தமிழக பத்திரிக்கைகளுக்கு எதிராக விஜயகாந்த் கடும் கண்டணம்
சென்னை லயோலா கல்லூரியில் தனது மகனுக்கு சீட் கிடைக்காத காரணத்தை தெரிந்து கொள்வதற்காக தமிழக எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று கல்லூரி சென்று கல்லூரி முதல்வரை சந்தித்து அதற்கான காரணத்தை கேட்டார்.
அதற்கு அந்த கல்லூரி முதல்வர் மிகவும் அமைதியாக சொன்னார். நான் உங்கள் பையனின் மார்க் சீட்டை மிகவும் கவனமாக பார்த்தேன் அதன் பிறகு உங்கள் மகனிடம் படிப்புக்கும் உனக்கும் ரொம்ப தூரம் என்று சொல்லி அதனால் இங்கு அவனுக்கு இடம் இல்லை சொன்னேன். இதில் என்ன தவறு என்று கேட்ட்டார்.
உடனே விஜயகாந்த் ஒ..அதுதான் காரணமா நான் என்னவோ அந்த வடிவேல் பையந்தான் உங்ககூட சேர்ந்து சதி பண்ணிட்டானோ என்று நினைத்தேன் என்று சொல்லி நன்றி கூறி விடைப் பெற்றார்.
அதன் பிறகு அவர் கட்சி ஆபிஸ் போய் கட்சி நிர்வாகிகளை சந்தித்து லயோலா கல்லூரி முதல்வர் மிகவும் நல்லவர் அவர் நம்ம பையனிடம் படிப்புக்கும் உனக்கும் ரொம்ப தூரம் என்று சொல்லி சீட் கொடுக்க மறுத்திருக்கார். அதனால் அவனை நான் அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்க வைக்க போறேன். அதுதான் அவனுக்கு வெகுதூரம் என்று சொல்லியதை தப்பா புரிஞ்சுக்கிட்டா பத்திரிக்கையாளர்கள் தவறாக செய்தி போட்டதால் அவர்களுக்கு நான் எனது கடும் கண்டணத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று சொன்னார்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.