Saturday, June 3, 2017

அமெரிக்கா வந்தும் மாறாத மாமனார் மாமியார் (இவ்வளவு கல்நெஞ்சக்காரர்களாகவா இருப்பார்கள்?


இந்தியாவில் இருந்து என் மாமனார் மாமியார் என் வீட்டிற்கு வந்து இருந்தனர். ஒரு நாள் இரவு எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது என் மாமனார் பசிக்குது என்றார். உடனே என் மனைவி சரி நான் தோசை சுட்டு தருகிறேன் என்றார். உடனே என் மாமனார் நீ சுட வேண்டாம்மா மாப்பிள்ளை சுட்டு தரட்டும் அவர் சூப்பாரா தோசை வார்த்து தருவார் என்றார். ஆஹா நம்ம சமையலை ஒருவர் புகழ்ந்தால் நமக்கு தலைகால் புரியாதே அதனால் நானும் சரி சுட்டு தருகிறேன் என்றேன்.



உடனே என் மனைவியும் சரி அப்ப்டி என்றால் நான் சிறிது வாக் சென்று வருகிறேன் நீங்க என் பெற்றோர்களுக்கு தோசை வார்த்து கொடுங்கள் என்று சொல்லி சென்றுவிட்டார்...... நானும் என் இன் லா இருவருக்கும் நெய்யை மிக அதிகமாக் ஊற்றி மொரு மொறு என்று தோசை வார்த்து கொடுத்து கொண்டே  உங்களுக்கு தெரியுமா  இந்தியாவில் ஹோண்ட் கார் இஞ்சினில் பிரச்சனை என்று லட்சக் கணக்கான காரை ரீக்கால் பண்ணி இருக்கிறார்கள் என்றேன் அவரும் அப்படியா என்றார் அதன் பின் ஆமாம் என்று சொல்லி ஹோண்டா மட்டுமல்ல மாருதி காரிலும் சில பிரச்சனைகள் என்று அதையும் ரீக்கால் பண்ணி இருக்கிறார்கள் என்று சொன்னேன் அதை தொடர்ந்து சாம்சங்க் கேலாக்ஸி போனும் வெடித்து தீப்பிடிப்பாதால் அதனையும் ரீக்கால் பண்ணி இருக்கிறார்கள் என்று சொன்னேன். ஓ அப்படியா நீங்கள் இந்தியாவில் நடக்கும் செய்திகளை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்களே என்று சொன்னார்


நானும் விடாமல் ரீக்கால் பண்ணிய பல ஐட்டங்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தேன் எல்லாவற்ரையும் கேட்ட கொண்டே மேலும் ஒரு தோசை வார்த்து தாருங்கள் என்று சொன்ன போது எனக்கு உண்மையிலே கோபம் வந்தது. இவ்வளவு சொல்லியும் நான் சுற்றி வளைச்சு சொல்ல வருகிற விஷயத்தை மட்டும் புரிந்து புரியாமல் இன்னும் ஒரு தோசை என்று சொன்ன போது அவரை அப்படியே பூரிக்கட்டையால் அடித்து கொன்றுவிட வேண்டும் என்றுதான் தோன்றியது


என்னங்க நான் சொல்ல வரும் விஷயம் உங்களுக்கே புரிஞ்சு இருக்கும் ஆனால்  தான் பெற்று எனக்கு கட்டி கொடுத்த அவர் பிள்ளையை  மட்டும் மனுஷன் (their faulty products) டிபெக்ட் என்பதால் (recall) ரீகால் பண்ணுவேன் என்று வாய் திறந்து சொல்லமால் ஒன்றும் தெரியாத மாதிரி கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறாரே.

அதை பார்த்தால் எனக்கு கொலை செய்யும் எண்ணம் வருவது இயல்புதானேங்க

கொசுறு :  Having a wife is PART OF LIVING but Living with wife is ART OF LIVING


* வாழ்க்கை என்பது மொபைலின் எதிர்முனையில் பேசும் மனைவி போல, அது எது சொன்னாலும் சரி என்பதைத் தவிர வேறு வழியேயில்லை.

* கஷ்டம் என்பது வாக்கிங் போயிருக்கும் மாமனார் போல, உடனே வருமா கொஞ்சம் நேரம் விட்டுட்டு வருமான்னு தெரியாட்டியும் நிச்சயம் வரும்.

* உலகம் என்பது ஊர்ல இருந்து வந்திருக்கும் மாமியார் போல, நாம அதை கவனிக்காட்டியும், அது நம்மளை நல்லாவே கண்கொட்டாம கவனிச்சுக்கிட்டு இருக்கும்.

* சந்தோஷம் என்பது மச்சினிச்சி போல, அது நம்ம கூட இருக்கோ இல்லையோ, ஆனா இருக்கிற மாதிரி நம்பிக்கிட்டு இருந்துட்டு போயிடணும்.


* அன்பு என்பது குழந்தைங்க ஸ்கூல் ஃபீஸ் போல, எதுக்கு தர்றோம் ஏன் தர்றோம்னு தெரியாட்டியும், எடுத்து கொடுத்துக்கிட்டேதான் இருந்தாகணும்.

* ஆசை என்பது நம்ம மச்சினன் போல, மொத்தமா அடக்கியும் வைக்கக்கூடாது, அதுக்காக ஓவரா ஆடவும் விடக்கூடாது.


* வசதி வாய்ப்புகள் என்பது தாத்தா பாட்டி போல, இருக்கலாம் இல்லாம போகலாம், ஆனா இருந்தா சரியா பார்த்துக்கணும்.
* நம்பிக்கை என்பது கைக்குழந்தை போல, அப்பப்ப இருக்கேன்னு அழுதோ சிரிச்சோ ஒரு அட்டண்டன்ஸ் போட்டுடணும்.

