Monday, August 16, 2010

எனது மனைவி அமெரிக்கா வந்த நேரத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு நாள் என் மனைவியின் அலுவலகத்தில், அவள் குருப்பில் உள்ள அனைவரும் "லஞ் அவுட்" போவது என முடிவு செய்து ஒரு ரெஸ்டரண்டிற்கு சென்றனர். அவள் குருப்பில் அநேக பேர் அமெரிக்கர்கள் சில இந்தியர்களும் உள்ளனர். அதில் என் மனைவிமட்டும் சைவம் மற்ற அனைவரும் அசைவம். எல்லோரும் அவரவர்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்தார்கள், என் மனைவியின் நேரம் வந்த போது அவள் பளையின் ரைஸும் சில வெஜிடபுளும் ஆர்டர் செய்தாள். அந்த மாநிலத்தில்( மிச்சிகன் ) உள்ளவர்களுக்கு நம் நாட்டின் வெஜிடேரியன் கான்ஸ்ப்ட் புரியாது. எனவே எப்போதும் உணவு ஆர்டர் பண்ணும் போது நோ எக், நோ சிக்கன, நோ மீட், நோ ஃபிஷ் என்று சொல்ல வேண்டும் இல்லையென்றால் எதையாவது போட்டு எடுத்து வந்து விடுவார்கள் . ப்யூர் வெஜிடேரியன் என்றால் அட்லிஸ்ட் நியூயார்க்கில் உள்ளவர்களோ கொஞ்சம் புரிந்து கொள்வார்கள். இங்கு உள்ளவர்களுக்கோ எல்லாம் நோ சொல்ல வேண்டும்.
 

 
எல்லோருக்கும் நல்ல பசி உணவுக்காகக் காத்திருந்தனர். முக்கால் மணி நேரம் கழித்து உணவு வந்தது. என் மனைவிக்கு பரிமாறும் போது ரைஸுக்கு மேல் ஒரு பெரிய சிக்கன வைத்து இருந்தார்கள். என் மனைவியோ சர்வரிடம் நான் ரைஸும் வெஜிடபுளும்தான் ஆர்டர் பண்ணினேன் நீ தவறாக வேறு யாருக்கோ உள்ளதை  எடுத்து வந்து விட்டாய் என்று கேட்டாள். அதற்கு அந்த சர்வரோ மிகுந்த புன்னகையுடன் உங்களுக்காக நான்தான் எக்ஸ்ட்ரா சிக்கன வைத்துளேன் இது என்னுடைய காம்பிளிமெண்ட் என்று சொன்னார். எனது மனைவியும் மற்றவர்களும் பசியின் மயக்கத்தில் அந்த சர்வரை சத்தம் போட்டனர். அந்த சத்தத்தைக் கேட்ட மேனேஜர் உடனே விரைந்து வந்து விசாரித்தபோதுதான் புரிந்தது அந்த சர்வர் என் மனைவியிடம் பணம் அதிக அளவில் இல்லையென்று எண்ணி இரக்கப் பட்டுதான் அந்த சிக்கனை இலவசமாகக் கொடுத்துள்ளார் என்று எல்லோருக்கும் புரிய வந்தது. எல்லோரும் சிரித்தபடி பணம் இங்கு மேட்டர் அல்ல மத வழக்கப்படி இந்த பெண் சைவம் மட்டும்தான் சாப்பிடும் என்று விளக்கினர்.


கடைசியில் என் மனைவி ஒரு குக்கியையும் தண்ணீரையும் மட்டும் குடித்து விட்டு வந்தார். இந்த மிஸ் அண்டர்ஸடண்டிர்க்காக மொத்த பில தொகையில் 25 சதவிகிதம் தள்ளுபடி கொடுத்துவிட்டார். என் மனைவியைத் தவிர எல்லோருக்கும் மிகுந்த கொண்டாட்டம். இங்கு எல்லோரும் குருப்பாக போனாலும் அவரவர் சாப்பிட்டதுக்கு அவரவர்தான் பணம் கொடுப்பார்கள். நாம் இந்தியர்கள் மட்டும் தனி குருப்பாக போனால் எல்லோரும் பணம் நான்தான் நாந்தான் கொடுப்பேன் என்று சண்டைப் போடுவார்கள் இந்த பழக்கத்தை அமெரிக்கரிடம் எதிர்பார்க்க முடியாது.


அன்புடன்
மதுரைத்தமிழன்
16 Aug 2010

1 comments:

  1. பாவம் உங்கள் மனைவி...சரி ஏதாவது குகீஸ் ஆவது சாப்டாங்களே..அண்ணி க்கு வாழ்த்துக்கள்..:)))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.