Wednesday, July 20, 2011


நீண்ட காலம் வாழ..........துறவிகள் சொன்னது..

நீண்ட காலம் வாழ வழி சொல்லாடா என்று கேட்ட நண்பனுக்கு
மதுரைக்கார நண்பன்,  இமயமலை சென்று நூற்றாண்டுகளுக்கு  மேல் வாழும்
துறவிகளிடம் கேள் அவர்கள் ஆலோசனை சொல்வார்கள் என்று யோசனை சொன்னான் .

நண்பனின் யோசனைப்படி இமயமலை சென்று
அடிவாரத்திலேயே ஒரு துறவியை கண்டு,
அவர் வயது நூறு என்று தெரிந்து ஆச்சரியித்தான்.
தனக்கு உள்ள ஆசையைக் கூறி  அவரிடம்
தனக்கு அவர் கடைபிடிக்கும் ரகசியத்தை சொல்லுமாறு வேண்டினான்
தான் பால் மட்டுமே அருந்தி
தன் வாழ்வை நீட்டித்ததாகச் சொன்னார்,

அப்படியா என்றாவாறே
இன்னும் கொஞ்சம் மேலே ஏறி சென்றான்
மலை மீது ஏறியவுடன் பார்த்ததில்
நெஞ்சில் ஆச்சரியம் அதிகரிக்கக் கண்டான்.
அந்த துறவிக்கு வயது நூற்றி இருபது! அவர்
எப்போதும் கடலை மட்டும் உண்பதாகக் கூறினார்,

அப்படியா என்றாவாறே
இன்னும் கொஞ்சம் ஏறிச் செல்ல, அங்கு
இன்னுமொரு வயது முதிர்ந்த துறவியை கண்டு,
அவர் வயது அதிகமோ எனறு  கேட்க,
அவர் தன் வயது நூற்றி ஐம்பது என்று சொல்லி,
எப்போதும் பாதம் பருப்பை மட்டும் உண்பதாக கூறினார்,

அப்படியா என்றாவாறே
இன்னும் கொஞ்சம் மேலே ஏறி சென்றான்
மலை மீது ஏறியவுடன் பார்த்ததில்
அங்கு ஒரு துறவி மிகவும்
அதிக வயதாகத் தோற்றம் அளித்து நித்திரையில் இருந்தார்,


இருநூறு வயதேனும் இவருக்கு இருக்கும் என்று
ஒருவாறு நிர்ணயித்து , நித்திரையை கலைத்தால்
அவர் கோபப்பட்டு ரகசியத்தை சொல்லாமல் இருந்துவிடுவார்
என்று எண்ணி அமைதியாக சுற்றும் முற்றும் பார்த்தான்


பல மது பாட்டில்கள், சிகரெட், கஞ்சா வகைகள்
பல கிடப்பதை பார்த்து ஆச்சிரியம் கொண்டு
அவர் நித்திரை கலைந்ததும்
தீய வழக்கமென ஒதுக்குவதை எல்லாம்
நீங்கள் கொண்டிருந்தும், எப்படி நீங்கள் இரு நூறு  ஆண்டு  வாழ்கிறிர்கள்
என்று கேட்க, கோபக்கனல் பறந்திட சொன்னார்.

என்ன நக்கலா எனக்கு வயது முப்பதுதான் ஆகிறது
ஒடிப்போ இல்லையென்றால் உன்னை'கொன்று விடுவேன் என்றார்

5 comments:

  1. அதிக நாள் வாழும் அபூர்வ ரகசியத்தை
    மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்
    சொல்லிச் சென்ற விதம் ரசிக்கும்படியாகவும்
    மனதில் பதியும் வண்ணமும் உள்ளது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ரமணி சார்

    ReplyDelete
  3. நல்லாயிருந்துச்சு

    கடைசில பாத்த சாமியார் வேற காரணம் சொல்லுவாரோன்னு பார்த்தேன். நகைச்சுவையா இருந்துச்சு :)) சிந்திக்கவும் வச்சுசு

    ReplyDelete
  4. கூகுள் சர்ஸ் இஞ்சினில் நகைச்சுவையை தேடிய போது உங்கள் தளத்தை பார்க்க நேர்ந்தது. தரமான நகைச்சுவை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சமுதாயத்தின் உண்மைநிலையை படம் பிடிக்கும் சிரிக்க + சிந்திக்க வைத்த கவிதை.

    வாழ்த்துக்கள்.

    தமிழார்வன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.