உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, July 30, 2011

பதிவுலகை விட்டு விடை பெறும் பதிவாளர்


பதிவுலகை விட்டு விடை பெறும் பதிவாளர்
இவ்ளோ நாளா என்னோட உளறல்கள் & கிறுக்கல்களை பொறுத்துக்கிட்டு வாழ்த்தி,  ஊக்குவித்து,  திட்டி பின்னூட்டமிட்ட அனைத்துப் ஃப்லோவர் & பதிவாளர்களுக்கு மிக நன்றி...

கொஞ்ச நாள் இந்த வலைதளத்துக்கு ஓய்வு கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதனால், Bye...Bye! ஆடி மாசத்தில் புது பொண்ணை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்க. ஆனா  வலைத்தளத்தின் புது பையனான நான் "மாமியார்' வீட்டுக்கு போறேன். அட அட நீங்க நினைக்கிறே( கனிமொழி & ராசா இருக்கிற இடம்) மாமியார் வீடு இல்லப்பா ...இப்படி எல்லாம் தப்பா நினைக்குறதே உங்களுக்கு பொழைப்பா போச்சு.

சரி சரி நீங்க எல்லோரும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்கப்பான்னு சொல்லலாம்னு நினைச்சேன் - ஆனா... ஆனா...

ஆனா என்னனு  நீங்க கேட்குற சத்தமி இங்கே கேட்குது. சத்தம் போடுறத நிறுத்தி மேல படியுங்க


வாழ்க்கையில் நாம் எல்லோருமே என்னதான் புத்திசாலியா இருந்தாலும், எவ்வளவு தான் புத்திசாலித்தனமாய் இருந்தாலும் ஒருநாளைக்கு ஒரு ஒருமுறையாவது (குறைந்தது) இளிச்சவாயன்/இளிச்சவாயி ஆகி விடுகிறோம் அல்லது ஆக்கப் படுகிறோம் எனபது மறுக்க முடியாத உண்மை இதை இல்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா அல்லது  நீங்கள் இதில் உறுதியாகத்தான்  இருக்கமுடியுமா ?இல்லை என்று நீங்கள் கூறுவிர்கள் என்றால் உங்களை நான் ஆம் என்று ஏற்றுகொள்ள வைக்க என்னால் முடியும். இல்லை என்பவர்கள் பதிவின் முடிவில் உங்களின் நிலையை வந்து பார்த்து கொள்ளுங்கள்அடுத்த மாசம்... மீண்டும் வந்து உங்களை  தொடர்ந்து அழ வைக்கப் போறேன் .உங்களுக்கு ஒரு வேண்டு கோள் நான் தமிழகம் வருவதை முன்னிட்டு யாரும் எனக்கு போஸ்டர் அடிக்கவோ அல்லது மாலை போடுவதோ வேண்டாம் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

நான் என்ன பெரிய தலைவரா என்று ஒன்று தெரியாத நீங்கள் கேட்டக கூடும் அப்படி கேட்பவர்களுக்கு ஓன்று சொல்லிக் கொள்கீறறேன், நான் வருவதை முன்னிட்டு  பாதுகாப்பு ஏற்பாடு பற்றி தமிழக முதல்வரோடு அமெரிக்க வெளித்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆலோசித்து ஏற்பாடுகளை செய்துள்ளார் என்றால் நான் பெரிய தலைவனாகத்தானே இருக்க முடியும்.

எனக்கு தமிழக அரசு  ராணுவப் பாதுகாப்பு கொடுப்பதாக உறுதி கொடுத்தால் மட்டும் மதுரைக்கு செல்லாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மதுரையில் ஒரு பெண் ( ஆனந்தி) கத்தியோடு கொலைவெறியில் இருப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரி நெல்லை பக்கம் போகலாம் என்றால் முக்காடு போட்டுதான் போக வேண்டியிருக்கும் ஏனென்றால் அங்குள்ள ஒரு பதிவாளர் (சங்கரலிங்கம் ) அங்கு வரும் பதிவாளர்களை வழுக்கட்டாயமாக  ஹோட்டலுக்கு அழைத்து  நெல்லை சாப்பாட்டை வாங்கி கொடுத்து அவர்கள் ஊர் உணவு தரமாக இருக்கிறதா இல்லையா என்பதை நம்மை வைத்து சோதித்து பார்ப்பாதாகவும் அப்படி பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் இறுதியாக  அல்வா  கொடுப்பதாகவும் தகவல். தமிழக அரசு இப்படியேல்லாம் ஆபிசரைப் போட்டு உணவு பரிசோதனைப் பண்ணுறாங்கஇறுதியாக விடை பெறும் முன் எனக்கு பிடித்த சில பாடல்களை நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்என்னதான் புத்திசாலியா இருந்தாலும் ...........காலைல பல்லு (Brush)  வெளக்குற நேரம்  நீங்க இளிச்ச வாய் தானே!!!!!!ஹிஹிஹ்ஹ்ஹிஹ்ஹ்ஹ்ஹீஹிஹிஹிநான் ஜாமினில்  வெளி வரும் நாள் (இந்திய பயண நாள் ) ஆகஸ்ட் 1 திரும்ப வரும் நாள் ஆகஸ்ட் 29. ஆனால் தினமும் அம்மையாரை ( எனது மகள்) சந்தித்து கையெழுத்து போட வேண்டும். அந்த அம்மையார் சம்மதித்து & எனக்கும் நேரம் கிடைத்தால் ஒரு சில பதிவாளர்களை சந்திக்கலாம் என் நினைக்கிறேன். அதுபோல நேரம் கிடைத்தால் வந்து பதிவும் போடுகிறேன்


மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!!

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog