உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, June 6, 2017

மனதை தொட்டு நெகிழ வைத்த முதல் கனவே

மனதை தொட்டு  நெகிழ வைத்த முதல் கனவே  


நமது சகோ சதிஷ் செல்லதுரை தனது  பேஸ்புக் தளத்தில் இந்த குறும்படத்தை  ஷேர் செய்து இருந்தார்.......இந்த படம் என் பழைய நினைவுகளை தூண்டிவிட்டு என்னை 20 வருடத்திற்கு பின்னால் அழைத்து சென்றது... அந்த நேரத்தில் என் மனதில் எப்படி காதல் உணர்வு மிக இனிமையாக இருந்ததோ அதை உணர்வை இன்று மீட்டி கொடுத்தது.. ஆரம்பத்தில் நகைக்சுவையாக சென்று அதன் பின் மகிழ்ச்சியை அள்ளி அள்ளிக் கொடுத்து இறுதியில் மனதை கணக்க வைத்து கண்ணீரை வரவைத்துவிட்டது...ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து சினிமா தியோட்டருக்கு சென்று பெரிய ஸ்டார்களின் படத்தை பார்த்து கிடைக்கும் திருப்தியைவிட இந்த குறும்படத்தில் கிடைக்கும் திருப்தி மிக அதிகம்....


Monday, June 5, 2017

அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சிரிப்பு (சிபாரிசு) கடிதங்கள்

avargal_unmaigal
அமைச்சர் செங்கோட்டையன்  கொடுத்த  சிரிப்பு (சிபாரிசு) கடிதங்கள்  

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒரு குழந்தை முதல் வகுப்பில் சேர பள்ளிக் கூட நிர்வாகிக்கு சிபாரி கடிதம் கொடுத்தாரம்.  அது பற்றி சமுக வளைதளங்களில் பேசி சிரிக்கின்றனர்,


முதல் வகுப்பு குழந்தை சேர சிபாரிசு கடிதம் கொடுத்த அவர் மற்ற விஷ்யங்களுக்கும் சிபாரிசு கடிதம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்த்தன் விளைவே இந்த அமைச்சர் செங்கோட்டையன்  கொடுத்த  சிரிப்பு (சிபாரிசு) கடிதங்கள்.


மிஸ். நயன்தாராவுக்கு,
அமைச்சர் செங்கோட்டையன் எழுதி கொள்வது. இந்த கடிதத்தை கொண்டு வரும்  மதுரைத்தமிழன் உங்கள் மேல் மிகவும் காதல் கொண்டுள்ளான். அதனால் தயவு கூர்ந்து அவன் காதலை ஏற்று அவனுக்கு வாழ்வு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்

போட்டோடூன் மூலம் நாட்டு நடப்பை பகடி செய்யலாமே

போட்டோடூன் மூலம் நாட்டு நடப்பை பகடி செய்யலாமே


ஸ்டாலின் முதல்வராக முடியாது, ராகுல் காந்தி பிரதமராக முடியாது: தமிழிசை
ஒரு எம்.எல்.ஏ வாக கூட ஆக முடியாத தமிழிசைக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்

ஸ்டாலின் நாடே காவிமயமாவதை போல் பேசுகிறார் ,காவிகளாக இருக்கலாம் பாவிகளாகத்தான் இருக்ககூடாது -தமிழிசை பஞ்ச்

Saturday, June 3, 2017

திராவிடர்களின் மகா பெரியவா கலைஞருக்கு வாழ்த்துக்கள்

#maha# periyava kalaignar     #hbdkalaignar94     #karunanidhi @avargal_unmaigal
திராவிடர்களின் மகா பெரியவா கலைஞருக்கு வாழ்த்துக்கள்கலைஞர் அவர்களின் 94ம் ஆண்டு பிறந்த தினம். அவரை வாழ்த்துபவர்கள் ஒரு பக்கமும் வசை பாடுபவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். பல பதிவுகளில் கலைஞரை நான் கிண்டல் பண்ணி இருந்தாலும் எனது சிறுவயதில் எனது மனதில் பதிந்த தலைவரில் இவர் ஒருவர் என்பதாலும் வாழ்த்தும் நேரத்தில் வாழ்த்துவதுதான் மனித இயல்பு என்பதால்  அவரை நான் வாழ்த்துகிறேன்.

என்னை போன்ற பலருக்கு தமிழ்மொழியை நேசிக்க கற்று கொடுத்தது கலைஞர்தான். படிக்காதவர்தான் கலைஞர் ஆனால் அவர் எழுதியவைகளை வைத்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அநேகம் அநேகம். அவரிடம் பிடித்தது மொழி மட்டுமல்ல அவரின் சுறுசுறுப்பும்தான்  அவரின் சுறுசுறுப்பும் உழைப்பும் என்னை வியக்க வைத்தது. தமிழகத்தின் தலைவராக பல்லாண்டு வலம் வந்த சாணக்கியர் இவர். அது மட்டுமல்லாமல் இப்போது உள்ள தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிதலைவர்களுக்கும் தலைவராக இருந்த ஒரு தலைவர் இவர் மட்டும்தான் இருக்க முடியும்.

அமெரிக்கா வந்தும் மாறாத மாமனார் மாமியார்

அமெரிக்கா வந்தும் மாறாத மாமனார் மாமியார் (இவ்வளவு கல்நெஞ்சக்காரர்களாகவா இருப்பார்கள்?


இந்தியாவில் இருந்து என் மாமனார் மாமியார் என் வீட்டிற்கு வந்து இருந்தனர். ஒரு நாள் இரவு எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது என் மாமனார் பசிக்குது என்றார். உடனே என் மனைவி சரி நான் தோசை சுட்டு தருகிறேன் என்றார். உடனே என் மாமனார் நீ சுட வேண்டாம்மா மாப்பிள்ளை சுட்டு தரட்டும் அவர் சூப்பாரா தோசை வார்த்து தருவார் என்றார். ஆஹா நம்ம சமையலை ஒருவர் புகழ்ந்தால் நமக்கு தலைகால் புரியாதே அதனால் நானும் சரி சுட்டு தருகிறேன் என்றேன்.

Friday, June 2, 2017

பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பெண்களா நீங்கள் அப்ப இதை கண்டிப்பாக படிக்கவும்

பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பெண்களா நீங்கள் அப்ப இதை கண்டிப்பாக படிக்கவும் ஜாக்கிரதை


பேஸ்புக்கில் மிகப் பிரபலமாக ஆயிரக் கணக்கில் பாலோவர்களை கொண்டு இருக்கும் பெண்கள் அதிலும் அடிக்கடி புரொபைல் படம் மாற்றி போஸ்டிங்க போட்டு கொண்டு இருக்கும் பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதுவும் உங்கள் கணவரிடம்...

Thursday, June 1, 2017

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?


ஒரு நாள் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது நான் அவரிடம் கேட்டேன் அம்மா நான் உனக்குதான் பிறந்தேனா அல்லது எங்காவது அனாதை ஆசிரமத்தில் இருந்து என்னை தத்து எடுத்தீர்களா என்று கேட்டேன்.


Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog