Wednesday, February 9, 2011

எனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...

முதல் இரவு என்பது கல்யாணம் ஆன தம்பதிகள் எல்லோருக்கும் ஒரு த்ரில் + டையர்டு ஆனா இரவாகத்தான் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல....

முதல் இரவுக்கு முதல் நாள் மாலைப் பொழுதே நண்பர்கள் எல்லோரும் குழந்தைகளுடன் மண்டபத்திற்கு வந்து இருந்தனர். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். நல்ல நேரம் தொடங்கியபோது எல்லோரும் எங்களை வாழ்த்த தொடங்கினர். எங்களுடைய விழாவிற்கு வர முடியாதவர்கள் போன் மூலம் வாழ்த்தினர்.அன்று இரவு ரொம்பவும் டையர்டாக இருந்தது.அதனால் அடுத்த நாள் வெகு நேரம் தூங்கி பகலில்தான் எழுந்தோம். பெரியவர்களின் அறிவுரைப்படி கோயிலுக்கு சென்று வாழ்க்கைய ஆரம்பித்தால் பின் வரும் நாள்கள் எல்லாம் நன்றாக இருக்கும் என்பதால் அதன்படி கோயிலுக்கு சென்றோம். கடவுளூம் எங்களை ஆசிவதித்தார்.எங்களுடன் வந்த நண்பர்களும் உறவினர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து உணவு அருந்தி செல்லும் போது லேட் ஈவினிங் ஆகிவிட்டது. இந்த இரவை மிகவும் அமைதியாக கொண்டாட வேண்டும் என்று மிகவும் வண்ண கனவுகளுடனும் கற்பனைகளுடன் இருந்த எங்களுக்கு ஒரே களைப்பு. அதனால் உடல் களைப்பு போக நல்ல சுடு நீரில் குளித்து, வீட்டில் நிறைய ஊதுபத்தி ஏற்றி நாங்கள் முவரும்( நானும் என் மனைவியும் என் குழந்தையும் ) நன்றாக உறங்கி போனோம்.என்ன மக்கா நீங்க தலைப்பை பார்த்து இங்கேவந்து நிறைய எதிர்பார்த்து வந்து ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. நான் இங்கு முதல் இரவு என குறிப்பிட வந்ததது ஜனவரி 1' 2011 புத்தாண்டு நைட்டை தான் . விழா என்று நான் கூறிப்பிட்டது என் கல்யாண விழா அல்ல New Years Eve தான். மண்டபம் என்று சொன்னது என் வீட்டையும் , நண்பர்கள் வாழ்த்தியது புத்தாண்டு வாழ்த்துக்கள் தான்.

ஆசை தோசை அப்பளா வடை.....ஹா..ஹா.......ஹா..........கோவிச்சுகதிங்க மக்கா.......உங்கள் கோபம் தீர ஒரு நல்ல ஜோக்....

ஹனிமுன்ல இருந்து திரும்பிவந்த பொண்ணு வந்த உடனே அம்மாவுக்கு போன் பண்ணினா..அம்மா கேட்டாங்க ஹனிமுன் எப்படி இருந்துச்சும்மா என்று? அதற்கு அந்த பொண் சொன்னாள் ரொம்ப ரொமண்ட்டிக்கா சந்தோஷம்மா இருந்துச்சும்மா என்று சொல்லிக் கொண்டு வந்தவள் திடீரென்று தேம்பி தேம்பி அழுகத் தொடங்கியவாறு சொன்னாள். ஹனிமுன்ல இருந்து திரும்பி வந்ததுல்ல இருந்து ரொம்ப அசிங்கமா பேசுகிறார் அம்மா நான் இதற்கு முன் இந்த மாதிரி நாலு லெட்டர் வார்த்தைகளை கேட்டது கூட இல்லமா. அவர் அதை திரும்ப திரும்ப சொல்கிறார் அம்மா...தயவு செய்து என்னை அப்பாவிடம் சொல்லி கூட்டி போம்மா என்றாள்.

அதற்கு அவள் அம்மா முதலில் அழுகையை நிறுத்தி அமைதியாய் இரு அப்புறம் சொல்லு அப்படி என்னம்மா சொன்னார் சொல்லம்மா என்னிடம் என்றாள்.

