Saturday, June 3, 2017

#maha# periyava kalaignar     #hbdkalaignar94     #karunanidhi @avargal_unmaigal
திராவிடர்களின் மகா பெரியவா கலைஞருக்கு வாழ்த்துக்கள்



கலைஞர் அவர்களின் 94ம் ஆண்டு பிறந்த தினம். அவரை வாழ்த்துபவர்கள் ஒரு பக்கமும் வசை பாடுபவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். பல பதிவுகளில் கலைஞரை நான் கிண்டல் பண்ணி இருந்தாலும் எனது சிறுவயதில் எனது மனதில் பதிந்த தலைவரில் இவர் ஒருவர் என்பதாலும் வாழ்த்தும் நேரத்தில் வாழ்த்துவதுதான் மனித இயல்பு என்பதால்  அவரை நான் வாழ்த்துகிறேன்.

என்னை போன்ற பலருக்கு தமிழ்மொழியை நேசிக்க கற்று கொடுத்தது கலைஞர்தான். படிக்காதவர்தான் கலைஞர் ஆனால் அவர் எழுதியவைகளை வைத்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அநேகம் அநேகம். அவரிடம் பிடித்தது மொழி மட்டுமல்ல அவரின் சுறுசுறுப்பும்தான்  அவரின் சுறுசுறுப்பும் உழைப்பும் என்னை வியக்க வைத்தது. தமிழகத்தின் தலைவராக பல்லாண்டு வலம் வந்த சாணக்கியர் இவர். அது மட்டுமல்லாமல் இப்போது உள்ள தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிதலைவர்களுக்கும் தலைவராக இருந்த ஒரு தலைவர் இவர் மட்டும்தான் இருக்க முடியும்.



யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இப்போது அவர் வாழ்விலும் சறுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தின் தலைவராக இருந்தவர் கடந்த காலங்களில்  குடும்ப சூழ்நிலையால் குடும்பத்திற்கு மட்டும் தலைவராக வலம் வந்து கொண்டிருந்த அவர் இந்த தள்ளாத வயதில் உடல்நலம் குன்றி இருக்கிறார்

இந்த நிலமை மாறி அவரின் இறுதி காலத்தில் தமிழகமே பாராட்டும் செயலை செய்து முடிக்க அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.அவரால் அது முடியவில்லையென்றால் அவரின் வாரிசுகளாவது நிச்சயம் செய்து முடிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.



கலைஞர்  இல்லையெனில் தமிழகம் பீகாராகத்தான் இருந்திருக்கும்
என்னடா இவன் கலைஞரை வாழ்த்துகிறேன் என்று நினைக்கிறிர்களா? அது ஒன்றும் இல்லைங்க. நமக்கு எந்த உபயோகமும் இல்லாத நடிகர் நடிகைகளுக்கும் நல்ல சாமியாராக வேஷம் போட்டு கொண்டு இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறோம். அப்படிபட்ட நிலையில் தமிழகத்தின் தலைவராக இருந்தவருக்கு வாழ்த்து சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்பதால் நான் இந்த வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவிக்கின்றேன்.


அதுமட்டுமல்லாமல் அவருக்கு அவரை நேசிக்கும் ஒரு ஆயுள் தண்டனை கைதி வரைந்த ஒவியத்தை அவருக்கு அறிமுகப்படுத்துவதையே அவர் பிறந்த நாள் பரிசாக தருகிறேன்


இந்த ஆயுள் கைதி என்ன தவறு செய்துவிட்டு சிறையில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது . ஆனால் அந்த கைதியிடம் ஒரு திறமை மட்டும் உள்ளது அதுதான் அழகாக ஒவியம் வரைவது. அவரின் படைத்தைதான் இங்கே நீங்கள் காண்கிறீர்கள்.இந்த கைதியின் வாழ்வு சிறையிலே முடியப் போகிறது என்றாலும் அவரின் மனதில் ஒரு ஒளியாக கலைஞர் மட்டும் இருக்கிறார் என்பதை நினைக்கும் போது ஆச்சிரியமே தோன்றுகிறது....இப்படிபட்ட தொண்டந்தான் திமுகவின் அழியாத பலம்,


