Tuesday, June 6, 2017

மனதை தொட்டு  நெகிழ வைத்த முதல் கனவே  


நமது சகோ சதிஷ் செல்லதுரை தனது  பேஸ்புக் தளத்தில் இந்த குறும்படத்தை  ஷேர் செய்து இருந்தார்.......இந்த படம் என் பழைய நினைவுகளை தூண்டிவிட்டு என்னை 20 வருடத்திற்கு பின்னால் அழைத்து சென்றது... அந்த நேரத்தில் என் மனதில் எப்படி காதல் உணர்வு மிக இனிமையாக இருந்ததோ அதை உணர்வை இன்று மீட்டி கொடுத்தது.. ஆரம்பத்தில் நகைக்சுவையாக சென்று அதன் பின் மகிழ்ச்சியை அள்ளி அள்ளிக் கொடுத்து இறுதியில் மனதை கணக்க வைத்து கண்ணீரை வரவைத்துவிட்டது...ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து சினிமா தியோட்டருக்கு சென்று பெரிய ஸ்டார்களின் படத்தை பார்த்து கிடைக்கும் திருப்தியைவிட இந்த குறும்படத்தில் கிடைக்கும் திருப்தி மிக அதிகம்....










டிஸ்கி : இந்த படம் பார்த்தது காதல் உணர்வு கட்டுக்கடங்காமல் பொங்குகிறது.... அதனால் காதலிகள் தேவை.........நயன்தாரா அமலாபால்  அனுஷ்கா ,திரிஷா ஐ ஆம ரெடி.. ஆர் யூ கேர்ல்ஸ் ரெடி


அன்புடன்
மதுரைத்தமிழன்


26 comments:

  1. அரை மணி நேரமா? ஐயோ! கதைச் சுருக்கம் போடக்கூடாதோ!

    ReplyDelete
    Replies
    1. கதையை சுருக்கமாக எனக்கு சொல்ல தெரியாதே சரி சரி நம்ம ஏஞ்சல் அவர்கள் உங்களுக்கு சுருக்கமாக கண்ணீர் விடாமல் சொல்லுவார்கள்

      Delete
  2. பார்த்து முடித்தேன் :( ரொம்ப கஷ்டமாகிடுச்சி முடிவு

    ReplyDelete
    Replies
    1. சரி நீங்க பார்த்ட கஷ்டத்தை சுருக்கமாக ஸ்ரீராமிற்கு சொல்லுங்களேன்

      Delete
  3. 20 வருடத்துக்குப் பின்னால் அழைத்துச் சென்றது/// அப்பூடியெனில் உங்கள் 40 வயது நினைவுகளைத் தூண்டியிருக்குது குறும்படம்:).

    ReplyDelete
    Replies
    1. 10 வயசிலே எனக்குள் காதல் மலரத் தொடங்கிவிட்டது அதனால் உங்கள் கணக்கு சரிவாராதே

      Delete
  4. கொப்பி பண்ண முடியாமையால் ட்றுத் என்னிடம் தப்பித்துக் கொண்டார்ர்.. நாம ஆரூஉ.. நேக்கு டமில்ல டி ஆக்கும்... அது “அழுகவைத்துவிட்டது” என பொருட்பிழை போட்டிட்டீங்களே.. நீங்க என்ன அழுகும் பொருளோ?:))

    ReplyDelete
    Replies

    1. தவறை திருத்திவிட்டேன் நன்றி

      Delete
  5. நீங்க சக்கில்லாவுக்குக்கூட ரெடியாமே:) ஆனா அவங்க ரெடி சொல்லோணுமெல்லோ:) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. வீடியோ பின்பு பார்க்கிறேன்ன்.. அஞ்சு அழுதிட்டா எனக்காக சேர்த்து:(.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஆசை அதிகம் கிடையாது அதனால் மேலே சொன்னவர்களே போது அதனால் சகிலாவிற்கு நோ

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. கொடுத்து வைத்தவர் தாங்கள்......ம்...ம்....

    ReplyDelete
  8. அருமையான படம்! ஆனால் மனதை மிகவும் நெகிழ்த்திவிட்டது. கண்ணில் நீர் வரவழைத்துவிட்டது. காலமெல்லாம் காதல் வாழ்க!!

    ---இருவரின் கருத்தும்

    ReplyDelete
    Replies
    1. துளசியின் அடுத்து எடுக்கும் குறும்படம் இப்படி காதல் கதையை கொண்டாதாக இருக்க வேண்டும் அதில் என்றும் பதினாரு வயதாக இருக்கும் எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டுமாக்கும்

      Delete
  9. இதென்ன (அ) நியாயம்? நதியா காலத்து நாயகன் நயன் தாரா வேணும்றது?

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நானெல்லாம் நதியாகாலத்தில்தான் பிறந்து அதன் பின் என்றும் பதினாறாக வாழ்ந்துவரும் நாயகன்

      Delete
  10. இந்த அம்பிகா பொண்ணு ராதா பொண்ணு எல்லாம் ரெடியாம் ஓகேவா? ( அம்பிகாவோட ராதாவோட பொண்ணு எல்லாம் இல்ல... )

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இந்த அம்பிகா ராதா எல்லாம் யாரு ? அவங்க யாராக இருந்தாலும் எனக்கு வேறு யாரும் வேண்டாங்க நான் காலமெல்லாம் அமலாபால், நயன் தாரா ,அனுஷ்காவிற்காக வெயிட் பண்ணுவேன் ஒரு வேளை அவங்க கிடைக்கலைன்னா அவங்க பிள்ளைங்களுக்காக காத்திருப்பேன் நான் ரொம்ப நல்லவனாக்கும் ஹீஹீ

      Delete
    2. மிக மிக சந்தோஷம் நீங்கள் இந்த பக்கம் வந்ததற்கு... அதே மாதிரி உங்கள் வலைப்பக்கத்தை தூசி தட்டி மீண்டும் எழுத ஆரம்பிக்கலாமே... துறவறத்தை துறந்து மீண்டும் எழுத ஆரம்பிங்களேன்

      Delete
  11. அருமை நண்பரே

    ReplyDelete
  12. மைத்துனரே பூரிக்கட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டனவா ?

    ReplyDelete
    Replies
    1. ஹஹாஹ் கஸ்தூரி எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது!!!

      கீதா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.