உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, August 28, 2014

மெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க!?

 


கொஞ்சம் அரசியல் , கொஞ்சம் விஜய்டிவி ,கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் அட்வைஸ், கொஞ்சம் காமெடி கலந்து நான் பகரும் பதிவு இது படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் பகிர்ந்துவிட்டு போங்க மக்களே


கொஞ்சம் அரசியல் , கொஞ்சம் விஜய்டிவி ,கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் அட்வைஸ், கொஞ்சம் காமெடி கலந்து நான் பகரும் பதிவு இது படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் பகிர்ந்துவிட்டு போங்க மக்களே


கொஞ்சம் அரசியல்
கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
2 பேரின் சொத்து கணக்கையும் எளிதில் கணக்கிட முடியாது
# என்ன நான் சொல்லறது


நம்ம தமிழ் இன தலைவருக்கு சட்டசபைக்கு செல்ல உடல் நலம் இடம் கொடுக்கவில்லை.
ஆனால் தன் பேரப்புள்ளையின் பட ப்ரீவ்யூக்கும் மட்டும் போக உடல் வளைந்து கொடுக்குதாம்
# என்னடா உலகம் இது
Teso-kalaiganr's old tamil eelam drama
டெசோ கூட்டிய அவசரக்கூட்டத்தில் ராஜபக்ஷே ஐநாவில் கலந்துகொள்ள எதிர்ப்பு
டெசோ கூட்டத்தினரே கொஞ்சம் அடக்கி வாசிங்க இல்லையென்றால் ராஜபக்ஷே இந்திய பாராளுமன்ற கூட்டத்தில் பேச மோடி அரசாங்கம் அழைப்புவிடுக்க போகுது..
# என்ன நான் சொல்லறது


அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு!
அரசிடம் சம்பளம் பெறும் ஜனாதிபதி பிரதமர் முதலமைச்சர் எம் பி, எம்.எல்,ஏ மேயர்கள், கவன்சிலர்கள் எல்லாம் அரசாங்க ஊழியர்கள்தானே அவர்களும் சொத்து கணக்கை தாக்கல் செய்வார்களா


இந்தியாவில் எல்லோருக்கும் பொது சட்டம் இருந்தாலும் தமிழக மக்கள் கடைபிடிப்பது என்னவோ அம்மா சட்டம்தான்


கொஞ்சம் விஜய்டிவி :


புருஷங்காரன் ஏதாவது சொல்லி மனைவி கண்கலங்கினா பாவி மனுஷன் பொண்டாட்டிய கண் கலங்க வைக்கிறானே இவனெல்லாம் உருப்புடுவானா என்று காறி துப்பும் இந்த உலகம் விஜய்டிவிகாரன் நம்ம மனைவி மற்றும் தாய்மார்களை கண்கலங்க வைக்கும் போது மட்டும் அமைதியாக இருக்குதே
# என்னடா உலகம் இது


பாகிஸ்தான் திவிரவாதிகளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் அவர்களை சிறையில் போட்டு நீயா நானாவை பார்க்க சொல்லுவதுதான்


ஐஸ் பக்கெட் சேலஞ்சாம் ரைஸ் பாக்கெட் சேலஞ்சாம். அடே விஜய்டிவி பார்த்துட்டு அழுகாம இருந்தா அதுவே சேலஞ்சுதான்
# என்ன நான் சொல்லறது


விஜய் டிவியால் நடக்கும் ஒரு நல்ல காரியம் மனைவியை கணவர் திட்டுனதால அழுகிறாளா அல்லது விஜய்டிவி பார்ப்பதால் அழுகிறாளா என்பது யாருக்கும் தெரியாது


விஜய்டிவிக்கு தமிழ் மக்கள் நன்றி சொல்லதான் வேண்டும் அவர்கள் மட்டும் இல்லையென்றால் மக்களுக்கு அழுகும் உணர்ச்சி என்பது இல்லாமலே போயிருக்கும்


கொஞ்சம் அட்வைஸ்

கணவனை பிடிக்காத மனைவிகளுக்கு கிடைக்கும் வரப் பிரசாதம் பிள்ளையார் சதுத்திதான். பிள்ளையாரை காசு கொடுத்து வாங்குவதற்கு பதிலாக கணவணிடம் நைசா பேசி அவரையே பிள்ளையாராக உட்கார வைச்சி கடைசியில் கடலில் தூக்கி ஏறிஞ்சிடலாமே? கொலைப்பலி உங்க மேல் விழாது அல்லவா?


கொஞ்சம் சந்தேகம்


கத்தி படம் முதலில் வெளிவருமா அல்லது தமிழக சட்டசபை தேர்தல் முதலில் வருமா?


கொஞ்சம் சிந்தனை :


சுதந்திரம்
காந்தி வாங்கி கொடுத்தது அல்ல
இங்கிலாந்துகாரன்
நமக்கு விட்டு சென்றது
# என்ன நான் சொல்லறது


இந்தியாவிற்கு சுதந்திரம்
இங்கிலாந்துவிடம் இருந்து கிடைத்தது
ஆனால்
இந்திய தலைவர்களிடம் இருந்து இன்னும்
இந்திய மக்களுக்கு கிடைக்கவில்லை
அதனால்தான் இந்திய மக்கள்
இன்னும் அடிமை சிந்தனை கொண்டவர்களாகவே
இருக்கிறார்கள்


சுதந்திரம் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை இந்தியாவிடம் இருந்து இங்கிலாந்திற்குதான் கிடைத்தது அதனால்தான் இங்கிலாந்து இன்னும் வளர்ந்த நாடாக இருக்கிறது


கொஞ்சம் காமெடி :
டி.ராஜேந்தரின் இசைக்கு சூப்பர் ஸ்டார் விஜய் ஆடிய டான்ஸ்


நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy
அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. அருமை!//கொஞ்சம் 'தாராள'மாவே,விஜய் டீ.வீ ய கலாய்க்கிறீங்க!///இதுவும் ஒரு வகை விளம்பரம் தான்!(காசு வாங்குங்க,அந்த டீ.வீ கிட்டேருந்து,ஹ!ஹ!!ஹா!!!)

  ReplyDelete
 2. என்ன இருந்தாலும் சன் டிவியோட கம்பேர் பண்றப்ப விஜய் டிவி எவ்ளொவோ பரவால்ல சார், அப்புறம் வழக்கமான் உங்கள் உள்குத்துகளும் அருமை...

  ReplyDelete
 3. நாங்க சொல்ல ஒண்ணுமே இல்லை சகா:)) என்ன நான் சொல்றது என்று எல்லாத்தையும் நீங்களே சொல்லீடிங்க:)) விஜய் டான்ஸ் டி.ஆர் ம்யூசிக் சான்சே இல்லை:)))

  ReplyDelete
 4. ஹஹாஹா மெயில் பாக் ஃபுல்லும் (கொஞ்சம் சிந்தனையைத் தவிர) இப்படி காமெடி மிக்ஸ் பண்ணிக் கொடுத்தா நாங்க என்ன பண்றதாம்...வயித்தப் பிடிச்சுட்டு உக்கார வேண்டியதுதான்.....பூரிக்கட்டை போச்சுதாம், விஜய் டிவி வந்துச்சாம் டும் டும் டும்....

  கொஞ்சம் சிந்தனை அல்ல நிறையவே சிந்தனை.....

  கலக்கல் மிக்ஸ் விஜய் அண்ட் டி ராஜேந்தர்.....ஐயோ தாங்கலடா சாமி.....

  ReplyDelete
 5. அனைத்தையும் படித்து பார்த்து ரசித்தேன்.
  ஆமாம்.... விஜய் டீவி மேல் உங்களுக்கு அப்படி என்ன கோபம்.....?
  நான் டீவி நிகழ்ச்சிகள் எதையும் பார்ப்பதில்லை. இருந்தாலும் யார் வீட்டிற்காவது சென்றால்
  பார்க்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.....(
  அப்படி பார்த்த போதும் நீங்கள் சொல்வது போல் அழும் நிகழ்ச்சிகளும் அதில் இல்லை.

  மதுரைக்காரரே..... நான் நினைக்கிறேன்... மாமி பொழுதேனிக்கும்
  விஜய் டீவி பார்ப்பதால் உங்களுக்கு அதன் மேல் வெறுப்பு வந்திருக்கிறது என்று.
  மற்ற டீவிகளையும் பார்த்து நிறைகுறைகளைச் சொல்லுங்கள்.

  இந்தப் பதிவில் கொஞ்சம் சிந்தனை என்ற பகுதி மிக சிறப்பு. வித்தியாசமாக உள்ளது.

  ReplyDelete
 6. vijai dance with T.R. MUSIC super this piece I LIKE IT

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog