உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, June 22, 2018

சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா?

சிறுகுறு நடுத்தரத் தொழில்கள்  அழிவதால்  பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா?

தமிழக மக்கள்  போராடியதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாக அவதூறு கிளப்பிய பக்தாள்ஸ் சட்டசபையில் அமைச்சர்  செல்லா நோட்டுப் பிரச்சனையாலும் ஜி.எஸ்டியாலும் 50,000 சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டதால் தமிழகத்தில் 5,00,000 பேர் வேலை பறிபோயிருக்கிறது" என்ற சட்டமன்ற பேச்சுக்கு பதில் பேசாமல் பொத்திட்டு பஜனை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அவர்களின் தேசபக்தி...தமிழகம் அவர்களை பொருத்தவரையில் இந்தியாவில் இல்லை

Thursday, June 21, 2018

அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்

அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்

பியூஷ் மானுஷ் என்ற சமுக ஆர்வலர் பொய் சொன்னார்,  எட்டு வழிப்பாதை பற்றி தவறான தகவல்களை மக்களுக்குக் கொடுத்தார் என்பதற்காகச் சிறையில் அடைத்திருக்கிறார்கள் . ஆனால் அம்மா இட்லி சாப்பிட்டார் டிவி பார்த்தார் . அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது அவர் குணமாகிவிட்டர் அவர் வீடு திரும்பும் நாளைத்தான் முடிவு செய்யனும் என்று சொல்லி பிணமாக கொண்டு சேர்த்தவர்கள் எல்லாம் உண்மை பேசியவர்களா ? அதனால்தான் அவர்கள் கைது செய்யப்படவில்லையா? அப்படி அவர்கள் உண்மை பேசி இருந்தால் ஏன் விசாரணை கமிசன் அமைக்க வேண்டும் அல்லது அவர்கள் பொய் பேசி இருந்தால் அவர்களை சிறையில் அல்லவா அடைத்து இருக்க வேண்டும்

Wednesday, June 20, 2018

கண்ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது

கண்ணுல தண்ணி கொட்டுதய்யா இதை பார்க்கும் போது

ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அற்பணி  செய் என்பதற்க்கு சான்றாக திகழ்கிறா  இந்த ஆசிரியர் பகவான்.  சினிமா படங்களில்  மட்டும் தான் இது சாத்தியம் என்று நாம் நினைத்திருப்போம் ஆனால்  நிஜத்துலயும் சாத்தியம்னு காட்டி இருக்கிறார் இந்த ஆசிரியர்..

பல பள்ளிகளில் இந்த ஆசிரியர் பள்ளிக்கு வேண்டாம் இவர் சுத்த மோசம் என்றுதான் பெற்றோர்களும் மாணவிகளும கூறி பார்த்திருக்கிறோம் போராடிப் பார்த்து இருக்கிறோம் ஆனால் இவர்தான் எங்கள் பள்ளிக்கு வேண்டும் என்று கூறுவதை இன்றுதான் தமிழகத்தில் பார்க்கிறேன். இதே போன்று ஒரு நிகழ்வு முன்பு வேறு மாநிலத்தில் நடந்து இருக்கிறது...

சமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா?

avargal unmaigal
சமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா?

தென்னிந்தியாவை பொருத்தவரை கடுகை தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் கடுகு ஆயிலைத்தான் அதிகம் உபயோகிக்கிறார்கள் அவர்களின் வீடுகளில் என்ன இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் கடுகு எண்ணெய் இருக்கும்

Tuesday, June 19, 2018

பிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்

பிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்  2020 CHENNAI TO RUN OUT OF UNDERGROUND WATER

///சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும்; வரலாற்றில் இல்லாத தண்ணீர் பிரச்சினை: நிதி ஆயோக் எச்சரிக்கை//

காவிரியில் தண்ணி வரலை அதனால அதை சார்ந்த மக்கள் என்ன செத்தா போயிட்டார்கள் அது போல சென்னையில் நிலத்தடி நீர் வற்றினால் என்ன நாங்கள் செத்தா போயிடுவோம்...

Monday, June 18, 2018

எனக்கு வெக்கமா இருக்கு

எனக்கு வெக்கமா இருக்கு

ஒரு ஆபிரேஷன் தியேட்டரில் ..ஒரு நோயாளிக்கு ஆபரேஷனுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருந்தார்கள் நர்சும், டாக்டரும்.

நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினார் டாக்டர்.

நோயாளி கேட்டார் "இது எதுக்கு டாக்டர் ..?"

"இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை காட்டும் கருவி"

இன்னும் ஒன்றை ஓட்டினார் .."இது எதக்கு டாக்டர் .?"

"இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி"

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog