக போனால் எல்லோரும் பணம் நாந்தான் நாந்தான் கொடுப்பேன் என்று சண்டைப் போடுவார்கள் இந்த பழக்கத்தை அமெரிக்கரிடம் எதிர்பார்க்க முடியாது.

Sunday, August 15, 2010

ஆண்கள் ஏன் பத்திரிக்கையின் அட்வைஸ் காலத்திற்கு பதில் எழுவது இல்லை.

நம் தமிழ் வார இதழ்களில் வரும் அட்வைஸ் பக்கத்தை படித்ததால் எழுந்த ஒரு கற்பனை. படித்து விட்டு என்னை திட்டாதிர்கள்.நாம் ஏதாவது தமிழ் வாரப் பத்திரிக்கைகளை படித்தால் கண்டிப்பாக ஒரு அட்வைஸ் பக்கம் (அந்தரங்கம், டைரி, பாட்டியின் அட்வைஸ்) இருக்கும். அதில் அநேகமாக பெண்கள் தங்களுக்குரிய பிரச்சனைகப் பகிர்ந்து அதற்கு அட்வைஸ்யை எதிர் பார்ப்பார்கள். அதற்கு அநேகமாக பெண் எழுத்தாளர்கள் , அறிஞர்கள் அல்லது டாக்டர்கள் மட்டுமே பதில் எழுதுவார்கள். நீங்கள் எப்போதவது யோசிச்சீருக்கிறீற்களா ஏன் ஆண் எழுத்தாளர்கள் , அறிஞர்கள் அல்லது டாக்டர்கள் பதில் எழுதுவதில்லை என்று? உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால் பெண்களே தொடர்ந்து கிழேயுள்ளதை படியுங்கள் உங்கள் அறிவுக் கண்கள் திறக்கும்.


ஒரு பெண் தன் பிரச்சனையை எழுதி அதற்கு ஆண் அறிஞர் Maduraitamilguy( இந்தகாலத்தில் நம்பளை நாமே அறிஞர் என்று பில்டப் கொடுத்துகொள்ள வேண்டும்) பதில் எழுதினால் எப்படியிருக்கும் என்பதை பார்ப்போம்.ஐயா Maduraitamilguy அவர்களே கடந்த இருமாதங்களாக எனது குடும்பத்தில் ஒரு திராத பிரச்சனையிருக்கிறது அதை நினைத்து எனக்கு இராப்பகலாக தூக்கம் ஏதுவுமில்லாமலும் வேலையில் முழுகவனம் செலுத்த முடியாமலும் தவிக்கின்றேன் . என்னை உங்கள் அன்பு தங்கையாக ஏற்று
அதற்கு ஒரு நல்ல பதில் தருவிர்கள் என்ற முழு நம்பிக்கையோடு இதை உங்களுக்கு எழுதுகிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை நானும் எனது கணவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம்.ஒரு நாள் எனது கணவர் உடல் நலமில்லையென்று வேலைக்கு போகமல் ஒரு நாள் லீவு எடுத்துக் கொண்டார். எனக்கோ வேலைக்க்கு செல்லவேண்டிய அவசியம் அதனால் நான் எனது காரை எடுத்து சென்றேன். ஒரு மைல்தூரம் போனதும் கார் நின்று போய்விட்டது. எங்கள் வீடு உள்ள ஏரியாவோ ந்யூ டேவலப்மெண்ட் ஏரியா எனவே ஆள் நடமாட்டமோ இல்லை. ஆட்டோ ஸ்டாண்டோயில்லை. எனவே கணவருக்கு போன் செய்தேன் அவர் லைனோ பிசியாக இருந்தது. எனவே வேண்டா வெறுப்பாக ஒரு பொடிநடையாக நடந்து வீட்டிற்கு சென்றால் அங்கே எனது கணவரும் பக்கது விட்டு காலேஜ் பெண்ணும்( 20 வயது) அலங்கோலமாக இருந்தனர். இருவரும் தங்களுக்குள் ஆறுமாதமாக தொடர்பு இருப்பாதாக உண்மைய ஒத்துக் கொண்டனர். நானும் என் கணவரிடம் ஏதோதவறு பண்ணிவிட்டிர்கள் .நாம் இருவரும் குடும்ப மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம் என்று சொன்னால் அதை மறுத்து வருகிறார்.எனக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு நீங்கள்தான் நான் என்ன செய்ய வேண்டுமென்று ஒரு நல்ல பதிலை தருவீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கின்றேன், ப்ளீஸ் சிக்கிரம் பதில் எழுதுங்கள்.


அன்புடன்,

ஷாலினி.


அன்புள்ள ஷாலினி உங்கள் கடிதத்தை மிகவும் வெகு கவனதுடன் படித்து பார்த்தேன். பிரச்சனை உங்கள் கணவரிடம் இல்லை. உங்களிடம் தான் உள்ளது..கார் ஒட்ட கற்றுக்கொண்டால் மட்டும் போதாது அதில் பிரச்சனை வந்தால் எப்படி சமாளிக்க வேண்டுமென்று கற்றுக் கொள்ள வேண்டும்.. முதலில் கார் நின்றுவிட்டால் அதில் தேவையான அளவு பெட்ரோல் இருக்கிறதா என்று பார்க்க வேண்ட்டும். பெட்ரோல் இருந்தால் மட்டும் போதாது அதில் தேவையான் ஆயில் சேர்த்தோமா என்று சரி பார்க்க வேண்டும். மேலும் எல்லா வையரிங்கையும் லூசாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அல்லது காரின் புகைப்போகும் பைப்பில் ஏதாவது அடைப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் .இதையெல்லாம் விட்டுவிட்டு கணவரை குறை கூறுவதில் அர்த்தமில்லை. கார் ஒடவில்லை என்றால் ஏன் கணவருக்கு போன் செய்கிறிர்கள் நீங்கள் மெக்கானிக்கு அல்லவா போன் செய்து இருக்க வேண்டும். அல்லது வீட்டிற்கு போகாமல் புத்திசாலித்தனமாக மெக்கானிக் கடைக்கு சென்றுயிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது.எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஏன் நீங்கள் உங்க கணவரை குடும்ப மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல விரும்புகிறீர்கள். நீங்கள்தான் ஒரு நல்ல மெக்கானிக்கிடம் சென்று நிறைய கற்று கொள்ள வேண்டும்.உங்கள் கணவர் அந்த காலேஜ் பெண்ணிடம் தனிமையில் இருக்கும் போது ஏன் அவர்களை தொந்தரவு செய்கிறீர்கள். கணவர் அல்லது மனைவியாகட்டும் அடுத்தவரின் ப்ரைவேஸியில் தலையிடாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை பாதை இன்பமாக இருக்கும்.வாழ்க்கை வளமுடன் இருக்க இந்த Maduraitamilguy யின் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.அன்புடன்,

Maduraitamilguy

அட்வைஸ் திலகம்குறிப்பு : இந்த கடினவுலகில் நீங்களோ வேலைக்கு சென்று கடினமாக உழைத்து டையடாக வரும் போது கணவர் உங்களை தொந்தரவு பண்ணாமல் இருந்தால் ஒரு கும்பிடு போட்டு நல்லா ரெஸ்ட் எடுங்கள்,

Monday, August 9, 2010

உன்னால் முடியும் தம்பி 3

அரையுடம்பு மனிதன்.


அமெரிக்க மனிதர் கென்னி ஈஸ்டர் பிறக்கும் போது ஒரு விதமான க்யூர் பண்ண முடியாத வியாதியினால் பிறந்ததால் டாக்டர்கள் வேற வழியில்லாததால் அவரின் இரண்டு கால்களை கட் பண்ணி எடுத்துவிட்டனர்.


அதனால் அவர் ஒன்றும் கவலைப்படவில்லை. ஒரு முழுமனிதன் என்ன பண்ணுவானோ அதைவிட ஒரு படி மேலே எல்லாம் செய்கிறான். கிழேயுள்ள விடியோ நம் அனைவருக்கும் ஒரு சைலண்ட் பாடமாகும்.


 
அடுத்தவரைப் பார்த்து அவரிடம் நல்ல செருப்பு, ஷு, பைக் அல்லது கார் இருக்கிறது என்று பொறமைக் கொண்டு கவலைப்பட வேண்டாம். இந்த கென்னியை பார்த்து வாழ்க்கைப் பாடத்தை கற்று கொள்ளுங்கள்.

Friday, August 6, 2010

உன்னால் முடியும் தம்பி பாகம் 2

முதலில் நாம் சகோதரி ஜெஸிகாவைப் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த வலைப்பக்கதில் சகோதரர் ( Nick Vujicic )


நிக்கைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நாமோ நல்ல கை கால்களுடன் பிறந்த நாமோ கடவுளை பெற்றோற்களை, உறவினர்களை, நண்பர்களை, அல்லது தலைவைர்களையோ குறைக் கூறிக்கொண்டு அவர்கள் இப்படி பண்ணவில்லை அல்லது அப்படி பண்ணவில்லை அல்லது இப்படி பண்ணியிருந்தால் அல்லது இப்படி உதவியிருந்தால் நான் வாழ்க்கையில் நலமாகயிருந்திருப்பேன் என்று புலம்பிக் கொண்டிருப்போம்.பிறக்கும் போதே இரண்டு கைகள் மட்டுமில்லாமல் இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்தார் நிக் வஜுக் ,வாழ்க்கையில் அவருக்கு தேவையான அன்றட

வேலைகளை நம்மைப்போலவே அவரே செய்துகொண்டார். அது மட்டுமில்லாமல் வணிகத் துறையில் பட்டமும் பெற்று வணிகத்துறையில் நல்ல வேளையிலும் உள்ளார். உலகின் நம்பர் ஒன் மோட்டிவேஷன் பேச்சாளர்களில் இவரும் ஒருவர். நன்றாக நிச்சல் அடிக்கவும். கோல்ப் விளையாடவும் தெரியும்.நிக்கின் விடாமுயற்சிக்கும், திறைமைக்கும் நாம் இவரையும் ஜெஸிக்காவை வணங்கியது போல இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்தி

இவரையும் நமது மானசீக குருவாக ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.


ஜெஸிக்காவையும், நிக்கையும் விட கடவுள் நமக்கு எல்லாவற்றையும் அள்ளித் தந்துயிருக்கிறார். எனவே நம் இனிய சகோதர சகோதரிகளே நடிகர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் போகுவதை நிப்பாட்டி விட்டு வாழ்க்கையில் முன்னேற வழி பாருங்கள்.. வெற்றி நமது பக்கம்தான்....

Thursday, August 5, 2010

உன்னால் முடியும் தம்பி

நல்ல கைகால் இருந்தும், நல்ல படிப்பு இருந்தும் பிறறைக் குறை கூறிக் கொண்டு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையை வினடித்துகொண்டிருக்கும் நம் தமிழ்கத்து சகோதர சகோதிரிகள்.இந்த சகோதரி ஜெஸிகா காக்ஸைப் பற்றி தெரிந்து கொண்டால் எதற்கும் கவலைப்பாடாமல், யாரையும் குறைச்சொல்லாமல், முயற்சி செய்தால் வாழ்க்கையில் வசந்தத்தை தேடிச்செல்லாம்.


ஜெஸிகா பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தார். ஆனால் அவரின் தாயாரோ எந்தவித அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் குழந்தையை வளர்த்தார்.

அந்த குழந்தை ஜெஸிகாவோ இப்போது மனோத்துவ பட்டாதாரி, அவளுக்கோ அவளின் கால்தான் கை மாதிரி. காலை வைத்து நன்றாக எழுதவும், டைப்பு அடிக்கவும், தலை வாரவும் முடியும்.டைப்போ நிமிடத்திற்கு 25 வார்த்தைகளை அடிக்கமுடியும்.அவளாள் காலைவைத்து நன்றாக கார் மற்றும் விமானம் ஒட்டமுடியும். அதற்கான முறையான லைசன்ஷ்ம் முறைப்படி எடுத்துள்ளார்.( நம் தமிழகத்து மக்களைப் போல லஞ்சம் கொடுத்து வாங்கியதுல்ல) .இதுமட்டுமல்லாமல் நன்றாக நடனமும் ஆடக்கூடியவர்.அமெரிகாவிலே முதன் முதலில் டைக்குவாண்டோ என்னும் தற்காப்பு பயிற்சியில் முதன் முதலில் இரண்டு ப்ளாக் பெல்ட் வாங்கிய கையில்லாத பெண்மணி இவர்தான்.அவருக்கும் அவரது விடாமுயற்சிக்கும், திறைமைக்கும் நாம் இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்தி அவரை நமது மானசீக குருவாக ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.கிழே அவரது புகைப் படங்களும் , அவரைப் பற்றிய விடியோ க்ளிப்புகளும் உள்ளன........அவர் பிறந்தது அமெரிக்காவிலுள்ள அரிஸோனா மாநிலத்திலுள்ள டஸ்கான் என்னும் ஊர் ஆகும்.
நீச்சல்குளம்

உலகத்திலே அதிக கூட்டமுள்ள அலைகள் அடிக்கும் நீச்சல்குளம்.  (World's Crowded Wave Pool ) இது சம்மர்லேண்ட், டோக்கியோ ஜப்பானில் உள்ளது.


மேலேயுள்ள படத்தை உங்கள் இரண்டு கண்களால் பார்த்தும் நம்ப முடியவில்லையென்றால் , கிழேயுள்ள விடியோவை க்ளிக் செய்து பார்க்கவும்.கோடைக்காலத்தில் ஒரு பொட்டு அளவு தண்ணிரை பார்க்கமுடியாத அளவிற்கு கூட்டம் காணப்படும்.

Tuesday, August 3, 2010

உலகின் நம்பர் 1 கொடுரமான பெற்றோர்கள்

இந்த பாம்பு வேண்டுமானால் அவர்கள் வளர்ப்பு அனிமலாக இருக்காலாம் அல்லது விஷம் எடுத்த பாம்பாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விளையாட்டு கொடுரமானது மேலும் வன்மையாக கண்டிக்க கூடியது.


Monday, August 2, 2010

தமிழக அரசு

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog