உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, June 30, 2011

அமெரிக்காவை ஆள்வது கலைஞரா அல்லது சோனியாவா?


அமெரிக்காவை ஆள்வது கலைஞரா அல்லது சோனியாவா?

இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்கள் சரிவர இந்திய நிர்வாகத்தை நடத்துவதில்லை என்பது நாம் வைக்கும் குற்றசாட்டு. அதனால் இந்தியாவின் கடன் தொகை அதிகரித்துள்ளது என்றும் சராசரி குடிமகனின் கடன் தொகையும் அதிகரித்து வருகின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்தியாவின் கடன் நிலவரம் ;

இந்தியாவின் கடன் 34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடி.இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பொது கடன் ரூ.34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 115 கோடியே 40 லட்சம் ஆகும். இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச்  மாதவாக்கில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் சராசரி கடன் ரூ.30 ஆயிரம் ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் நிறுவன கணக்குப்படி, ஒரு இந்தியனின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38 ஆயிரம் மட்டுமே. எனவே, ஒவ்வொரு இந்தியனுக்கும் அவனது 10 மாத சம்பளத்தொகை, கடனாக உள்ளது.

இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழை நாடல்ல என்று ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார் .இந்த தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய நம் இந்திய சமுதாயம் தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.மேலை நாட்டை எதற்கெடுத்தாலும் ஒப்பிட்டு பார்த்து வரும் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நான் வசிக்கும் அமெரிக்காவின் ஆட்சியாளர்களின் நிர்வாகத்தினால் ஓவ்வொரு அமெரிக்காவின் குடிமக்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை ரொம்ப அதிகமல்ல இவ்வளவுதான் 46,169.30 டாலர் = 2,060,074.29 ரூபாய்தான் ( 1 USD = 44.6200 INR ) .

பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடுப்பா என கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது. இதன் பல மாநிலங்கள் அரசாங்க சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் லட்சணமும் இதுதான் 9 டிரில்லியன் டாலர்கள் கடன் பட்டு நிற்கின்றது.

The estimated population of the United States is 310,848,879  so each citizen's share of this debt is $46,169.30. The National Debt has continued to increase an average of $3.90 billion per day since September 28, 2007அமெரிக்காவின் நேஷனல் கடன் கடிகாரம். இதை நீங்கள் பார்த்து கொண்டிடுருக்கும் போதே அப்போதைய கடன் நிலவரத்தை துல்லியமாக காண்பிக்கும் (The U.S.Debt Clock  is literally changing as you read this. If you can stand it, here are some staggering statistics: )


·         Total interest due: $3.54 trillion ($11,396 per citizen).

     ·         Biggest budget item (Medicare/Medicaid): $799.6 billion and rising.

     ·         Number of people unemployed: 24,622,719 (actual), or 13,771,261 (official).

     ·         Home foreclosures so far in 2011: 1,048,700

     ·         Credit card debt: $803.9 billion and rising.

The U.S. Debt Clock is run by a non-partisan, non-profit, non-governmental organization using government data.

மக்களே இனிமேல் நீங்கள் இந்திய ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்ல மாட்டீர்களே( இந்த செய்தியை கலைஞர் ஆட்சி செய்த போது பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷபட்டிருப்பார். எதெற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்களை ஒப்பீட்டு பேசிவந்த அவர் அமெரிக்காவை ஒப்ப்பிட்டு பேசியிருப்பார். பாவம். முடிந்தால் காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த செய்தியை அனுப்பவும் அவர்களாவது பெருமை அடையட்டும் அவர்களது ஆட்சி அமெரிக்காவை விட நல்ல படியாக செல்கிறது என்று


உலக நாடுகள் பொறாமைப்படும் நாடு நமது அண்டையா நாடான சீனா தான் . உலகின் பணக்கார அரசாங்கம் சீனா தான்.$2,454,300,000,000 டாலர்கள் ரெடி கேஷாக வைத்திருகின்றது. இரண்டாவது இடம் ஜப்பான்.அதன் தேசிய கையிறுப்பு டாலர்கள் 1,019,000,000,000.

உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...


Tuesday, June 28, 2011

இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( புதுமண தம்பதிகளூக்கு மட்டும்)


இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( புதுமண தம்பதிகளூக்கு மட்டும்)

திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோஷமாக வாழ வேண்டுமென்றுதான்  ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை சந்தோஷமாக அமைவதில்லை.  இதற்கு முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்  காரணமாக அமைந்து விடுகின்றது.

இரவில் கட்டிலில் மட்டும்  கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று இப்படி பலர் ...கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவில்  போலியாக வாழ்பவர்களும் உண்டு.

திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது.  இப்படிபட்ட தம்பதிகளுக்காக இல்லறம் என்றும் இன்பமாக இருக்க?  புதுமண தம்பதிகளூக்கு இந்த பதிவு  வழிகாட்டுகின்றது

படிக்க.... ரசிக்க ......வாழ்ந்து காட்ட தொடர்ந்து படியுங்கள்.

ஒரு அறிஞரிடத்தில் ஒருவர் அறிவுரை கேட்க வந்திருந்தார்.  சிறிது உரையாடலுக்கு பின் அவர் தயங்கி அந்த அறிஞரிடம் ,ஐயா என்னுடைய  இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை!  நானும் என் மனைவியும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! பொழுது விடிந்தால எப்பொழுதும் எங்களுக்குள் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை! எதிர்த்துப் பேசகிறால்எரிஞ்சு விழுகிறாள்கோபப்படுகிறால்எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார். (என்ன மக்காஸ் சண்டை போடலைன்னா வாழ்க்கை போரடிச்சுடும் அதனால்தான் நாம சண்டை போடுறோம் சரிதானே)


அறிஞர் பார்த்தார்,சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள் யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய நூற் கண்டை எடுத்துக் கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே நல்ல வெளிச்சத்தில் வந்து உட்கார்ந்தார். அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனால் அந்த அறிஞர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. இருந்த போதிலும் அவர் மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அவர் மனைவியும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை. ( யாருப்பா அது இந்தமாதிரி பொண்ணு இருந்தா என் கண்முன்னால் கொண்டு வருங்களப்பா)

சிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டுவந்து அவர்கள் முன்னால் வைத்தார்கள். இரண்டு பேரும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்ததுபாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அம்மா பாலில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பைப் போட்டு இருந்தார்கள். வந்தவர் அந்த அறிஞர் முகத்தைக் கவனித்தார். அவர் முகத்திலே எந்த வித்தியாசமும் இல்லை. அவர் அதை அப்படியே குடித்துவிட்டார். அந்த அம்மா, பாலுக்குச் சர்க்கரை போதுமா என்று கேட்டதற்கு!  அறிஞர்,  இனிப்பு மிகவும் சரியாக இருக்கிறது என்று சொன்னார்.( மக்காஸ் உண்மை என்னனா அப்படி அந்த அறிஞர் சொல்லவில்லை என்றால் பூரி கட்டையால் அடி கிடைக்கும் என்பது அவருகென்ன தெரியாதா)

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர், இன்னும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லையே என்று அறிஞரைப் பார்த்து கேட்டார் அதற்கு அறிஞர், நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்.

எல்லா மதங்களும் என்ன சொல்கிறது தெரியுமா? “எந்தக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் ஒருத்தர் குற்றத்தை இன்னொருத்தர் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோகத்திலேயே சொர்க்கத்தை காண்கிறார்கள் என்று சொன்னார்.

இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது என்னவென்றால், அறிஞர் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு விளக்கை கேட்டபோது, அவர் மனைவி ஏதும் கேட்காமல் விளக்கைக் கொண்டு வந்து வைத்தார். அறிஞரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டிருந்த போதும், அறிஞர் ஏதும் கூறாமல் அதைக் குடித்தார்.  இதுவே இல்லறம் என்றும் இன்பம் இருக்க வழியாகும்.

அறிஞர்நானும் என் மனைவியும் குடும்பத்திலே ஒருவரை ஒருவர் ரொம்பவிட்டுக் கொடுத்துநடந்து கொள்வோம். அதனால் எங்களுக்குள் மன ஸ்தாபம் வருவதே இல்லை.Newlywed Conversation
"Dear, don't expect the first few meals to be great. It takes time to find the right restaurant."


இந்த பகிர்வு உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...அதுவரை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் சிந்திப்போம்...

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog