Thursday, July 7, 2011

கலைஞர் தலைமையில் டில்லியில் சிறை நிரப்பு போராட்டம்.(அதிரடி அறிவிப்பு)

என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே டில்லியில் சிறை நிரப்பு போராட்டம் அறிவித்து உள்ளேன். இது ஒரு ஆரம்பமே. இந்த போராட்டம் மூலம் தில்லி திஹார் சிறைச்சாலையை தமிழ் மயமாக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அதற்கு முதல் காரியமாக திஹார் சிறைச்சாலையின் பெயரை மாற்றி அதனை அண்ணா அறிவாலயம் என்றோ அல்லது அறிஞர் அண்ணா காப்பகம் என்றோ மாற்ற வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை அதற்கு அடையாளமாகத்தான் இந்த போராட்டம். இந்த போராட்டத்திற்கு மத்திய அரசாங்கம் செவி சாய்க்கும் என்று நம்புகிறோம். அப்படி இல்லாமல் மத்திய அரசாங்கம் நமக்கு எதிராக எடுத்தால் இந்த கருணாநிதி தில்லி சிறைக்கு செல்லவும் அஞ்சமாட்டான் என்பதை இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கருணாநிதி பாம்பு பல்லிகளுக்கு இடையே பாளையங்கோட்டை சிறையில் இருந்தவன்.அப்படி சிறையில் இருந்ததால்தான் தமிழகத்தை ஆள வாய்ப்பு கிடைத்தது.அதுபோல கனிமொழியும் தில்லி சிறையில் இந்த இள வயதில் இருப்பதால் அவருக்கு மத்திய அரசை ஆளும் வாய்ப்பு எதிர்காலத்தில் மிகப் பிரகாசமாக இருக்கிறது.
அதனால் உடன் பிறப்புகளே மனம் சோர்ந்து விடாமல் இந்த போராட்டத்தில் கலந்து தில்லி திஹார் சிறையை நமது தமிழ்மக்களால் நிரப்பிவிடுவோம். அதற்கு முன்னேற்பாடாக தயாநிதியை அந்த சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுகிறேன்.

இதன் மூலம் வலைபதிவாளர்களும் இந்த போராட்டதில் கலந்து கொள்ள அழைக்கிறேன்.என்னுடன் நீங்களும் சிறைக்கு சென்றால் உங்கள் பதிவுகளுக்கான விஷயங்களை நானே அழகு தமிழில் எழுதி தருகிறேன் என்று உறுதி அளிக்கின்றேன்,
வாழ்க தமிழ்!!!!! வளர்க இந்த தமிழ் சிறைக்கூடங்கள்!!!!!!!!!!!!
-----
நீங்கள் இதைப் படித்தீர்களா ....படிக்காதவர்கள் படிக்க
07 Jul 2011

2 comments:

  1. தமிழகத்தை ஆள வாய்ப்பு கிடைத்தது.அதுபோல கனிமொழியும் தில்லி சிறையில் இந்த இள வயதில் இருப்பதால் அவருக்கு மத்திய அரசை ஆளும் வாய்ப்பு எதிர்காலத்தில் மிகப் பிரகாசமாக இருக்கிறது.///
    enna oru kandupidippu..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.