பேஸ்புக்கில்
நான் கண்ட ஒரு நல்லமனிதர்
வயசானால் அக்கடான்னு
உட்கார்ந்துருவாங்க சில பேர்.. சில பேர் எதிலாவது குற்றம் கண்டுபிடித்து குறைமட்டும்
சொல்லிகிட்டு இருப்பாங்க. அதிலும் இந்த காலத்து பெரியவர்கள், இளைஞர்கள் பெரும்பாலும்
இணையத்திலே நேரத்தை உபயோகம் இல்லாமல் செலவிடுகிறார்கள் என்று சொல்லுவார்கள்.
ஆனால் எனக்கு
தெரிஞ்ச ஒரு பெரியவர் இப்படி யாரையும் குறை சொல்லாமல், தானும் இணையத்தில் டைம் செலவழித்து
பல நல்ல விஷயங்களையும் படித்தும் அப்படி படித்ததுமட்டுமல்லாமல் அதை எழுதியவரை பாராட்டியும்,
அதோட நின்றுவிடாமல் அதை தனது பேஸ்புக் மூலமாக பலருக்கும் பகிர்ந்தும் வருகிறார். அதுமட்டுமல்லாமல்
இணையத்தின் மூலம் பலரையும் நட்புகளாக்கி, அந்த நட்புகளையும் தம் சொந்த உறவுகளாக கருதி,
தன் வீட்டிற்கு வருபவரையும் தன் மனைவியோடு சேர்ந்து உபசரித்தும் வருகிறார். இந்த காலத்திலும்
இப்படியும் ஒரு நல்ல மனிதர்.