அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சிரிப்பு (சிபாரிசு) கடிதங்கள்
தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒரு குழந்தை முதல் வகுப்பில் சேர பள்ளிக் கூட நிர்வாகிக்கு சிபாரி கடிதம் கொடுத்தாரம். அது பற்றி சமுக வளைதளங்களில் பேசி சிரிக்கின்றனர்,
முதல் வகுப்பு குழந்தை சேர சிபாரிசு கடிதம் கொடுத்த அவர் மற்ற விஷ்யங்களுக்கும் சிபாரிசு கடிதம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்த்தன் விளைவே இந்த அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சிரிப்பு (சிபாரிசு) கடிதங்கள்.
மிஸ். நயன்தாராவுக்கு,
அமைச்சர் செங்கோட்டையன் எழுதி கொள்வது. இந்த கடிதத்தை கொண்டு வரும் மதுரைத்தமிழன் உங்கள் மேல் மிகவும் காதல் கொண்டுள்ளான். அதனால் தயவு கூர்ந்து அவன் காதலை ஏற்று அவனுக்கு வாழ்வு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்
நன்றி..
டாஸ்மாக் அதிகா¡¢க்கு ,
இந்த கடித்தத்தை கொண்டு வரும் மதுரைத்தமிழன் உங்கள் கடைக்கு எப்போதெல்லாம் வருகிறானோ அப்போதெல்லாம் அவனுக்கும் மிக குளிர்ந்த பீரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..
காய்கறிகடை உ¡¢மையாளருக்கு,
இந்த கடித்தத்தை கொண்டு வரும் மதுரைத்தமிழன் வீட்டில் விருந்து ஒன்று நடக்க போவதால் அவன் மனைவி அவனை நல்ல காய்கறி வாங்கி வரச் சொல்லி இருக்கிறாராம் அவர் நல்ல காய்கறி வாங்கி வரவில்லை என்றால் அவனை அரசு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல வேண்டி இருக்கும், அதனால் அரசு செலவை குறைக்க மதுரைத்தமிழனுக்கு நல்ல காய்காறிக்ளை கொடுக்க வேண்டிக் கொள்கிறேன்
இந்த கடிதத்தை கொண்டு வரும் மதுரைத்தமிழன் குழந்தை உங்கள் பள்ளியில்தான் படிக்கிறதாம் அந்த குழந்தை இன்று ஹோம்வொர்க் பண்ணவில்லையாம் அதனால் அதை தண்டிக்காமல் அவருக்கு மன்னிக்க வேண்டி இந்த கடிதத்தை கொடுத்து அனுப்புகிறேன்.
தமிழக தலைமை காவல் அதிகா¡¢ அவர்களுக்கு ,
இந்த கடித்தத்தை கொண்டு வரும் மதுரைத்தமிழன் இன்று பக்கத்துவீட்டில் வசிக்கும் பெண்ணிடம் ஜொள்ளுவிட்டதை அவரது மனைவிக்கு யாரோ சொல்லிவிட்டார்களாம் அதனால் மதுரைத்தமிழனுக்கு ஒரு வாரகாலம் பாதுகாப்பு கொடுக்கும்படி சிபா¡¢சு செய்கிறேன்
அப்போலோ ஹாஸ்பிடல் நிர்வாகிக்கு ,
இந்த கடிதத்தை கொண்டு வரும் மதுரைத்தமிழன் மனைவியிடம் பூ¡¢க்கட்டையால் அடிபட்டு பா¢தாபமாக இருக்கிறான் இவன் மிகவும் அப்பாவியாக இருப்பதால் ஜெயலலிதாவிற்கு கொடுத்த ட்¡£ட்மெண்ட் கொடுக்காமல் சாதாரண ட்¡£ட்மெண்ட் கொடுத்தால் போதும் என்று சிபா¡¢சு செய்கிறேன்.
யாரையும் காயப்படுத்த அல்ல......படித்து ரசிக்க சிரிக்க இந்த கடிதங்கள் வெளியிடப் படுகின்றன.
அன்புடன்
மதுரைத்தமிழன்
இனி வருங்காலத்தில் இப்படியும் கடிதங்கள் வாங்க வேண்டியது வரும்.
ReplyDeleteத.ம.1
உங்கள் கடிதம் அருமை. ஆனா, செங்கோட்டையன் கடிதம் உண்மையா பொய்யா?!
ReplyDeleteஇந்த பரிந்துரைக் கடிதம் இலவசம்தானா ,இல்லை இதுக்கும் மொய் வைக்கணுமா :)
ReplyDeleteவித்தியாசமான கற்பனை. ரசித்தேன்.
ReplyDeleteஹா ஹா ஹா அனைத்தும் ரசித்து சிரித்தேன்
ReplyDeleteஹஹஹஹஹ் செம மதுரை தமிழன்..நாங்க ரெண்டு பேரும்..சிரிச்சு முடிலைப்பா...ரொம்பவே ரசித்தோம்! அது சரி அமெரிக்காவுல உங்க பொண்ணு படிக்கற ஸ்கூலிலும் செங்கோட்டையனின் சிபாரிசு செல்லுபடியாகுமா??!!!! ஓ 'செங்கோட்டையன்' உங்க ஊர் ஆள் இல்ல ஹிஹிஹி!
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDeleteயாரோ ஒரு பி.ஏ வேலையைக் காட்டியிருக்கிறார்
ReplyDelete