உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, August 31, 2014

ஸ்டாலினின் பகுத்தறிவு கொள்கையில் மாற்றம் ஏன்?

 
avargal unmaigal
ஸ்டாலினின் பகுத்தறிவு கொள்கையில் மாற்றம் ஏன்?விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருந்தார். இது பலரின் புருவத்தை சற்று தூக்க வைத்திருக்கிறது


Saturday, August 30, 2014

தமிழக காங்கிராஸாக மாறி வருகிறதா திமுக?அதிமுகவிற்கு சரிநிகராக திகழ்ந்து இருந்த திமுக நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகியும் அதன் தோல்விக்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறது.ஊழல் வழக்குகளில் அதன் தலைவர்கள் ஒவ்வொருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை போடப்படுகிறது. ஜாமீனும் வாங்கப்படுகிறது. எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் எந்த கட்சியும் அதிக இடங்களை கேட்கும் அளவுக்கு அதன் நிலை படுமோசம்.


ஸ்டாலினின் மானம் காக்க கலைஞர் எடுத்த நல்ல முடிவு.????


ஸ்டாலினின் மானம் காக்க கலைஞர் எடுத்த நல்ல முடிவு.????செய்திகளும் நக்கல்களும்....


Friday, August 29, 2014

இவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்


pஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்


Thursday, August 28, 2014

விஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!
இந்த பதிவை எழுதியவர் சுபரஜா ஸ்ரீதரன்  அவரின் அனுமதியுடன் இங்கு பகிர்கிறேன்1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.4.விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் - சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.1.நேத்து ராத்‌த்தீரி அம்மா.

2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.இதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை.டிஸ்கி : இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும் - அவசரம் - Share now to save the kids

நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguyஅன்புடன்

மதுரைத்தமிழன்

மெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க!?

 


கொஞ்சம் அரசியல் , கொஞ்சம் விஜய்டிவி ,கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் அட்வைஸ், கொஞ்சம் காமெடி கலந்து நான் பகரும் பதிவு இது படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் பகிர்ந்துவிட்டு போங்க மக்களே


Wednesday, August 27, 2014

க்விஸ் அப் (QuizUp ) படிக்கும் வயதில் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் & ஆசிரியர்கள் அவசியம் டவுன் லோடு செய்ய வேண்டிய ஆப் (Apps)

avargal unmaigal


க்விஸ் அப் (QuizUp ) படிக்கும் வயதில் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் & ஆசிரியர்கள் அவசியம் டவுன் லோடு செய்ய வேண்டிய ஆப் (Apps)


Tuesday, August 26, 2014

கலைஞரின் வேண்டுகோளை விஜய் டிவி ஏற்குமா அல்லது நிராகரிக்குமா?கலைஞரின் வேண்டுகோளை விஜய் டிவி ஏற்குமா அல்லது நிராகரிக்குமா?

வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் டெலிகிராம்avargal unmaigal


வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் டெலிகிராம்இந்திய மக்கள் இப்போது மிக அதிக அளவு பயன்படுத்தி கொண்டிருப்பது வாட்ஸ்ஆப்( WhatsUp ) ஆனால் மற்ற நாடுகளில் இந்த வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறது டெலிகிராம் (Telegram apps )என்ற புதிய ஆப்ஸ் . இந்த டெலிகிராம் இன்னும் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் வரவில்லை. எல்லா நாடுகளிலும் மூடுவிழா கொண்டாடும் நேரத்தில்தான் இந்தியாவில் அதுதான் அதிக புழக்கத்தில் இருக்கும். இது மருந்தில் இருந்து நீயூடெக்னால்ஜி வரை சொல்லிக் கொண்டு போகலாம். அதனால்தான் வாட்ஸ்ஆப் இன்னும் இந்தியாவில் அதிக புழக்கத்தில் இருக்கிறது.இந்திய மக்கள் எப்படி வேணுமானால் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் நம்ம தமிழ் மக்கள் அப்படி இருக்க கூடாது என்பதால் இந்த பதிவு.


Monday, August 25, 2014

2016 தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி இப்படிதான் அமையுமோ?


2016 தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி இப்படிதான் அமையுமோ?

மோடியும் ஜெயாவும் சட்டசபை தேர்தலை மனதில் நிறுத்தி அதற்கான காய்களை நகர்த்த தொடங்கியுள்ளனர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் திமுக ஆட்டோமெடிக்காக ஆட்சிக்கு வந்துவிடும். ஆனால் இந்த முறை திமுக அடிபட்டு குற்றுயிராக கிடக்கும் பாம்பு போல கிடக்கிறது,

Sunday, August 24, 2014

ஜெயலலிதாவின் கழுத்தை மோடி இறுக்கியதால் அதிமுகவை பா.ஜ வில் அடகு வைக்கும் ஜெயலலிதா

avargal unmaigal

ஜெயலலிதாவின் கழுத்தை மோடி இறுக்கியதால் அதிமுகவை பா.ஜ வில் அடகு வைக்கும் ஜெயலலிதா

கடந்த லோக்சபா தேர்தலில் மோடி தமிழகத்தில் மாற்று கட்சியினரோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அந்த கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டதால் அவருக்கு கிடைத்த லாபம் ஒன்றுமே இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை மோடியின் அலையும் இங்கு வேகவில்லை..ஆனால் லோக்சபா தேர்தலில் தனி மெஜாரிட்டியோட ஜெயித்து ஆட்சியில் அமர்ந்த போதிலும் அவருக்கு மாநிலங்கள் அவையில் அவருக்கு இன்னும் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் அவர் குறிவைத்தது சகோதரி ஜெயலலிதாவை நோக்கிதான். அதானல் அவர் ஜெயலலிதாவை டில்லியில் சந்தித்த போது மோடி அவருடன் பேரம் பேசினார். அவர் நினைத்தபடி பேரம் படிந்தது.அந்த பேரத்தின்படிடி மோடி சகோதரி ஜெயலலிதாவின்(பெங்களுர் சொத்துகுவிப்பு வழக்கு) மானத்தை காப்பாற்ற உதவுவதாகவும் அதற்கு பதிலாக மாநிலங்கள் அவையில் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.ஆனால் இந்த முழுப்பூசணிக்காவை சோற்றுக்குள் மறைத்து, பாஜவுக்கு ராஜ்யசபாவில் ஆதரவுக்கரம் நீட்ட காத்திருப்பதன் காரணமாக, அ.தி.மு.க.,வுக்கு, லோக்சபாவில் துணை சபாநாயகர் பதவியை தந்து, பா.ஜ., கவுரவித்திருக்கிறது. இதுதான் உண்மை.இப்படிதான் சத்தமின்றி ஜெயலலிதா அதிமுகவை பாஜவிடம் அடகு வைத்து, மத்திய பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இடம் பிடித்திருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள, துணை சபாநாயகர் தம்பிதுரை, 'லோக்சபா துணை சபாநாயகர் பதவியை நாங்கள் ஏற்றுக்கொண்டதில் இருந்தே, மத்திய அரசில், அ.தி.மு.க.,வும் பங்கு பெறத் துவங்கி விட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.இப்படி இவர் சொன்னது மூலம் பாஜவுடன் கூட்டணி வைத்த கட்சிகளிடையே சலசலப்பு தோன்றி இருக்கிறது

இது மத்திய மாநில அரசுளுக்கு இடையிலான உறவில் உண்டான சுமுக நிலை என்றால், அரசியல் ரீதியாக எந்த சலசலப்பும் தோன்றி இருக்காது. ஆனால் பா.ஜவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் மலர்ந்த புது உறவு என்பதால் அதன் எதிரொலி தமிழகத்தில் கேட்காமல் இருக்குமா என்ன?கடந்த வாரத்தில், சென்னை யில் கூடிய பாமக பொதுக் குழுவில் இதுபற்றிய விவாதம் தான் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதாம்.

இந்த கூட்டத்திற்கு பின் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இருக்கிறதா, இல்லையா என்பதையும், தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்கிறதா என்பதையும், பா.ஜ.,வினர் தான் தெரிவிக்க வேண்டும்' என்று சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.இதன்மூலம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்கிறதா என்ற கேள்வி, இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த எல்லா கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. இன்னும் இதற்கு யாரும் பாஜகவில் இருந்து விடையளிக்கவில்லைஅன்புடன்
மதுரைத்தமிழன்

Friday, August 22, 2014

டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா?

avargal unmaigal

டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா?


டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா? Doctor VS Public!

டாக்டர் மற்றும் மக்களிடையே இருந்த கொஞ்ச நஞ்ச உறவை தனது டிவி ரேட்டிங்காகவும் தனது சம்பள உயர்வுக்காகவும் மேலும் கெடுத்து அவ நம்பிக்கையை விதைத்து சென்றது மட்டுமே இந்த ஷோமூலம் கோபி நாத் செய்த சமுக சேவை...


Tuesday, August 19, 2014

நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன்..நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன்..நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன். இது நானாக எடுதத முடிவு அல்ல. என் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இதில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் இருந்தும் வெளியேறுகிறேன்...இந்த முடிவை எடுக்ககாரணம் 

Friday, August 15, 2014

விடிவுகாலமே இல்லையா?
விடிவுகாலமே இல்லையா?என் மனைவி அடிக்கடி கோபபடுகிறாள் நேற்று அதற்கான காரணத்தை கண்டு பிடித்துவிட வேண்டுமென்று அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி அவள் சந்தோசமாக இருக்கும் நேரத்தில் அதற்கான காரணத்தை பக்குவமாக கேட்டேன் அதற்கு அவ சொன்னாள் என்னங்க நீங்க தானே நம்ம கல்யாணம ஆன புதிதில் நான் கோபம் படும் போது ரொம்ப அழகாக இருக்குதுன்னு சொன்னீங்க. அதனாலதான் நான் இப்பவெல்லாம் அதிகமாக கோபபடுகிறேன்அது சரிம்மா நீ கோபபட்டால மட்டும் போதுமே ஆனால் நீ பூரிக்கட்டையும் சேர்த்து தூக்குவது எதற்கு என்பதை சொல்லும்மா


Thursday, August 14, 2014

மெயில் பேக் 7: இந்திய ராணுவம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?
மெயில் பேக் 7: இந்திய ராணுவம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

Thursday, August 7, 2014

மோடியின் அமெரிக்கா வருகையும் ஒபாமாவின் பயமும்


மோடியின் அமெரிக்கா வருகையும் ஒபாமாவின் பயமும்


என்ன மோடி வருகையை கண்டு உலகின் வல்லரசான அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவுக்கு பயமா அதி நிஜந்தானா என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்..


நம்பினா நம்புங்க உண்மையிலேயே ஒபாமா மோடியை கண்டு பயந்து போய்தான் இருக்கிறார்.

மோடியின் வேஷத்தை கலைத்த பேஸ்புக் ஸ்டேடஸ்
மோடியின் வேஷத்தை கலைத்த பேஸ்புக் ஸ்டேடஸ்


செய்தி : சில நாட்களுக்கு முன்னாள் டிவிட்டரில் மோடி , " தான் நீண்ட காலங்களுக்கு முன் , தன் ஊர் , மொழி தெரியாத , யாரும் உதவ முன்வராத பையன் ஒருவனை சந்தித்ததாகவும் , அவன் மீது தான் அக்கறை கொண்டு அவனது எதிர்காலம் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார் . அந்த பையனும் படிப்பிலும் ஆர்வம் அடைந்தான் . விரைவில் குஜராத்தி மொழியையும் கற்றுக் கொண்டான் " என்று பதிவிட்டு இருந்தார் .சிறிது நாட்களுக்கு முன் அவனுடைய பெற்றோர்கள் நேபாளில் வாழ்ந்து வருவதை கண்டு பிடித்தனர் . எனவே அந்த பையனை அவர் குடும்பத்துடன் இன்று நேபாளம் செல்லும் போது சேர்த்து வைப்பார் என்று அறிவித்துள்ளார்.தான் வளர்த்த ஒரு இளைஞரை 16 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்தில் அவரது குடும்பத் தாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.. அடடே நல்ல விஷயம்தான்


Monday, August 4, 2014

மெயில் பேக் 6: படித்ததில் பிடித்தது உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்மெயில் பேக் 6: படித்ததில் பிடித்தது உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்

என் மனதை  நெகிழச் செய்த படம். உங்களையும் நெகிழச் செய்யும்.


