உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 27, 2010

ஹெல்த் டிப்ஸ் - மலச்சிக்கல்

நம் மூதையர் காலத்தில் இருந்து தற்காலம் வரையுள்ள அநேக பேர்களுக்கு உள்ள பிரச்சனை மலச்சிக்கல் பிரச்சனை ஆகும். தற்போது எடுத்துள்ள சர்வேயின்படி உலகத்திலுள்ள 10 % க்கும் மேலே உள்ளவர்கள் மலச்சிக்களால் அவதிப்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதற்கு 70 க்கும் மேற்ப்பட்ட மருந்துக்கள் உள்ளன. டாக்டர்கள் எப்போதுமே மருந்துக்கள் எழுதி தருவார் அல்லது நிறைய காய்கறிகள், பழம். தண்ணீர் & உடல் பயிற்ச்சி செய்ய கூறுவார்கள்.
மருந்துக்கள் முலம் சரி செய்வது ஒகே என்றாலும் அது இயற்கையான வழியாகாது. இதை மனதில் வைத்து வலையில் மேய்ந்த போது சில நல்ல பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அந்த குறிப்புகள் நல்ல உபயோகமாக இருக்கும் என்று தோன்றியதன் விளைவே இந்த ஹெல்த் டிப்ஸ் பக்கம். இதை நம் தமிழ் உலக மக்களுக்கு பயன் பட வேண்டுமென்று அதை நான் இங்கு தருகின்றேன்.


ஒவ்வொரு நாளும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். எப்போது மலம்வரும் போல இருக்கும் போது உடனே கழித்துவிட வேண்டும். அடக்கி கொண்டு பிறகு போகலாம் என்று நினைக்க கூடாது.


டாய்லெட்டில் எப்படி உட்காரவேண்டும் என்பது மிக முக்கியம். கீழேயுள்ள படத்தை பாருங்கள்.

படத்திலுள்ள படி முன்புறமாக 45-50 டிகிரி சாய்ந்த படி உட்கார்ந்தால் மலவாய் தளர்வாகவும், நேவாகவும் இருப்பதால் எந்த வித முயற்ச்சியில்லாமல் எளிதாக மலம் போகலாம். காலை படத்தில் உள்ளபடி வைக்கவும்.. இது மலம் கழிப்பதற்கு மிகவும் குட் பொஸின் ஆகும்.ரொம்ப மலச்சிக்கல் உள்ளவர்கள் எனிமா முறையை கடைப் பிடிக்கலாம்.. இதற்கு என மருத்துவ கடையில் எனிமா சிரின்ஸ் விற்ப்பார்கள் அதை வாங்கி உபயோகிக்கலாம்.எனிமா சிரின்ஸ் படம் கிழேயுள்ளது.


சிம்பிள் சால்ட் வாட்டர் எனிமா எளிதானது. மிதமான வார்ம்முள்ள 4 கப் வாட்டரில்( 8 oz = 1 cup) 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கரைத்து உபயோகிக்கவும். நெட்டில் நீங்கள் வேறுவிதமான முறைகளையும் காணலாம்.
இது உபயோகமாக இருக்கும் என்று தோன்றினால் இதை தேவைப்படுபவர்களுக்கு சொல்லுங்கள்

2 comments :

  1. syringe/enima எல்லாம் இருக்கட்டும்...எங்க ஊரு பழக்கம்..இரவில் ஒரு மலை வாழைபழம்,சுடு தண்ணி போதும்..காலையில் நீச்ச தண்ணி குடிப்பாங்க...இதுவும் கூட ஒரு வகையான மலமிளக்கி...நன்றி உங்கள் தகவலுக்கு!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog