ஏழரை வர வேண்டும் என விதி இருந்தால் எப்படி வேணாலும் வரும் போல..
படித்ததில் பிடித்து விழுந்து விழுந்து சிரித்தது
படித்ததில் பிடித்து விழுந்து விழுந்து சிரித்தது
இந்த கூத்தை படிங்க.
எங்க அம்மா சிவகாசியில் இப்ப இருக்காங்க.
அப்பா பெங்களூர் ல இருக்கார்.
நேற்று ஒரு வேலையா வெளியில் கார்ல போனார்..
அவர் கார் ஒட்டிக்கிட்டு போய்கிட்டு இருந்த நேரம், அம்மா அப்பாக்கு போன் பண்ணி,
"ஏங், ஜானகி அக்கா போய்ட்டலாம்..இப்பதான் ஃபோன்ல
சொன்னாங்க" என வருத்தமா சொல்லி இருக்காங்க.
அப்பா ஏதோ ஞாபகத்தில்
" அப்படியா, சரி நீ எப்ப போக போற"...?
என கேட்டு இருக்கார்.
"மனுஷனா நீங்க..
நான் போனா உங்களுக்கு அவ்ளோ சந்தோசமா.."
என கத்திட்டு அம்மா ஃபோனை கட் பண்ணிட்டாங்க.
அப்பாக்கு ஒன்னும் புரியலை. எதுக்கு நம்மளை திட்டுறா என நினைச்சி, எனக்கு போன பண்ணி, என்னம்மா ஆச்சி என கேட்டார்,
நான், ஜானகி பெரியம்மா இறந்து போய்ட்டாங்கப்பா என சொன்னேன்.
அதுக்கு அப்புறம் தான் அப்பாக்கு எல்லாம் புரிஞ்சி, அம்மாவை சமாதானம் செய்ய try பண்றார், இன்னும் பஞ்சாயத்து
தீரலை..
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இதுதான் நாக்குல 7.5 சனி ந்னு பேரோ...
ReplyDeleteஒன்னு சொல்லி சமாளிச்சிருக்கலாம் இல்லமா நீ எப்ப அவங்க வீட்டுக்குப் போகப் போறனு....நானும் வரணும்ல அதான் கேட்டேன்னு ...ஹிஹிஹி
கீதா
ஹா ஹா செம்ம காமெடி....பாத்துங்க சீக்கிரமா சமாதானப்படுத்திடுங்க....
ReplyDelete