Saturday, January 15, 2022

@avargalunmaigal

எனது சிறு முயற்சியால் இந்த பொங்கல் சிறப்பு மலரை வெளியிடுகின்றேன் இதில் இருக்கும் பதிவுகள் படித்து ரசிக்க மட்டுமல்ல பல நல்ல கருத்துகள் மற்றும் உபயோகமான தகவல்களும் தாங்கி வருகிறது. அவர்கள் உண்மைகள் வலைத்தளம் வழங்கும் சிறப்புப் பொங்கல் சிறப்பிதழ் 2022 நேரம் கிடைக்கும் போது படித்து முடிந்தால் கருத்துச் சொல்லுங்கள்..



 


அன்புடன் மதுரைத்தமிழன் அவர்கள் உண்மைகள் வலைத்தளம் வழங்கும் சிறப்பு பொங்கல் சிறப்பிதழ் 2022 Pongal Special Malar  2022



 

10 comments:

  1. சிறப்பான ஆக்கம் மதுரை சகோ!!! வாசிக்கிறேன். அழகான வடிவமைப்பும் கூட. முழுவதும் பார்த்துவிட்டு வருகிறென்.

    பொங்கல் நல் வாழ்த்துகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு மிகவும் நன்றி கீதா

      Delete
  2. நல்லாருக்கு மதுரை. 2 நாளில் தயாரித்தது அட!! பாராட்டுகள்!

    டிவோர்ஸ் ப்ரேக்கப் பத்தினது வாசிக்கத் தொடங்கியதும் இது மதுரை இல்லை வேறு யார் பரிச்சயமாக இருக்கிறதே என்று பார்த்தால் கடைசியில் மலர்வண்ணன் என்று தெரிந்தது. அவருக்கும் வாழ்த்துகள்

    மீன் கதை மூலம் சொல்லிய கருத்து அருமை. நமக்கு எது முடியுமோ அதை நன்றாகச் செய்து மகிழ வேண்டும். நாம் நாமாக இருப்பது....
    படிப்பிற்கான டிப்ஸ் நல்ல டிப்ஸ் குறிப்பாக நாம் கற்றதை பிறருக்குச் சொல்லிக் கொடுக்கும் போது அது நம்மை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும் என்பதும், மீண்டும் மீண்டும் கேட்பது மனதில் ஆழமாகப் பதியும் என்பதும்...எனக்கு அனுபவப்பாடம் என் மகனுக்கும். அவன் குறைபாட்டிற்கு நான் செய்தவை இவை இரண்டும். கற்றலில் கேட்டல் நன்று என்பது போல...

    ஃபோட்டோ துணுக்குகள்!!!! உங்கள் ஸ்டைல் அதே போல இடையில் வாழ்த்துகளோடு ஒரு படம்!!ஹிஹிஹிஹி

    கீதா மோஹன் எழுதியதும் நன்றாக இருக்கிறது. மணத்தக்காளிக் கீரையின் சிறப்புகளில் இது புதிய தகவல்.

    அடுத்த முறை தயாரிக்கும் போது பிழைகளையும், டபுள் ஆனதையும் (மீன் கதை என்று நினைக்கிறேன்.) அதையும் மட்டும் பார்த்துக்கோங்க, மற்றபடி சிறப்பாக இருக்கிறது

    வாழ்த்துகள் பாராட்டுகள் மதுரை

    கீதா

    ReplyDelete
    Replies


    1. மலரை படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.. ஆமாம் உங்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது ஆச்சிரியமாக இருக்கிறது எப்படித்தான் பொறுமையாக அனைவரின் பதிவுகளுக்கும் சென்று படித்து கருத்து சொல்ல முடிகிறது யூ ஆர் ரியலி குட். நன்றிகள்

      Delete
    2. நான் வீட்டிலிருந்துதானே வேலை. காலை 3.30, 4 மணிக்கு எழுந்துவிடுவேன். மிகவும் சிறிய வீடுதான்..வீட்டு வேலைகள். உடற்பயிற்சிகள்...வேலைகளுக்கு நடுவே ரிலாக்ஸ் பண்ணும் போது வலைப்பக்கம். இரவு சீக்கிரம் தூங்கிவிடுவேன் மோஸ்ட்லி 9 மணிக்கு..

      ஆனால் இதை எல்லாம் விட எழுதுபவர்கள் கஷ்டப்பட்டுதானே பதிவு எழுதுகிறார்கள் இப்ப உங்களது இந்த ஆக்கத்தையே எடுத்துக் கொள்ளலாம்

      ஸோ அதற்குக் கருத்து இடும் போது எழுதியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது இல்லையா? நம்மால் முடிந்த ஒரு சின்ன விஷயம் அந்த மகிழ்வைக் கொடுக்கலாமே என்று அவ்வளவுதான், நானும் இடையில் வராமல் இருந்திருக்கிறேனே மதுரை...

      எனக்கும் இது ஒன்றுதான் மைன்ட் டைவெர்ஷன்...ரிலாக்சேஷன்.

      நன்றி மதுரை

      கீதா

      Delete
  3. பொங்கல் மலர் தயாரிப்பு.,. பாராட்டுகள் மதுரைத்தமிழன். வாசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக நனறி

      Delete
  4. மிகவும் சிறப்பான முயற்சி. அயர வைக்கும் ஆக்கம் மதுரை. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி. முழுமையாக வாசித்தேன். பல தரப்பிலான பதிவுகள். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல மலர் பக்கங்கள் குறைவாக இருந்ததால் சுணக்கமின்றி வாசிக்க வசதியாக இருந்தது. மலைப்பு தெரியவில்லை. இம்முயற்சியைத் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பொங்கல் மலரை மிகவும் சிறப்பாகத் தயாரித்திருக்கிறீர்கள் மதுரைத்தமிழன். மணத்தக்காளிக்கீரை பற்றிய மருத்துவத் தகவல் புதியது.
    நாம் நாமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஒரு கதையின் மூலம் சொன்னதும், மாணவர்களுக்கான படிப்பிற்கான டிப்ஸ் எல்லாமே மிகவும் சிறப்பு

    வாழ்த்துகள் பாராட்டுகள் மதுரைத்தமிழன்!

    துளசிதரன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.