அந்த பெண் அம்மா அதை என் வாயால் கேட்காதீங்க சொல்ல ரொம அசிங்கமா இருக்கும்மா..முதலில் என்னை வந்து கூப்பிட்டுபோம்மா என்றாள்,

செல்லம் நான் வந்து கண்டிப்பா கூட்டி போகிறேன்..இப்ப சொல்லம்மா அப்படி என்ன அவர் அசிங்கமா நாலு லெட்டர் கெட்ட வார்த்தையை சொன்னார் என்று கேட்டாள்.

அதற்கு அந்த பெண் அழுதவாறே சொன்னாள் Oh, அம்மா... அந்த வார்த்தைகள் வந்து DUST, WASH, IRON, COOK...!"

என்ன மீண்டும் ஏமாந்திங்களா ஏதோ அடல்ட் ஜோக் சொல்லப் போறேன்ணு.....அதுக்கு நம்ம ப்ளாக்ல இடம் இல்ல..

26 comments:

 1. ரொம்ப கோபமா வருதே. ஏதாச்சும் சொல்லியாகணுமே.. சரி ,

  " பி கேர்புல்.. ஏ டூ செட் கேர்புல்.. " ( நான் என்னைய சொன்னேன் )

  ReplyDelete
 2. ஆமா அதென்ன அசிங்க புடிச்ச நாலெழுத்து ( DUST, WASH, IRON, COOK ) பெண்களுக்கு பிடிக்காதே.. பெண்கள் சார்பா கண்டனங்கள்..

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 3. elllaaraiyum polaththan ungkal first nightum... athaangka new yearai sonnen...

  ReplyDelete
 4. ஒருவேளை நீங்க உண்மையாவே முதலிரவு அனுபவத்தை எழுதியிருந்தா உங்களுக்கெல்லாம் விவஸ்தையே இல்லையான்னு திட்டுற மொத ஆள் நானா தான் இருந்திருப்பேன்... இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக இப்பொழுதும் கோபம் தான்... எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

  நகைச்சுவையாய் எழுத, நையாண்டி செய்ய நம்மைச் சுற்றி இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன...

  ReplyDelete
 5. ////ஒருவேளை நீங்க உண்மையாவே முதலிரவு அனுபவத்தை எழுதியிருந்தா உங்களுக்கெல்லாம் விவஸ்தையே இல்லையான்னு திட்டுற மொத ஆள் நானா தான் இருந்திருப்பேன்... இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக இப்பொழுதும் கோபம் தான்... எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்...////

  தம்பி பிரபாகரனுக்கு உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல...என் தலைப்பில் நான் மிகத் தெளிவாக முதல் இரவு என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் முதலிரவு என்று நான் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். படிக்கும் போது அவசரப் பட வேண்டாம் நண்பரே!!!!!!இப்போது உங்கள் கோபம் தணிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

  ///நகைச்சுவையாய் எழுத, நையாண்டி செய்ய நம்மைச் சுற்றி இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன///
  நீங்கள் சொல்வது சரிதான்....ஆனால் என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத்தானே நான் எழுத முடியும்.

  தம்பி பிரபாகாரா உங்களிடம் நான் ஓன்றை பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன். நான் நம் தமிழ் மக்களின் டேஸ்டை அறிய விரும்பிதான் இந்த பதிவை போட்டேன். நான் எவ்வளவோ நல்ல பதிவு போட்டும் அதற்கு கிடைக்காத ஹிட்டு இந்த பதிவிற்கு அதிகம் கிடைத்தது.தமிழ்மணத்தில் இந்த பதிவு போட்ட நாள் என் பதிவு ஆறாவது இடத்தில் வந்தது.
  தமிழ் மக்களின் டேஸ்டை நான் என்ன வென்று சொல்வது?????????

  மீண்டும் என் பக்கத்திற்கு நீங்கள் வந்தால் http://avargal-unmaigal.blogspot.com/2010/08/blog-post_3727.html இந்த பதிவை பாருங்கள்.
  உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி

  ReplyDelete
 6. ஆனந்தி மேடம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. எந்த பதிவை படித்தாலும் அதை முழுவதுமாக படித்து விட்டு கமெண்ட்ஸ் எழுதுங்கள். தலைப்பை மட்டும் படித்து விட்டு கமெண்ட்ஸ் எழுத வேண்டாம். நன்றி( நீங்கள் ரொம்பவும் பிஸியானவர் என்றும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 அல்லது 20 ப்ளாக்கிற்கு சென்று படித்து பதில் எழுதுகிறிர்கள் என்றும் தெரியும் ஆனால் நீங்கள் எழுதும் பதிலில் தவறுகள் வந்துவிடக்கூடாது என்றுதான் நான் இந்த வேண்டுகோளை விடுவிக்கிறேன். நான் சொன்னது தவறு என்றால் மன்னிக்கவும். வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. இம்மாந்தாக்கம் இங்கு தேவையில்லை என்பது என் கருத்து.

   Delete
  2. அவர் எனது தோழி அதனால்தான் இப்படி ஒரு விளக்கம். அவர் எப்போது தவறாக எடுத்து கொள்ளமாட்டார். என்னை ப்ரிந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் நாங்கள் நண்பர்கள்தான்

   Delete
  3. நோ கமெண்ட்ஸ் :)

   Delete
 7. சி.பி செந்தில் குமார் சார் அவர்களுக்கு என் தளத்திற்கு வருகை தந்ததற்கும் கமெண்ட் வழங்கியதற்கும் நன்றிகள். நேரம் கிடைத்தால் மீண்டும் வருமாறு அழைக்கிறேன்
  //////cheating post ha ha ha ////
  இல்ல சார் சூப்பர் ஹிட் போஸ்ட் சார் ஹ...ஹா....ஹா.........

  ReplyDelete
 8. நான் இத ஒத்துக்க மாட்டேன் நாட்டமா தீர்ப்ப மாத்தி சொல்லு.

  ReplyDelete
 9. முதல் இரவு - முதலிரவு ன்னு மறுமொழிலே சொல்லி இருக்கிங்களே ! - தலைப்புல FIRST NIGHT னு சொன்னதற்கு என்ன பொருளாம். நான் மதுரையில் தான் வசிக்கிறேன்

  ReplyDelete
 10. ஹனிமூன் ஜோக் 90 விழுக்காடு பெண்கள் ,வாழ்க்கையில் உதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

  ReplyDelete
 11. ரூம் போட்டு யோசிபீங்களோ

  ReplyDelete
 12. ஹி..ஹி.. நாங்களும் தலைப்பினை கண்டவுடன் ஜொல்லு வுடுவோம்ன்னு பார்த்தீகளாக்கும்,, அதான் இல்லை..!

  நல்லதொரு எதிர்பார்ப்பினை விளைக்கும் பதிவு

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவிர்கும் கருத்திற்கும் நன்றி
   ///நல்லதொரு எதிர்பார்ப்பினை விளைக்கும் பதிவு///
   மிக மிக உண்மை.....

   Delete
 13. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete
 14. வாவ் நைஸ் ஜோக் . கீப் இட் அப் ..........
  பாய்
  சுபா Puthiya Thalaimurai

  ReplyDelete
 15. Good Joke. I send this link to my friends.

  ReplyDelete
 16. இத படிச்சி time waste பண்னதுக்கு Vijay படம் பார்க்கலாம்

  ReplyDelete
 17. முதல்
  முறையாக உங்கள் பக்கத்திற்கு வருகிறேன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே
  வந்தேன் பாப்புலர் போஸ்டில் டாப்புல எடுத்த உடனே இது போன்ற ஒரு தலைப்பில்
  செய்தியா? என்று தவறாக நினைத்தேன் என்ன இது இப்படி ஒரு தலைப்பு என்னவாக
  இருந்தாலும் சரி படித்துவிட்டு சண்டை போடலாம் என நினைத்தேன். சின்ன
  வேண்டுகோள் நான் முதல் முறையாக தான் வந்தேன் வந்த உடனே ஒரு நொடி தவறாக
  நினைத்தேன் ஒரு வேளை நான் அதை படிக்காமல் விட்டிருந்தால் தவறாகவே
  நினைத்திருப்பேன் இல்லையா என்னைப் போல் பலர் இது போல் தவறாக நினைக்க
  வாய்ப்புண்டு அதனால் இது போன்று தலைப்பு வைக்க சற்று யோசிக்கலாம் என்பது
  தாழ்மையான கருத்து.

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.