Sunday, July 3, 2011


யாரப்பா வடிகட்டின முட்டாள் ஜெயலலிதாவா, கலைஞரா  OR கட்சிகாரர்களா?

கனிமொழியை சந்திக்க கலைஞரும், சோனியாவை சந்திக்க ஜெயலலிதாவும் டில்லி சென்ற போது  ஒரே ஹோட்டலில் இருவரும் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது சந்தர்ப்பவசமாக இருவரும் லாபியில் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். சாட் ரூமில் சாரு நிவேதா பெண்களை புகழ்வது போல கலைஞரும் அம்மாவை பார்த்து  உங்களை டிவியுலும் போட்டாவிலும் பார்த்ததை விட நேரில் பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னார். அதை கேட்டு முகம் சிவந்த அம்மையாரும் உங்களுக்கு என்ன குறைச்சல் நீங்கள் சிவாஜி கணேசனைவிட நல்ல நடிக்கிறீங்க ...உங்களின் புது ரீலிஸான "கண்ணீரில் கலைஞர்" வீடியோ பார்த்தேன் என்னமா உணர்ச்சிகரமாக அழுகுற மாதிரி நடிச்சிரிக்கீங்க. யப்பா...சூப்பர் நடிப்பு.....

அம்மாவும் நகைச்சுவையாக பேசுவதை கண்ட கலைஞர் அம்மாவை தன்னுடன் வந்து தேநீர் அருந்துவதற்காக அழைத்தார்.அவரும் சரியென்ற வாரு அவருடன் அமர்ந்து தேநீர் அருந்தியபடி பேச தொடங்கினார்கள். கடைசியாக அவர்களின் பேச்சு கட்சிகாரர்களின் முட்டாள்(Foolness) தனத்தை பற்றி திரும்பியது.

தன்னுடைய கட்சிகாரனைப் போன்ற ஒரு முட்டாளை இந்த உலகத்தில் வலை வீசித்தேடினாலும் எங்கும் கிடைக்கமாட்டான்என்று கலைஞர் சொன்னார்.

இதை ஒத்துக்கொள்ளாத அம்மையார்என்னுடைய கட்சிகாரனைப் போன்ற ஒரு வடிகட்டிய முட்டாள் யாருமே இருக்க முடியாதுஎன்றார்.

அவர்களுக்குள் அதை அப்போதே நிரூபித்துப் பார்க்க விரும்பினார்கள்.

கலைஞர்  ருமுக்கு வெளியே இருந்த தன் கட்சிகாரரை ரூமுக்குள் அழைத்தார்

யெஸ் தலைவாஎன்ற படி கலைஞரின் கட்சிகாரர் ராசா உள்ளே ஓடி வந்தார்.

அவரிடம் ஒரு பத்து ரூபாய் சலவைத்தாளை எடுத்து நீட்டிநீ போய் உடனடியாக புத்தம்புதிய மாருதி .ஸீ. கார் ஒன்று உனக்குப்பிடித்த ஏதாவது ஒரு கலரில் வாங்கிக்கொண்டு சீக்கரமாக வந்துடுஎன்றார்.

அவரும்சரி. தலைவா.” என்று கூறி அவர் கொடுத்த பத்தே ரூபாயுடன் ரூமை விட்டு வெளியேறினான்.

இதைப்பார்த்து தனக்குள் லேசாகச் சிரித்துக்கொண்ட அம்மையார் தன் கட்சிகாரரை ரூமுக்குள் அழைத்தார்

என்னம்மாஎன்ற படி பன்னிர்செல்வம் என்ற கட்சிகாரர்  உள்ளே ஓடி வந்தார்.

பன்னீர்செல்வம், இப்போது மணி 10 ஆகப்போகிறது. நான் மிகச்சரியாகப் பத்து மணிக்கு தாஜ் ஹோட்டலில் ஒரு அவசர மீட்டிங்கில் இருக்க வேண்டும். நீ உடனே ஓடிப்போய் தாஜ் ஹோட்டல் மீட்டிங்கில் நான் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு வந்து என்னிடம் சொல்ல வேண்டும், இது மிகவும் அவசரமான விஷயம், தாமதிக்காமல் உடனே புறப்படுஎன்றார்.

பன்னிர்செல்வமும்சரிம்மாஎன்று சொல்லி விட்டு அந்த ரூமை விட்டு வெளியேறினார்

வெளியே வந்த ராசாவும், பன்னீர்செல்வமும்  ஆற அமர ஒரு மரத்தடியில் நின்று தங்களுக்குள் தங்கள் கட்சிதலைவர்களைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.

என் தலைவர் மாதிரி ஒரு முட்டாள் இருக்க முடியாது. புத்தம் புதிய ஹோண்டா .ஸி. கார் உடனடியாக வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். கார் வாங்க 10 ரூபாய் பணத்தையும் கொடுத்து விட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை, கார் விற்பனைக்கடைகள் எதுவும் திறந்திருக்காது என்று கூடத் தெரியாத முட்டாளாக இருக்கிறார்என்றார் ராசா, பன்னீரிடம்

உன் தலைவாரவது பரவாயில்லை. இன்று இல்லாவிட்டாலும் நாளை கார் வாங்கிக்கொள்ளலாம். எங்க தலைவி 10 மணிக்கு தாஜ் ஹோட்டல  சோனியா கூட மீட்டிங்கில் இருக்கணுமாம். நான் தாஜ் ஹோட்டலுக்குப்போய் அவர் அங்கே இருக்கிறாரா என்று பார்த்து வந்து சொல்லணுமாம். சுத்த வடிகட்டின முட்டாளாக இருக்கிறார். தன் டேபிள் மீது டெலிபோன் வைத்திருக்கிறார். தாஜ் ஹோட்டலுக்கு டயல் செய்து அவர் அங்கு இருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதை விட்டுவிட்டு, என்னை இந்த வேகாத வெய்யிலில் அலையவிடுகிறார், பார்என்றார்.



நான் படித்த ஜோக்கை மாற்றி இங்கே தந்துள்ளேன். இது ஒரு பழைய சரக்கை நான் புதிய பாட்டிலில் தந்துள்ளேன்.

2 comments:

  1. ithu konjam overaa thaan irukku... rasiththen.. vaalththukkal

    ReplyDelete
  2. தமிழக மக்கள் தான் .



    இருந்தாலும் தங்களின் கற்பனை மிக அருமை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.