Friday, August 22, 2014

avargal unmaigal

டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா?






டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா? Doctor VS Public!





டாக்டர் மற்றும் மக்களிடையே இருந்த கொஞ்ச நஞ்ச உறவை தனது டிவி ரேட்டிங்காகவும் தனது சம்பள உயர்வுக்காகவும் மேலும் கெடுத்து அவ நம்பிக்கையை விதைத்து சென்றது மட்டுமே இந்த ஷோமூலம் கோபி நாத் செய்த சமுக சேவை...





இந்த ஷோ மூலம் கோபி நாத் எந்த விஷயத்தை பேசவருகிறார். அனைத்து டாக்டர்களும் மோசம் என்றா? அப்படிதான் என்றால் யார் யார் அந்த மோசமான டாகடர்கள் என்று இன்வெஸ்டிகேட் பண்ணி அவர்களின் முகத்தை இந்த ஷோமூலம் தோல் உறித்து இருக்கலாம் அப்படி செய்து இருந்தால் மக்களுக்கு இது பயன் அளித்திருக்கும் அல்லது நாட்டில் நல்ல டாக்டர்களும் இருக்கிறார்கள் என்று சொல்ல முயண்ரு இருந்தால் அப்படி பட்ட டாக்டர்கள் யார் யார் என்றாவது சொல்லி இருக்கலாம் அல்லது நடப்பது எல்லாம் டாக்டர்களின் தவறுகள் அல்லது அந்த டாக்டர்கள் பணிப்ரியும் ஹாஸ்பிடல்களின் நிர்வாகத்தினர்தான் காரணம் என்று சொல்லி அவர்கள் யார் யார் என்று சொல்லி அவர்களின் முகத்திரைகளை கிழித்து இருக்கலாம். அல்லது இந்த நிர்வாகத்தினருக்கு பக்க துணையாக இருக்கும் அரசியல் தலைகளை சுட்டி காட்டி இருக்கலாம் ஆனால் அப்படி எல்லாம் பண்ணாமல் குட்டையை கலக்கிய எருமையாகவே இந்த ஷோவை நடத்தி சென்று இருக்கிறார்.




கோபிநாத் டாக்டர்களின் மீது ஏதோ ஒரு காரணத்தினால்தான் இப்படி அவர்களை ரவுண்ட்கட்டி அவர்கள் மீது சேற்றை வாரி இரைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். இப்படி இதை நான் சொல்வதால் நான் டாக்டர்கள் எல்லாம் மிக நல்லவர்கள் என நான் சப்பை கொட்டவில்லை. சில டாக்டர்கள் ஏதோ ஒரு காரணத்தில்தான் இப்படி அநியாம செய்கிறார்கள் அதை யாரும் மறுப்பதற்கில்லை அது ஊர் உலகத்திற்கே தெரிந்த விஷயம்தான் ஆனால் அதையே ஒரு ஷோவாக்கி டாக்டர்கள் மட்டும்தான் இந்த சமுகத்திற்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதாகவும் மற்றவர்கள் எல்லாம் அப்படி எல்லாம் இல்லை என்று இந்த சமுகத்தை மாற்ற வந்த தேவதூதானக தன்னை கோபிநாத நினைத்து அவர்களை இப்படி பப்ளிக்காக அடித்து துவைத்து இருக்கிறார்.




ஒரு காலத்தில் மருத்துவர்களிடம் அக்கறையும் தொழில் நேர்மையும் பக்தியும் இருந்தது. தான் வசூலிக்கும் கட்டணத்தை விட நோயாளி குணமடைந்ததில் மிக திருப்தியும் பெருமிதமும் நிறைவும் இருந்தது. அப்படிபட்ட காலகட்டத்தில் மருத்துவம் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் அவரவர்களுக்கு ஒரு பெருமையும் அர்ப்பணிப்பும் இருந்தது. ஆனால் இன்று போல பணத்தை வைத்தால்தான் சிகிச்சை என்று சொல்லும் மருத்துவர்களும் ஹாஸ்பிடல்களும் அப்போதில்லை, பணத்தை வாங்கி கொண்டு செய்தியாக்கும் ஊடகக்காரர்களும் அப்போது இல்லை, அப்படியே இருந்திருந்தாலும் அவர்கள் வெகு சிலரே. அப்படி சம்பாத்தித்த அவர்களும் வெளியில் அப்படிச் சம்பாதிப்பதை வைத்து அலட்டிக்கொள்ள முடியாத ஒரு சமூக முடக்கத்தில் இருந்தார்கள். ஆனால் இன்று பணமும் அதன் வழி பகட்டுமே கௌரவம் என்றும், நேர்மை பிழைக்கத் தெரியாதவனின் பிதற்றல் என்று ஆகி விட்டது, எல்லா துறைகளிலும். இப்படி எல்லா துறைகளிலும் உள்ளபடிதான் மருத்துவ துறையிலுமிருக்கிறது இப்படி இருக்க டாக்டர்களை மட்டும் கழுவி கழுவி கொட்டுவதில் என்ன நியாமுங்க




மற்ற எல்லாதுறை படிப்புகளை விட மருத்துவ துறைக்கான படிப்புக்கு லட்சகணக்கில் செலவழித்து படித்து டாக்டர் பட்டம் பெற்று வரும் டாக்டருக்கு கிடைக்கும் வருமாணம் மிக அதிகமாக இல்லை ஆனால் அதே நேரத்தில் சாதாரண இஞ்சினியரிங்க டிகிரி படித்தவர்கள் ஐடி கம்பெனிகளில் படித்து லட்சகணக்கில் சம்பளம் வாங்கும் போது இந்த டாக்டர்களும் அதிகமாக சம்பாதிக்க ஆசைப்படுவதில் தப்புவதில்லை அதனால்தான் அவர்கள் அதிகம் சம்பளம் தரும் ஹாஸ்பிடலில் சேர்ந்து அவர்களின் சொல்படி நடந்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முற்படுகிறார்கள் அதில் என்ன தவறு? டாக்டர்களை குறை சொல்ல வேண்டும் என்றால் இப்படி அதிகனான டெஸ்டுகள் எடுத்தும் நோயை கட்டுபடுத்த முயற்சிக்கவில்லை என்றால்தான் நாம் அவர்களை குறை சொல்ல வேண்டும் இவர்கள் உயிர்காக்கும்ம் பணியில் ஈடுபடுவதால் அவர்களை கடவுள் ஸ்தானத்திற்கு உயர்த்தி அவர்களிடம் இருந்து நாம் ரொம்ப எதிர்பார்க்கிறோம் இது அவர்களின் தவறு அல்ல நமது தவறுதான்.




டாக்டரகள் அநியாமாக சம்பதிக்கிறார்கள் என்று சொல்லும் சமுகமே எந்த துறையில்தான் நேர்மையாக சம்பாதிக்கிறார்கள் என்று ஏதாவது ஒரு துறையை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா? சாதாரண ஆட்டோ டிரைவர் ஆட்டோவிற்கு நிர்ணயத்த தொககையை விட மிக அதிகமாக வசூலிக்கிறான். பள்ளி ஆசிரியன் பள்ளியில் சொல்லிதரவேண்டியதை டியூசனில் சொல்லி தந்து சம்பாதிக்கிறான் அரசாங்க அதிகாரிகள் அரசு தரும் சம்பளத்தை வாங்கி அதற்காக உழைக்காமல் தனக்கு கிடைக்கும் கிம்பளத்தை வாங்கி அப்படி தரும் ஆட்களுக்கு மட்டும் வேலையை செய்து முடிக்கிறான். அரசாங்கம் நிர்ணயித்த கட்ணத்தைவிட மிக அதிகமாக வாங்கி கல்வி என்ற பெயரில் சமுகத்திற்கு உதவாத கல்வியை தருகிறார்கள் மக்களுக்கு சேவைசெய்வதாக சொல்லி வந்த தலைவர்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடித்து அயல்நாடுகளில் சேமித்து வைக்கின்றனர் சினிமா துறையினரோ, மீடியா துறையினரோ மக்களின் மனதில் நஞ்சை விதைத்து அதை பார்க்க மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இப்படி செய்யும் யோக்கியர்களாக இருக்கும் இவர்கள்தான் டாக்டர்கள் அநியாமாக சம்பாதிக்கிறார்கள் என்று குறை கூறுகின்றனர். இவர்களின் உயிரைகாக்கும் டாக்டர்கள் மட்டும் நியாமாக சம்பாதிக்க வேண்டுமாம் ஆனால் இவர்கள் எல்லோரும் அநியாமாக சம்பாதிப்பார்களாம். என்னங்கடா உங்கள் நியாம்



ஏண்டா டாக்டர்களுக்கு மட்டும் வாயும் வயிரும் குழந்தைகளும் குடும்பங்களும் இல்லையா என்ன? நான் கேட்கிறேன் டாக்டர் என்று சொன்னால் ஆட்டோகாரன் நியாமான கட்டணத்தை வாங்குவானா? டாக்டரின் குழந்தைகள் படிக்க சென்றால் நீயாமான கல்விகட்டணம் வசூலிப்பீங்களா? டாக்டர் வீடுகட்டினால் அதற்கு லஞ்சம் வாங்காமல் அனுமதி தருவீங்களா? டாக்டர் காய்கறி வாங்கினால் நியாமான விலையில்தான் தருவீங்களா? சரியாக படிக்காத டாக்டர் குழந்தைகளுக்கு பணம் வாங்காமல் டியூசன் சொல்லி தருவீங்களா? இப்படி பலவற்றையும் கேட்கலாம் ஆனால் எல்லாவற்றிற்கும் உங்கள் பதில் இல்லை என்பதுதான்.



இல்லை நாங்கள் அவர்களுக்கு வேண்டியதை நியாமான மூறையில் செய்து தருவோம் என்று உறுதி தந்தால் அவர்களும் உங்களுக்கு நியாமான முறையில் சிகிச்சைஅளிக்க முயல்வார்கள்..



கோபிநாத்திலிருந்து டாக்டரை குறை கூறுபவர்கள் எல்லாம் முதலில் உங்கள் பின்பகத்தில் இருக்கும் அழுக்கை முதலில் கழுவுங்கப்பா?



Neeya Naana | நீயா நானா 08:17:14-
A doctor's reply 
கோபிநாத்திற்கு ஒரு டாக்டர் ஒருவரின் பதில்






தொடரும்.........





அன்புடன்
மதுரைதமிழன்



Doctor VS Public!
மருத்துவர்கள் Vs பொதுமக்கள்!

The Guest Speakers are Dr. Raj Kumar and Dr. Pugazhendhi.


15 comments:

  1. மதுரை தமிழா, ஒவ்வொரு பீச்சா போய் குடும்பத்தோட என்சாயில் இருப்பேன்னு நான் இங்க பொறாமையோடு இருந்தேன். நீ என்னானா அதை விட்டு விட்டு இங்க வந்து புலம்பி கொண்டு....

    ReplyDelete
  2. நானும் உங்களின் கட்சிதான் மதுரைத் தமிழா. கடைசி நான்கு பாராக்களுக்கு என் பலமான கைத்தட்டல்.