* சேமிப்பு என்பது நட்பைப் போல, நாம் களைக்கும்போது கூட அது தாங்கிப் பிடிக்க வேண்டும்.




அன்புடன்
மதுரைத்தமிழன்

22 comments:

  1. மனைவியும் போன்காலும் ஒப்பீடல் செம

    ReplyDelete
  2. மாமனாருக்கு உங்க கஷ்டம் புரியாமலில்லை. அவர் எப்படி தன் மனைவியை ரீகால் கொடுப்பதுன்னு யோசிச்சுண்டிருப்பார்

    ReplyDelete
    Replies
    1. அந்த கால பொருட்களுக்கு ரீக்கால் கிடையாது ஆனால் இந்த காலத்தில் ரீக்கால் உண்டு. ஆனாலும் தான் படும் கஷ்டத்தை தம் மருமகணும் படட்டும் என்று நினைத்துதான் அவர் பேசாமல் இருக்கிறார்

      Delete
  3. அனைத்தையும் இரசித்தேன் நண்பரே
    த.ம.

    ReplyDelete
  4. உங்க மாமனார் மாமியின் அப்பவாச்சே :) அதான் அவருக்கு உங்களைப்பற்றி நல்லா தெரிஞ்சிருக்கு :) உங்களுக்கு நல்ல வேலை கொடுத்து பிசியா வச்சிருந்திருக்கார் :) தோசை வார்க்கவெச்சதை சொன்னேன்

    ReplyDelete
    Replies

    1. ஆஹா இது கூட தெரியாத அப்பாவியா நான் இருக்கேனே.. நல்லவேளை நீங்க சுட்டிக்காட்டியதற்கு... அடுத்த முறை வரட்டும் தோசையில் நெய் ஊற்றுவதற்கு பதிலாக பேதி மருந்தை கலக்கி தோசை வார்த்து தருகிறேன்

      Delete
  5. அன்பு அன்ட் நம்பிக்கை தத்துவங்கள் சூப்பர்

    ReplyDelete
  6. நாம செலவழித்து வாங்கியதை மட்டும்தான் சரண்டர் செய்ய முடியும் :)

    ReplyDelete
    Replies
    1. பகவான் ஜி நான் வாழ்க்கையை செலவழிச்சு வாங்கி இருக்கேன்

      Delete
  7. எங்களுக்கும் இப்படியெல்லாம்
    எழுதணும்னு நினைச்சாலும்...

    சரி சரி எங்கள் சார்பா..இவ்வளவு
    சிறப்பா நீங்களாவது எழுதுகிறீர்களே
    என சந்தோசப்பட்டுக் கொள்கிறோம்
    வெளிக்காட்டிக் கொள்ளாமல்...

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார் டிபெக்டிவ் பொருளுக்குதான் ரீக்கால் நல்ல பொருளுக்கு அல்ல.....அதனால் நீங்க என்ன எழுதி கேட்டாலும் மாற்று கிடைக்காது

      Delete
  8. மமத பிடிச்ச ம.துர மாப்பு
    இன்னிக்கு இருக்கு உமக்கு ஆப்பு.

    சூடா ஒரு பூரி (சாரி)
    பூரிக்கட்டை பார்ஸேல்.😊

    ReplyDelete
    Replies
    1. ஆப்பு இருக்கட்டும் ஆமாம் நீர் எங்க போனீர் கொஞ்ச நாளா இந்தப்பக்கம் காணும்

      Delete
  9. பொன் மொழிகள் அருமை

    ReplyDelete
  10. உங்களைப் பார்த்தால் கொலை செய்து ஜெயில் போய் பெயிலில் வந்து கொழுப்பு அடங்காமல் மாமாவைத் திட்டிக்கொண்டிருப்பவர்போலவே இருக்கே:).. மருமகன் 8 அடி மாமனார் 16 அடி போல தெரியுதே இங்கு...

    கொசுறு... அனைத்தும் கடிக்குது.

    ReplyDelete
    Replies
    1. என் மாமனாரை பற்றி எப்படி இவ்வளவு துல்லியமாக கணித்து இருக்கிறீர்கல்....ஒகோ நீங்க அந்த காலத்து என் மாமனார் வயசு ஆளா

      Delete
  11. மாமனாருக்குப் புரிஞ்சிருக்கும், இருந்தாலும் புரியாத மாதிரி நடிக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மாமனார் உங்க ஊர்தான் கொஞ்சம் அட்வைஸ் பண்ணி அனுப்புங்களேனப்பா

      Delete
  12. ஹஹஹஹ்....சரி சரி பூரிக்கட்டை அடி வாங்கிப் பல மாசம் ஆயிருச்சு போல..ஒரு வேளை மாமி தியான க்ளாஸ் எல்லாம் போறாங்களோ...

    வாங்கி வாங்கிப் பழகிப் போனதால அது இல்லைனாலும் போர்தான், ச்சே என்னாச்சு பூரிக்கட்டை பறக்க மாட்டேங்குதேனு..இப்படிச் சொன்னாலாவது அடி கிடைக்காதானு இல்லையா மதுரை...ஹஹஹஹ்

    இதனை பதிவு வெளி வந்ததும் வாசித்து பதில் போட நினைத்து மொபைல் வழி போட முடியலை...

    கீதா

    ReplyDelete
  13. கொசுறு முதல் மொழி...வாட்சப்பில் வந்தது ஸ்ரீஸ்ரீ படத்தின் மேல் எழுதப்பட்டு.....!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
  14. மச்சான் ரீகால் உரிமை இருவருக்கும் உண்டு ...தெரியுமோ ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.