Wednesday, August 5, 2020

first night real experience story tamil
எனது முதலிரவு அனுபவம்   


முதல் இரவு பற்றி நினைக்காதவரே இருக்க முடியாது. இது பற்றித் திருமணம் ஆவதற்கு முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் பல கனவுகள் உண்டு.அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல... ஆனால் முதலிரவு பற்றி எனக்குத் தெரிந்த தகவல் எல்லாம் திரைப்படம் பார்த்து அறிந்த தகவல்மட்டுமே...

சினிமா படங்களில் நான் பார்த்தது எல்லாம் முதல் இரவு அன்று தம்பதியினரின் அறையை வாசனையான மலர்கள் கொண்டு அலங்கரித்து இருப்பார்கள் அதுமட்டுமல்ல அந்த அறையில் நிறையப் பழங்களும் இனிப்புகளும் கட்டிலுக்கு அருகில் வைக்கப்பட்டு இருக்கும். மலர்களின் இனிமையான மணமும், இனிப்புகளின் வாசனையும் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை ஒன்றாகத் தொடங்க ஒரு காதல் மனநிலையை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது என்பதால்தான் இப்படிச் செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது....
 
அப்படி அலங்கரிக்கப்பட மணமகன் அறையில் அமர்ந்து இருப்பார் மணமகளின் கையில் பால் சொம்பு கொடுத்து அனுப்பிவைப்பார்கள் அந்த வீட்டுப் பெரியோர்கள் இப்படித்தான் படங்கள் மூலம் நான் அறிந்து கொண்டது. இதைத் தவிர முதல் இரவு பற்றி நான் எந்த முறையிலும் அறிந்தது கிடையாது


ஆனால் இந்த முறையில் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை காரணம் உறவு என்பது உறவு கொள்ளும் இருவருக்கும் உள்ள தனிப்பட்ட விஷயம் அது மற்றவர்கள் அறிய நடப்பது என்பது என்னைப் பொருத்தவரை ஒரு அருவருப்பான விஷயமாக நான் கருதுகிறேன்... நல்லவேளை என் முதல் இரவு அப்படி நடக்கவில்லை என்பது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்

இப்போது என் முதல் இரவு அனுபவத்திற்கு வருகிறேன்.. என் திருமணம் பெரியவர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் அல்ல 6 நண்பர்களும் ஒரு நகராட்சி அலுவலர் மேற்பார்வையில் நடந்து ரிஜிஸ்டர் காதல் திருமணம்தான்..கல்யாணம் முடிந்தது சாட்சி கையெழுத்துப் போட வந்தவர்களில் இருவர் உடனே தங்கள் அலுவலகத்திற்குத் திரும்பினர் மீதி இருந்த நான்கு பேருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள அமராவதி உணவகத்தில் மதியம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அவர்களும் கலண்டு கொண்டனர் அதன் பின் நாங்கள் இருவரும் சிறிது பேசிவிட்டு நாங்களும் எங்கள் அலுவலகத்திற்குத் திரும்பிவிட்டோம்.


அதன் பின் அடுத்த நாளிலிருந்து நாங்கள் சேர்ந்து குடி இருக்க வீடுகள் தேட ஆரம்பித்தோம் எங்கள் திருமணம் காதல் திருமணம் என்பதாலும் இருவரும் வேறு வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் வீடு வாடகைக்குத் தருபவர்கள் யாரும் இல்லை.. கடைசியாக 2 மாதங்கள் கழித்து நண்பர் ஒருவரின் அண்ணன் வீடு ஒன்று காலியாகியது அதை நாங்கள் வாடகைக்கு எடுத்தோம் அதன் பின் என் மனைவி அவள் வீட்டில் சொல்லிக் கொண்டி வெளி வர மேலும் சிலமாதங்கள் ஆகியது காரணம் எங்கள் திருமணம் எனது மனைவியின் சகோதரிக்குத் தெரிந்தாலும் அவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியாது... ஒரு நாள் அவர்களுக்கும் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி என்னுடன் குடித்தனம் நடத்த என் மனைவி வந்தாள் அதுவரை நாங்கள் இருவரும் தினமும் என் மனைவி தாம்பரத்தில் அண்ணாசாலையில் அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் உள்ள என் அலுவலகத்திற்கு வருவதும் அதன் பின் அவளுடன் டி.நகர் ஷாப்பிங்கிற்குச் சென்று அதன் பின் அவளைச் சானிடேரியத்தில் விட்டுவிட்டு மீண்டும் அண்ணா சாலையில் உள்ள மீரான் சாஹிப் தெருவில் வசித்த என் இடத்திற்கும் திரும்புவதுமாக இருந்தது


அவள் என்னுடன் குடித்தனம் நடத்தவந்த நாளில் அதாவது எங்கள் முதல் இரவு நாளில் என் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த அவள் கல்லூரி படிப்புச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டு அதன் பின் அதன் அருகே உள்ள சரணவனபவனில் இரவு உணவை முடித்துவிட்டு முகேப்பேரில் உள்ள கடைகளில் எங்கள் முதலிரவுக்குத் தேவையானவற்றை அதாவது திரைப்படத்தில் வருவது போலப் பழங்கள் ,பூக்கள் மற்றும் இனிப்பு வகைகளை வாங்கிக் கொண்டு முகப்பேரில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்றோம்...
 
first night real sex story

அதன் பின் முதலிரவிற்காக எங்கள் படுக்கையைத் தயார் செய்தோம் அதாவது பாயை விரித்துத் தலையணை போட்டுப் பெட்சீட்டை விரித்தோம் பெட் வங்காதற்குக் காரணம் நாங்கள் சில மாதங்களில் அமெரிக்கச் செல்லவிருந்ததால் அதற்காகப் பணத்தைச் செலவிட விரும்பவில்லை.. அதன் பின் தலையணைக்கு அருகில் பழங்கள் மற்றும் இனிப்புகளை வைத்துவிட்டு இரண்டு பேரும் குளிக்கச் சென்றோம் தன் தனிப் பாத்ருமில்தான் அவள் குளித்து முடித்து நைட்டி போட்டு வந்தாள் நானும் கைலி கட்டி வந்தேன்... அப்படியே இருவரும் அணைத்துக் கொண்டு நான்கு பேர்கள் சுற்றி நின்று பார்ப்பார்களே என்று எந்தவித குறுகுறுப்பு எதுவும் இல்லாமல் எங்களின் பெட் ருமிற்குள் நுழைந்தோம் அதன் அப்படியே பாயில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கும் போதுதான் என் மனதில் பளீரென்று ஒன்று நினைவிற்கு வந்ததது அது ஒன்றுமில்லை அவள் கல்லூரி சான்றிதழ்களை ஆட்டோவில் இருந்து எடுத்து வந்தோமோ என்பதுதான் உடனே அது பற்றி நான் அவளும் அதையே என்னிடம் கேட்க உடனே அணைப்பிலிருந்து விலகி அதனைத் தேட ஆரம்பித்தோம் . அப்படி அவசர அவசரமாகத் தேட காரணம் அடுத்த வாரம் அமெரிக்கா தூதரகத்தில் நாங்கள் அமெரிக்க விசாவிற்காக நேர்முகத்தேர்வு இருந்ததே காரணம் அது இல்லாவிட்டால் எங்கள் விசா கிடைப்பது எளிதல்ல..


இறுதியாகத் தேட ஆரம்பித்து முடிவில் நாங்கள் அதைத் தொலைத்துவிட்டோம் என்பது எங்களுக்குப் புரிந்தது அப்போது இரவு மணி பதினொன்று அந்த நேரத்தில் எங்கிருந்தோ பிடித்த ஆட்டோவை மீண்டும் தேடிக் கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம் என்பது புரிந்தது... அதன் பின் மனதை தேர்த்திக் கொண்டு நடப்பது எல்லாம் நல்லதற்குத்தான். ஏதாவது இருந்தாலும் அடுத்த நாள் பார்த்துக் கொள்வோம் என்று மனதை தேர்த்திக் கொண்டு முதலிரவை விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பிப்போம் என்று பெட் ருமீற்குள் நுழைந்தோம்.. அதன் பின் நான் என் மனைவியை அணைத்து அப்படியே என் ருமில் உள்ள லைட்டையும் அணைத்தேன் அதன் பின் இருட்டில் என்ன நடந்தது என்பதெல்லாம் எங்களுக்கு இருவருக்குமான தனிப்பட்ட விஷயம் என்பதால் எனது முதலிரவு உண்மை அனுபவத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்...ஹிஹீ எங்கள் முதல் இரவு அனுபவத்தைப் படித்து ரசித்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்


5 comments:

 1. மதுர,

  கண்டிப்பா இந்த பதிவிற்கு குறைந்த பட்சம் ஆயிரத்துக்கும் மேல வருவாங்க.

  ReplyDelete
  Replies
  1. அப்ப என் மற்ற பதிவுகளுக்கு ஆட்களே வருவதில்லை என நினைக்கிறீர்களா விசு?

   Delete
  2. மதுர..

   உன் பதிவுக்கு தான் ஆயிர கணக்கில் வருவார்களே. இதுக்கு இன்னும் அதிகம்னு சொல்ல வரேன்.

   BTW ,

   https://vishcornelius.blogspot.com/2020/07/blog-post.html

   இந்த பதிவுல ஒரு கேள்வி கேட்டு இருந்தேன். நீங்க பாக்கல போல. நேரம் இருந்தால் படித்து பதில் தரவும்.

   Delete
 2. "அவர்கள் உண்மைகள்" சரி தான் தல...

  ReplyDelete
 3. அந்த்ரங்கம் புனிதமானது பகிர அல்ல

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.