டிஸ்கி : . சிறுவயது முதல் நான் தமிழகத்தில் இருந்த வரை என் மனதை கவர்ந்த தமிழக தலைவர்கள் 2 பேர் ஒருவர் கலைஞர் மற்றொருவர் வை.கோ. இங்கு கலைஞரை வாழ்த்தி பதிவிடுவதால் எனக்கு அவரால் எந்த வித பலனும் இல்லை என்பதை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன். இந்த தலைவர்களை பற்றி உங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் இவர்களின் சில செயல்கள் என் மனதுக்கு பிடித்ததால்தான் இந்த பிறந்தநாள் பதிவு


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
 #hbdkalaignar94
    #karunanidhi

9 comments:

  1. உரிய நேரத்தில் சரியான வாழ்த்து.

    ReplyDelete
  2. பலருக்கும் பழம் கொடுத்த பழம்பெரும் தலைவருக்கு தமிழ மணத்துடன் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அத்தனையும் உண்மை. பொ து நலமே முதன்மையாக கொண்டு தொடங்கியதுதான் அவரது அரசியல் வாழ்க்கை. காலப் போக்கில் சுய நலம் கலந்து விட்டது. குறைகள் இருப்பினும் நிறைகளை சுட்டிக் காட்டி வாழ்த்துவதில் தவறில்லை. மணிகண்டன் வரைந்த படம் அருமை.

    ReplyDelete
  4. வாவ்!! உங்களுடைய கருத்துக்களே எனதும் நானும் வாழ்த்துகிறேன் ..சில விஷயங்கள் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்திடும் அதுபோலத்தான் கலைஞரும் அவரது voice மேடை பேச்சுக்களும் மனதில் இன்னும் இருக்கின்றன ..காலம் பல குழப்பங்களை தந்துவிட்டு சென்றாலும் இந்தியாவில் தேர்தலில் நான் போட்ட முதல் vaakku திமுகவிற்கே அதன் பிறகு வாக்களிக்கும் சூழல் அமையவில்லை .
    அறிவும் தேடலும் விசாலமானதால் ஏற்பட்ட தெளிவினால் அரசியலை தவிர்த்தாலும் இன்னமும் அவருக்கென ஓரிடம் இருக்கு மக்களின் மனதில் ..மணிகண்டன் வரைந்த ஓவியம் சூப்பர் .
    ஒரு முதியவரை வசை பாடுவதென்பது மிக தவறு அதை மக்கள் புரிந்துகொள்ளணும் சரி விடுங்க .நானும் உங்களுடைய வாழ்த்துக்களில் இணைந்துகொள்கின்றேன்

    ReplyDelete
  5. கலைஞரின் தமிழ் எனக்குப் பிடிக்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை வீரத்தாய் என்று எழுதி இருந்தார். அதை நான் என் நாடகங்களில் நடிக்க வருபவரிடம் கொடுத்துப் படிக்கச்சொல்வேன் அழகாகப் படித்தவர்களுக்கு வேடம் உண்டு. நினைவுகள் எங்கோ போகின்றன நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டுவாழ வேண்டுகிறேன்

    ReplyDelete
  6. ஆம் அவரிடம் நான் இரசித்தவைகளை
    எழுதிக்கொண்டிருக்கிறேன்
    கடைசியாக பிடிக்காததையும்
    எழுதுமெண்ணமும் இருக்கிறது

    ReplyDelete
  7. கலைஞர் நல்ல தமிழ் அறிஞர். உழைப்பாளி. அவரது வசனங்களும் சிறப்பாக இருக்கும். எங்கள் இருவரின் வாழ்த்துகளும்!!!

    ReplyDelete
  8. மணிகண்டன் அவர்களின் ஓவியம் வெகு அழகு அது போல உங்கள் கலையும் வெகு அழகு! செம!! கற்பனை!

    வாழ்த்து சொல்லியவிதமும் சிறப்பு மதுரைத் தமிழன் சகோ!!

    கீதா

    ReplyDelete
  9. ஓகே மைத்துனரே ...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.