Tuesday, November 3, 2015



பேஸ்புக்கில் நான் கண்ட ஒரு நல்லமனிதர்

வயசானால் அக்கடான்னு உட்கார்ந்துருவாங்க சில பேர்.. சில பேர் எதிலாவது குற்றம் கண்டுபிடித்து குறைமட்டும் சொல்லிகிட்டு இருப்பாங்க. அதிலும் இந்த காலத்து பெரியவர்கள், இளைஞர்கள் பெரும்பாலும் இணையத்திலே நேரத்தை உபயோகம் இல்லாமல் செலவிடுகிறார்கள் என்று சொல்லுவார்கள்.

ஆனால் எனக்கு தெரிஞ்ச ஒரு பெரியவர் இப்படி யாரையும் குறை சொல்லாமல், தானும் இணையத்தில் டைம் செலவழித்து பல நல்ல விஷயங்களையும் படித்தும் அப்படி படித்ததுமட்டுமல்லாமல் அதை எழுதியவரை பாராட்டியும், அதோட நின்றுவிடாமல் அதை தனது பேஸ்புக் மூலமாக பலருக்கும் பகிர்ந்தும் வருகிறார். அதுமட்டுமல்லாமல் இணையத்தின் மூலம் பலரையும் நட்புகளாக்கி, அந்த நட்புகளையும் தம் சொந்த உறவுகளாக கருதி, தன் வீட்டிற்கு வருபவரையும் தன் மனைவியோடு சேர்ந்து உபசரித்தும் வருகிறார். இந்த காலத்திலும் இப்படியும் ஒரு நல்ல மனிதர்.


அவர் வேறு யாரும் அல்ல ரத்தினவேல் நடராஜன் அவர்கள்தான்.  அந்த பெரியவருக்கு இன்று பிறந்தநாள். இந் நன்னாளில் அவர் மேலும் சிறந்துவிளங்கி   பல்லாண்டுகாலம் வாழ  இன்று போல என்றும் வாழ்கவென வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

ரத்தினவேல் அவர்களைப்பற்றிய சிறுவிபரம். அறியாதவர்கள் அறிந்து கொள்ள :

Rathnavel NatarajanSrivilliputtur, Tamilnadu, Indiaஎனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். மூன்று பையன்களுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு. rathnavel.natarajan@gmail.com 94434 27128

அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அவர் ப்ளாக்கும் நடத்தி வந்தார். இப்போதும் இருக்கிறதா, தொடர்கிறாரா என்று தெரியவில்லை.

    அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    தம +1

    ReplyDelete
  3. இன்று நான் படிக்கும் முதல் பதிவு இது. இந்த அழகிய காலை பொழுது மிக அருமையாக தொடங்கியிருகிறது, உலகமே அன்பு மயமா இருப்பதாகத் தோன்றுகிறது. அய்யாவுக்கு என் வாழ்த்துக்கள்! பகிர்ந்து கொண்டமைக்கு சகாவுக்கு ஒரு பொக்கே பார்சல்:)

    ReplyDelete
  4. தொடர்ந்து அவரை முகநூலில் பார்த்துவருகிறேன். அனைவருடனும் சகோதர பாசத்துடனும், தந்தை பாசத்துடனும் பழகுபவர். எழுத்துக்களால் நம்மை ஈர்ப்பவர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. நான் விடாது விரும்பித் தொடரும்
    மனம் கவர்ந்த பதிவர்
    சுருக்கமாக ஆயினும் அருமையாக
    அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஒரு நல்ல மனிதரை அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பரே!
    த ம 4

    ReplyDelete
  7. தன் பிள்ளைகள் தன் குடும்பம் தான் என்று இருக்கும் சமூக சூழலில் அனைவரும் சிறப்பாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மகிழ்ச்சியாக் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அறிய நல்லுள்ளம் படைத்த அனைவராலும் அப்பா என்று அழைக்கப்படும் ஐயாவுக்கு என் வணக்கங்களும்

    ReplyDelete
  8. ஐயாவிற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. ஆம்! தமிழா இவரைப் பற்றி அறிவோம். மிக நல்ல மனிதர். எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் திரு ரத்தினவேல் அவர்களுக்கு...

    ReplyDelete
  10. நல்லை மனிதர்! நான் வலையில் எழுதத் தொடங்கிய போதே தொடர்ந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியவர்! வாழ்க பல்லாண்டு!

    ReplyDelete
  11. உடனுக்குடன் பாராட்டிவிடும் அந்த மனிதரை நானும் கவனிக்கிறேன்...வயது சிலரை படுக்கவைக்கிறது..இவரை பாராட்டவைக்கிறது.....பிறந்தநாள் வாழ்த்துகள்...உங்கள் மூலமாக...

    ReplyDelete
  12. இவரது வலைப்பூ ஒருசமயம் படித்திருக்கிறேன்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அய்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நானும் தெரிவித்ததை தெரிவியுங்கள் அய்யா....

    ReplyDelete
  15. நல்ல மனம் வாழ்க...... முகப்புத்தகத்தில் நான் தொடர்பவர்களில் இவரும் உண்டு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.