    ReplyDelete
  3. அட! கண்ணுக்கு எக்ஸ்சர்சைஸ் கொடுத்துட்டு இருப்பீங்கன்னு பார்த்தேன்! சமூகத்தில் ஒரு பிரச்சனையை என்றவுடன் களத்தில் குதித்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்:)

    ReplyDelete
  4. அவருக்கு இதே பொழப்பு ப்பா! ஒரு தடவை இப்படிதான் . டீச்சர்களை கழுவிக்கழுவி ஊதினார்:((
    இப்போ அதை நான் பார்க்கிறதே இல்லை:))

    ReplyDelete
  5. உண்மையில் சிந்திக்க வைக்கும் மாற்றுப் பார்வை
    எப்பொழுதும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மருத்துவர்கள் இவர்களுக்கு எதிராகவே மக்கள் இருக்கவேண்டும் என்பது ஊடகங்களின் கொள்கை. இவர்கள் நேர்மையற்றவர்கள்-சுயநலம் உடையவர்கள் பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் என்று சித்தரிக்கப் படுவதே நடை முறையாக உள்ளது. இவர்கள் அனைவரும் எங்கிருந்து வருகிறார்கள்.மக்களில் இருந்துதானே.
    வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரவர் தகுதிக்கு ஏற்ற வகையில் அனைவரும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வீடு கட்ட அனுமதி பெறுவதற்கு லஞ்சம் தர வேண்டி இருப்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஒருவராவது விதி முறையின் படி வீடு கட்டி இருக்கிறார்களா என்று பாருங்கள்.
    கட்டிடம் இடிந்து விழுந்தால் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.என்றெல்லாம் பேசுவார்கள் நீங்கள் தவறு செய்தபோது என்ன செய்து கொண்டிருந்தார்களோ அதையேதான் செய்து கொண்டிருந்தார்கள்.
    வீட்டுக்கு மின் இணைப்பு பெறும்போது இத்தனை பாயிண்டுகள் என்று சொல்லி அதற்கேற்ற வகையில் கட்டணம் செலுத்தித்தான் அனுமதி பெறுகிறோம். அதன் பிறகு கூடுதலாக பல மாற்றங்கள் செய்கிறோம் இவற்றை மின்வாரியத்திடம் தெரிவிக்கிறோமா என்றால் இல்லை. அது போகட்டும் எத்தனை திருட்டு விசிடி என்று தெரிந்தும் பார்ப்பதில்லையா என்ன? பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப் படும் விண்டோஸ் மென்பொருளை அத்தனை பெரும் காசு கொடுத்து வாங்கியா பயன்படுத்துகிறார்கள். இவர்கள் இப்படி இருப்பதில் சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்கும் பங்கு உண்டு.

    "உன்னுடை உடம்பின் வியர்வை நாற்றம் உந்தன் மூக்கு உணராது.
    முதுகில் மூட்டை அழுக்குகள் இருந்தும் முன்னால்உனக்குத் தெரியாது"
    என்று ஒரு கவிதையில் கூட சொல்லி இருந்தேன்.
    (எப்பூடி சந்தடி சாக்குல என்னோட கவிதை வரி சேத்துட்டேன் இல்ல )

    ReplyDelete
  6. நான் பார்த்து விட்டு பிறகு வந்து படிக்கிறேன்.... ஹி ஹி ஹி....

    ReplyDelete
  7. அவர் என்ன சொல்லவருகிறார் என்பது அவருக்கதான் வெளிச்சம்.

    tamil first new aggregator http://tamilveda.com

    ReplyDelete
  8. டாக்டர் சீட் ஏன் கல்லூரிகளில் அதிகரிக்க விடுவதில்லை என்று முட்டாள் தனமாக டாக்டர்களை பார்த்து கேட்டார்.

    ReplyDelete
  9. மதுரைத் தமிழா அந்த போல்ட் தமிழ் எழுத்துக்கள் பாரா சூப்பர்......கை குடுங்க.....

    ஆனா, ஒரு சில மருத்துவ நிபுணர்கள் கொஞ்சம் அதீதமாக பணம் பிடுங்கத்தான் செய்கின்றார்கள்...பணம் பிடுங்கினாலும் ஓகெ டயக்னாசிஸ் பிறழ்கின்றது.....அனுபவம்....அதைப் பற்றி ஒரு பதிவு உண்டு.....

    ReplyDelete
  10. கோயம்புத்துார் டாக்டர் பிரவின் ராஜ் சொல்வது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப் படவேண்டியதே.

    ஒரு காலத்தில் என்றில்லாமல் இந்தக் காலத்திலும் ஓர் உயிரைக் காக்கும் டாக்டரை அந்த நோயாளியோ அல்லது அவர் குடும்பத்தாரோ தன் மனத்தில் அவரைக் கடவுளாக நினைத்துப் போற்றுவதை நாம் வாழ் நாளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

    இன்று இந்த நிலைமை மாறிதற்குக் காரணம் ஏதோ ஒரு சில டாக்டர்கள் என்று சொல்வதை விட போலி டாக்டர்களே முக்கியக் காரணம்.
    அடுத்து இந்தியாவில் ஒரு இரத்தப் பரிசோதனைக்குச் சென்றால் பத்தாவது கூட படிக்காத பெண் நமக்கு இரத்தம் எடுக்கிறாள். கேட்டால் இந்த வேலையைச் செய்ய தைரியம் இருந்தால் போதும் படிப்பு எதற்கு என்கிறாள். இது நியாயமான பேச்சா என்று எனக்குத் தெரியவில்லை.
    உண்மையில் இன்றைய டாக்டர்கள், சும்மா பத்து ரூபா டாக்டராக இருந்தால் அவர்களையும் மக்கள் மதிக்கப் போவது இல்லை. ஒருவர் சேவை செய்வதற்காகவே படித்தாலும் கடைசி வரையில் அவரை இந்த உலகம் நல்லவராகவே வாழவும் வழி விடாது....

    தவிர வெளி நாடுகளைப் போல டாக்டர்களின் படிப்புக்கு நம் அரசாங்கம் எந்தவித சளுகையையும் கொடுக்க வில்லை. தன் பணத்திலேயே படித்து உயர்ந்து வரும் ஒரு டாக்டர் மக்களிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதாக இருந்தால் அவர் டாக்டர் தொழிலுக்கு வந்து தான் இதைச் செய்ய வேண்டும் என்பதில்லை.
    “உண்மைகள்“ இந்த இடுமை மிகவும் அருமையான விழிப்புணர்வு இடுகை.

    தவிர பொறுமையாகக் தன் கருத்துக்களை வெளிபடுத்திய டாக்டர் பிரவின் ராஜ் அவர்களை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. I think there is a spectrum of doctors.. Good, bad and ugly doctors. It will be nice if the percentage of good doctors are more than the other two. But the reality is.. You know what it is! :)

    I dont like the idea of "praying doctors for saving someone's life"! Let us not forget that it is his/her job and he/she has been trained for that! Moreover, he/she is highly paid for saving lives! He is not doing it for free. Is he? Dont we have enough Gods? Why do we have to create many more?? :)

    I see people those who do not have any empathy or kind heart becoming a doctor too! So, there is no need for "over respecting" doctor for doing his/her job! That's strictly my opinion.Even my mom disagrees with my view on this! lol

    ReplyDelete
  12. உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது.
    http://vaidheeswaran-rightclick.blogspot.in/2013/09/doctor-nurse-drug-politics-status-health.html

    ReplyDelete
  13. நீயா நானா நிகழ்ச்சியே இப்போது வேஸ்ட் ஆகிவிட்டது! இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை! ஒட்டுமொத்தமாக டாக்டர்களை சாடுவது தவறுதான்!

    ReplyDelete
  14. ஒட்டு மொத்தமாக டாக்டர்களைச் சாடுவது என்பது அபத்தம்.
    இந்த நிகழ்ச்சி நான் பார்க்கவில்லை... பெரும்பாலும் நீயா நானாவை விரும்புவதில்லை...
    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  15. romba arumaiya sollirukeenga :) manamaarntha vazhthukal :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.