Sunday, May 19, 2019

இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக

மதுரைத்தமிழா என்னய்யா ஆச்சு நல்லாதானே இருந்தே...முன்பு எல்லாம் ஒடியை கலாய்ச்சு பதிவு எழுதுவே ஆனால் இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும் என்று சொல்லுறே எப்ப இருந்து நீயும் சங்கியாக மாறினே

நான் சங்கியாக மாறவில்லை ஆனால் இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும். அடேய் நீ சங்கியாக மாறவில்லை என்றால் தேர்தலுக்கு அப்புறம்  ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பை பார்த்து மனசு மாறிட்டயா.

அதெல்லாம் இல்லை ஆனால் இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும் அடேய் உனக்கு என்னடா ஆச்சு இப்படி புலம்புறே... சரி சரி நீ சொல்லுறப்படி இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும் என்று நானும் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் மோடியால் எப்படி இந்தியா வல்லராசக முடியும் என்று சொல்லிட்டேனா நானும் நிம்மதியாக இருப்பேன்ல



ஹீ ஹீ அப்படி கேளுங்க நான் சொல்லுறேன்

காங்கிரஸ்கட்சி ஆட்சி அமைத்தால் நம்மை வைச்சு செஞ்ச மோடியை நாம் நல்லா வைச்சு செஞ்சிட்டோம் என்று பொதுமக்கள் தங்கள் மார்பை காட்டிக் கொண்டு திமிராக இருப்பார்கள்

அது போல இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் முதல் வருடம் அமைதியாக இருப்பாங்க மக்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல நடப்பாங்க .அதன் பின் பழைய குருடி கதவை திறடி என்ற மாதிரி  மீண்டும் தங்கள் வால் தனத்தை காண்பிக்க ஆரம்பிப்பாங்க..


உடனே நம்ம மக்களும் மீம்ஸ் போட்டு பதிவு எழுதி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவாங்க அதன் பின் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று போராடுவாங்க


அதுக்கு அப்புறம் என்ன மீண்டும் பாஜகவும் ஆட்சிக்கு வரும். வேண்டுமென்றால் அப்போது  யோகியோ வேறு யாரவது பிரதமராக வருவாங்க அவரும் மோடி போல ஆட்சி செய்வார்  இருக்கும் நாட்டின் செல்வத்தையும் சுரண்டி வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் மீண்டும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் முயல்வார்கள் இப்படி மாறி  மாறி நடந்து கொண்டே இருக்கும். அப்புறம் எப்படி இந்தியா வல்லராக முடியும்


அதுனால்தான் சொல்லுறேன் இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடித்தான் பிரதமராக வேண்டும் அது எப்படி நடக்கும் என்று கேள்வி எழுகிறதுதானே உனக்கு?

ஆமாம்ம்ய்யா அது எப்படி நடக்கும் என்று சொல்லி தொலையேன்


சரி சரி இந்தியா வல்லராசாக நீ ஏன் அவரசப்படுறே,,, நான் தான் அதற்கு வழி சொல்லுறேன் என்று சொல்லிட்டேனே

இப்ப கேளு மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் என்ன செய்வார். போனதடவை பொதுமக்களுக்கு பின்னால நல்லா மிளகாய் சொருகினாலும் நம்மை மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைத்து, இன்னும் அதிகமாக மக்களுக்கு டிமானிடைசேசன் மற்றும்  தேசபக்தி என்ற பெயரில் மக்களிடையே இன்னும் அதிகப் பிளவு ஏற்படுத்தி,  மக்களுக்கு பின்னால் அதிக காரமிக்க மிளகாயை  சொருகுவார்... அதன் வெளிப்பாடாக எழும் ஏறிச்சலில் மக்கள் மட்டுமல்ல சங்கிகளும் கதற ஆரம்பிப்பார்கள்.சங்கிகளையே
சாவடிக்கப்போறதுக்கான காலமாகத்தான் அது இருக்கும்


இப்படி மோடிஜி செய்யும் போது எதிர்க்க எதிர்கட்சிகள் இருக்காது .அது போல எதிர்ப்பவர்களும் கண்ணுக்கு எட்டிய தூரம்  இருக்க மாட்டார்கள் காரணம் அப்போது மோடி எழுதிய சட்டங்கள்தான் கோர்ட்டுகளில் பின்பற்றப்படும் இப்போது இருக்கும் இந்திய சட்டங்கள் குப்பை தொட்டியில் தூக்கி போடப்படும் அதாவது  கொடுங்கோல் ஆட்சி நடக்கும்..


இந்த கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் எவ்வளவுகாலம்தான் பொறுத்திருப்பார்கள் அவர்கள் பொங்கி எழும் நேரம் வரும் .அப்பொழுது பல புதிய தலைவர்கள் தோன்றுவார்கள் அவர்களும் வீழ்த்தப்படுவார்கள். மக்கள் இன்னும் அதி வேகமாக போராடுவார்கள் கடைசியில் மக்கள் புதிய தலைவரின் கீழ் வெற்றி வாகை சூடுவார்கள். புதிய இந்தியா பிறக்கும் அதன் பின் எப்படி ஜப்பான் கிரோஷிமாஅழிவிற்கு பின் எப்படி வீரு கொண்டு எழுந்து வல்லரசு நாடாக மாறியதோ அது போல இந்தியாவும் வல்லரசாக மாறும் இப்படி எல்லாம் நடக்க வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்  இப்ப புரிஞ்சதா நான் ஏன் அப்படி சொல்லுகிறேன் என்று..


அடேய் மதுரைத்தமிழா நீ சொல்லவது சரிதான் ஆனால் இந்தியா வல்லரசாக  இப்போது இருக்கும் இந்தியர்கள் கொடுமையில் சிக்கி தவிக்க வேண்டுமா அடேய் நீ வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட தைரியத்தால் இப்படி எல்லாம் எழுதி எங்களை பீதிக்கு உள்ளாக்குறே.... அடேய் அடே நீ மட்டும் என் கையில் சிக்கினால்........

அன்புடன்
மதுரைத்தமிழன்



4 comments:

  1. இப்பவே கண்ணைக் கட்டுதே...

    ReplyDelete
  2. உங்க வாக்கு பலித்தது ... மோடி வந்துட்டார் ,... ஹ ஹஹா ஹஹஹா....

    ReplyDelete
  3. இதுதான் நடக்கும்

    ReplyDelete
  4. அப்ப, மோடி ஒரு அணுகுண்டுன்னு சொல்றீங்க. அணுகுண்டு ஒரு நொடியில் காரியத்தை முடித்துவிடும். ஆனால் மோடி நிதானமாகத்தான் காரியத்தை தொடர்ச்சியாகவே செய்து கொண்டிருப்பார். கதை கொஞ்சம் நிதானமாகவே முடியும். ஒரே சஸ்பென்ஸ் தான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.