Thursday, February 10, 2011

என் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு திறமைவாய்ந்த பதிவாளர்கள் யாரும் உண்டோ?


காட்டில் வாழும் டார்சான்னுக்கு(Tarzan) ஏன் தாடி இல்லை?( என்ன ப்ராண்ட் பிளேடு யூஸ் பண்ணுரான்)

நமது ரிமோட் கண்ட்ரோலில் பேட்டரி தீர்ந்துவிட்டது என்று தெரிந்தும் நாம் ஏன் பவர் பட்டனை ரொம்ப அழுத்தி அழுத்தி பார்க்கிறோம்?(இன்று டெம்ரேச்சர் 0 (Zero) டிகிரி குளிராக இருக்கிறது என்றும், நாளை இது போல இரண்டு மடங்கு அதிகம் என்றால் எவ்வளவு குளிர் இருக்கும்?(நம்பரில் சொல்லவும்)ஏன் நாம் மிக உயரமான பில்டிங்கு காசு கொடுத்து போயி அங்கே உள்ள பைனாகுலரில் காசு போட்டு அங்கே இருந்து கிழ் உள்ள க்ரவுண்டை பார்க்கிறோம்?( அதுதான் நாம கிழே இருந்தே சுற்றி பார்க்கலாமே)லிப்டில்(elevator) உள்ள பட்டனை ஒரு தடவைக்கு மேலே திரும்ப திரும்ப அழுத்தினால் அது சிக்கிரம் வந்துவிடுமா என்ன?(லிப்டிற்க்காக வெயிட் பண்ணும் போது கவனித்து பார்த்தால் பல பேர் ஒரு தடவைக்கு இரு தடவை அழுத்துவார்கள்)
 
 

8 comments:

 1. convincing ஆக பதில் கிடைக்காது என்று தெரிந்தும் ஏன் இந்த கேள்விகள் வந்தன?

  ReplyDelete
 2. முதல் படத்திலுள்ளவர்கள் சகோதரியாகவும் இருக்கலாமே..

  மற்றவை நன்று.

  ReplyDelete
 3. ஏன் நாம் மிக உயரமான பில்டிங்கு காசு கொடுத்து போயி அங்கே உள்ள பைனாகுலரில் காசு போட்டு அங்கே இருந்து கிழ் உள்ள க்ரவுண்டை பார்க்கிறோம்?( அதுதான் நாம கிழே இருந்தே சுற்றி பார்க்கலாமே)//

  ஹல்ல்ல்ல்லோ ( வடிவேலு )

  ReplyDelete
 4. சித்ரா மேடம் உங்களை மாதிரி ஸ்மார்டாக உள்ளவர்கள் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து ஒரு பதில் தருவீரகள் என்று எதிர் பார்த்துதான் இந்த கேள்விகள் கேட்டேன். ஆனால் கேள்வி கேட்ட என்னிடமே கேள்வியே பதிலாக தந்துள்ளிர்கள்.

  ReplyDelete
 5. ///முதல் படத்திலுள்ளவர்கள் சகோதரியாகவும் இருக்கலாமே..////
  உங்கள் மனதில் நல்ல சிந்தனைகள் உள்ளன. அதனால் நல்ல பதில்கள் உங்களிடம் வந்துள்ளன...

  ///ஹல்ல்ல்ல்லோ ( வடிவேலு )///// இதை நீங்கள் கொடுத்த அவார்டாக எடுத்து கொள்கிறேன். நன்றி சாந்தி மேடம்.

  ReplyDelete
 6. என் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு திறமைவாய்ந்த பதிவாளர்கள் யாரும் உண்டோ என்று கேட்டதற்கு இரண்டு திறமை வாய்ந்தவர்கள் மட்டும் இருக்கிறாரகள் என்று தெரிந்து கொண்டேன் . சித்ரா & சாந்தி மேடம் இருவருக்கும் என் நன்றிகள். உங்கள் லிஸ்டில் வேறு யாரும் வந்து சேர்கிறார்களா என்று பார்ப்போம்

  ReplyDelete
 7. அஹா ரூம் போட்டு யோசிச்சீங்களோ?

  எனக்குத் தெரிந்த வரை:

  1 ) சில விஷயங்களில் தாடி பற்றி கேட்கக் கூடாது..ராமாயணம் தொடரில் எந்த சந்தர்ப்பத்திலும் ( காட்டில், அரண்மனையில்,குகையில்,போர்க்களத்தில்) ராமர், லட்சுமணர் யாருக்கும்
  ஒரு மில்லி மீட்டர் கூட தாடி இருக்காது..ரொம்ப சின்சியராக தினமும் இரண்டு வேளை ஷேவ் பண்ணுவார்களோ? சீதையை பிரிந்து வாடும் போது கூட சல்மான்கான் லெவலுக்கு
  புல் ஃஷேவ் பண்ணிக் கொண்டு வருவது கொஞ்சம் ஓவர்...

  2 ) நல்ல கேள்வி..சில பேருக்கு டூத் பேஸ்ட் தீர்ந்ததும் அதைப் பிதுக்கி கடைசியில் வரும் அந்த பேஸ்டை உபயோகிப்பதில் உள்ள சுகமே தனி..

  3 ) நம்பரிலேயே சொல்கிறேன்...546 கெல்வின்..

  4 ) ஆஹா...இதுவும் நல்ல கேள்வி..சில மடையர்கள் சுற்றுலா போனால் போட்டோ எடுப்பதிலேயே குறியாக இருந்து விட்டு கடைசியில் வீட்டுக்கு வந்து படங்களை கம்பியூட்டரில் பார்த்து ஆகா ஓகோ என்ன அருமையான இடம் என்பார்களே?

  5 ) ஆமாம்..மக்கள் பொறுமை இழந்து விட்டார்கள்..சில பேர் 'கம் ஆன்' 'கம் ஆன்' என்று அஃறிணைப் பொருட்களிடமும் ஆங்கிலத்தில் பேசுவார்கள்..

  :):):)

  ReplyDelete
 8. //என் கேள்விகளுக்கு பதில் சொல்ல இங்கு திறமைவாய்ந்த பதிவாளர்கள் யாரும் உண்டோ? //
  திறமைவாய்ந்த பதிவாளர்னு சொல்லிட்டிங்க...ஹீ...ஹீ...அப்போ நான் கழண்டுக்கிறேன்...:)))

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.