நல்ல கை கால் இருந்தும், நல்ல படிப்பு இருந்தும் பிறரைக் குறை கூறிக் கொண்டு,
வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையை வீண் அடித்துக் கொண்டிருக்கும் நம்
தமிழகத்துச் சகோதர சகோதரிகள்.இந்த சகோதரி ஜெஸிகா காக்ஸைப் பற்றித் தெரிந்து
கொண்டால் எதற்கும் கவலைப்படாமல், யாரையும் குறைசொல்லாமல், முயற்சி
செய்தால் வாழ்க்கையில் வசந்தத்தை தேடிச் செல்லாம்.
ஜெஸிகா பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தார். ஆனால் அவரின்
தாயாரோ எந்தவித அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் குழந்தையை வளர்த்தார்.
அந்த குழந்தை ஜெஸிகாவோ இப்போது மனோத்துவ பட்டதாரி, அவளுக்கோ அவளின்
கால்தான் கை மாதிரி. காலை வைத்து நன்றாக எழுதவும், டைப்பு அடிக்கவும், தலை
வாரவும் முடியும்.டைப்போ நிமிடத்திற்கு 25 வார்த்தைகளை
அடிக்கமுடியும்.அவளாள் காலைவைத்து நன்றாக கார் மற்றும் விமானம்
ஒட்டமுடியும். அதற்கான முறையான லைசன்ஷ்ம் முறைப்படி எடுத்துள்ளார்.( நம்
தமிழகத்து மக்களைப் போல லஞ்சம் கொடுத்து வாங்கியதில்ல) .இதுமட்டுமல்லாமல்
நன்றாக நடனமும் ஆடக்கூடியவர்.அமெரிக்காவிலே முதன் முதலில் டைக்குவாண்டோ
என்னும் தற்காப்பு பயிற்சியில் முதன் முதலில் இரண்டு ப்ளாக் பெல்ட் வாங்கிய
கையில்லாத பெண்மணி இவர்தான்.
அவருக்கும் அவரது விடாமுயற்சிக்கும், திறமைக்கும் நாம் இரு கரம் கூப்பி
வணங்கி வாழ்த்தி அவரை நமது மானசீக குருவாக ஏற்று வாழ்க்கையில் வெற்றி
பெறுவோம்.
கீழே அவரது புகைப் படங்களும் , அவரைப் பற்றிய விடியோ க்ளிப்புகளும்
உள்ளன........அவர் பிறந்தது அமெரிக்காவிலுள்ள அரிஸோனா மாநிலத்திலுள்ள
டஸ்கான் என்னும் ஊர் ஆகும்.
|
மிக அருமையான பதிவு, படித்தவர்களால் இந்த நம்பிக்கை நட்சத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும் அதனால் தான் ஒருவர் கூட பதிவிற்கு பதில் போடவில்லை போலும்....
ReplyDeleteதொடரட்டும் உங்களின் நல்ல பணி
மிக அருமையான பதிவு
ReplyDeleteUseful informative to all the world to all of us.
ReplyDeleteபெற்றோர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் ... அவர்கள்தான் அவளை திறமையான பெண்ணாக செதுக்கி இருக்கிறார்கள்.. நம்முடைய நாட்டில் என்றால் இந்நேரம் மனநலம் பாதித்த பெண்ணாக மாற்றி இருப்பார்கள்....
ReplyDeletehttps://www.scientificjudgment.com/