I'm Not Affiliated With Or Claim To Own Any Of The Picture
A Picture Is Worth A Thousand Words!. I'm Not Affiliated With Or Claim To Own Any Of The Picture.
ஜெயலலிதா...
சொன்னது: "தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்வது முட்டாள் தனம்!"
சொல்லாதது: "டாஸ்மாக்ல குடிச்சி சாவது புத்திசாலித்தனம்..!" (அரசுக்கு வருமானமானம் வருதே!)

பேஸ்புக்கில் டி.வி.எஸ். சோமு பகிர்ந்தது


கேள்வியும்....நானே ! பதிலும்......நானே.....!
இந்த உலகில் முதன் முதலில் எங்கு க்ரைம் தோன்றியது ?
1) ஆதாம் ஏவாள் திருட்டுத்தனமாக ஆப்பிள் சாப்பிட்ட போது....
2)விநாயகரும், முருகனும் மாம்பழத்துக்காக சண்டை போட்டுக்கொண்ட போது..
3) இஸ்லாமியத்தில் எப்போது க்ரைம் தோன்றியது என்று யாராவது சொன்னால் பரவாயில்லை,
இந்த கேள்வி பதில் பகுதி ஒரு சமத்துவ புரமாக மாறிவிடும்.

பேஸ்புக்கில் எழுத்தாளர் ராஜேஷ் குமார் பகிர்ந்தது


இப்போலாம் நாட்ல எங்க தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்க தோணுது...
அதிகமா ஆன்லைன் வர்றத கொறச்சுக்கிட்டா சரியாய்டும்னு தோணுது !

டுவிட்டரில் சில்லுண்டி பகிர்ந்தது


"ம் அப்பறம் அப்பறம்" இதில்தான் பிழைத்துக் கொண்டிருக்கின்றன
பல காதல் உரையாடல்கள்!

டுவிட்டரில் நித்யா பகிர்ந்ததுபோன்ல ம்ம்ம் அப்பறம் னு சொன்னா 'காதலி',
சொல்லி தொலைங்க னு சொன்னா 'மனைவி',
நீ இன்னும் உயிரோடு தான் இருக்கீயானு கேட்டா 'நண்பன்'

டுவிட்டரில் .வண்டு முருகன் பகிர்ந்தது


ஒரு நல்ல ஐடியின் வெளிக்காட்டமுடியாத கோபங்கள்
ஃபேக் ஐடியாக உருவெடுத்துவிடுகின்றது:-))))

டுவிட்டரில் .கருத்து கந்தன் பகிர்ந்ததுApple: I look like a human heart.
Mango: I look like a stomach.
Grapes: I look like eyes.
Banana: I don't like this game...

நெட்டில் படித்தது


அன்புடன்
மதுரைத்தமிழன்

Sunday, August 3, 2014

உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்.

உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்.ஒரு அழகிய மணமுள்ள ரோஜாமலரை சில மீன்களோடு போட்டு ஒரு பையில் வைத்தால் சிறிதுநாளில் அது நாறத்துவங்கும். அது போலதான் நம் கூட உள்ள மோசமான நட்பால் நமது வாழ்வும் கெட்டுபோகும்உங்கள் நண்பர்கள் உண்மையிலேயே உங்களின் நல்ல நண்பர்கள்தானா? உங்கள் வாழ்வு பிரகாசிக்க வழி சொல்லுகிறார்களா அல்லது தவறான இருட்டு வாழ்விற்கு செல்ல வழி சொல்லுகிறார்களா? நண்பர்கள் நம் வாழ்விற்கு மிக முக்கியம். நாம் வைத்திருக்கும் நட்பு நம் வாழ்வில் நம்மை அறியாமல் பல மாற்றத்திற்கு இட்டு செல்லும். அதனால் நல்ல நண்பர்கள் நல்வாழ்விற்கு மிக அவசியம்.


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog