யோசிங்க மக்களே யோசியுங்கள் பஞ்சாபும், பிரதமரும் &பாதுகாப்பு குளறுபடியும்
பஞ்சாபில் நடக்கவிருந்த ஒரு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துக் கொள்ளச் சென்ற போது, பாதுகாப்பில் நடந்த குளறுபடி காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மோசனமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரில் செல்வதாகத் திட்டமிட்டிருந்த ,மோடியின் தேர்தல் பிரச்சாரப்பயணம் கடைசி சில நிமிடங்களில் சாலை மார்க்கமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.. அப்படி அவர்கள் செல்லும் வழியில் விவசாயிகள் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பிரதமரின் வாகனம் அந்த வழியில் வருகிறது என்பது தெரிந்ததும் போராட்டக்காரர்கள், வழியில் தங்கள் வாகனங்களைப் போட்டு மறித்திருக்கிறார்கள். அதனால் முன்னேற முடியாமல் ஒரு மேம்பாலத்தில் சுமார் 120 நிமிடம் பிரதமரின் குழு மாட்டி நிற்க வேண்டியதாகி விட்டது.
அதன் பின் ,மேலும் அந்த வழியில் செல்வது, பாதுகாப்புக்குப் பிரச்சினையாகி விடும் என்பதால் திரும்பி ,விமான நிலையத்துக்கே போய் விட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியும் ரத்தாகி விட்டிருக்கிறது. இதுதான் நடந்து இருக்கிறது.
இந்த சம்பவம் போதாதா மோடிக்கு அதை வைத்து ஒரு சிறு டிராமா போட்டு அனுதாபத்தைத் தேட முயன்று இருக்கிறார்..
"விமானநிலையத்திற்கு உயிரோடு வந்து சேர்ந்ததற்காக உங்களது முதலமைச்சருக்கு நான் நன்றி தெரிவித்ததாகச் சொல்லுங்கள்" என விமான நிலையத்தில் அதிகாரிகளைப் பிரதமர் மோடி சொன்னதாகத் தகவல்
அவரை அடுத்து மத்திய அரசு பயணம் பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தும் பிரதமருக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாகப் பஞ்சாப் காங்கிரஸ் அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு. உரிய விளக்கம் தரவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
இது உள் துறை மற்றும் உளவுத்துறையின் மிகப் பெரிய குறைபாடு... அவர்களின் தவற்றை மறைக்க மாநில காவல் துறை மீது பழி போடுகிறார்கள்...
பிரதமர் ஒரு நிகழ்விற்கு வருகிறார் என்றால், அது உடனடியாக நடக்கக் கூடிய நிகழ்வு அல்ல ,பல நாட்களுக்கு முன் திட்டமிட்டு நடத்தப்படுகிற நிகழ்வாகத்தான் இருக்க முடியும் இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் பஞ்சாபில் நடக்கக் கூடிய நிகழ்வு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தத ஒரு நிகழ்வு, காரணம் உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகள் "எனக்காக உயிர் விடவில்லை" என்ற சொற்களில், பஞ்சாப் விவசாயிகள் என் நாட்டு மக்கள் இல்லை என்ற பொருள் வந்துவிட்டதால், பஞ்சாபியர்கள் பிரதமரை தம் பிரதமராக மனதார ஏற்க மனமில்லாமல் இருக்கக் கூடிய சூழ்நிலையில் ,அந்த நிகழ்வு மிகவும் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்புத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தால் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் இருக்க வேண்டும்.
பிரதமரின் பயணம் முழுக்க முழுக்க ஹெலிகப்ப்டர் பயணமாகவே திட்டமிடப்பட்டிருந்தாலும் அப்படித் திட்டமிடப்படும் போது வேறு ஏதாவது அவசர காரணத்திற்காக மாற்றுத் திட்டமும் தயாரித்து வைத்து இருக்க வேண்டியது பிரதமரின் பாதுகாப்புத் துறைதான் .ஒரு வேளை ஹெலிகாப்டர் பயணம் தடைப்பட்டால் மாற்றுப்பயணத்திற்குத் திட்டமிட்டும் அந்த பயணம் பிரதமர் பயணம் செல்வதற்கு பாதுக்காப்பானதுதான் என்பதை பாதுகாப்பு துறை உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும்.
பஞ்சாபி மக்கள் உணர்ச்சி மிக்கவர், இன உணர்வு மிக்கவர்கள் ,அதே நேரத்தில் துணிச்சல் மிக்கவர்கள் .அப்படிப்பட்டவர்கள் விவசாய போராட்டத்தால் பாதிக்கப்பட்டு 700 பேருக்கு மேலானவர்களை இழந்து இருக்கும் நேரத்தில், மத்திய அரசு மிக கவனத்துடன்தான் பிரதமர் நிகழ்வைக் கையாண்டு இர்ருக்க வேண்டும். இந்த இன மக்களால் ஒரு பிரதமரை இழந்த நாடு இது .அதனால் உணர்ச்சிகரமான இந்த நேரத்தில் பாதுகாப்பு அதிகமில்லாமல் கோட்டைவிட்டுவிட்டு இப்போது மாநில அரசைக் குறை கூருவது என்பது தேர்தல் நேரத்து ஸ்டாண்டாகவே தோன்றுகிறது
வானவெளிப் பயணத்திலிருந்து சாலை வழிக்கு மாறும் பொழுது ,அது தீடிரென்று நிகழ்ந்தாலும், அதைப்பற்றி மாநில அரசிற்குத் தகவல் கொடுத்து இருந்தாலும் . பிரதமரின் பாதுகாப்புப் படையைச் சார்ந்தவர்கள் ,பிரதமர் செல்வதற்கு முன்பாக அந்த வழியில் சென்று அது பாதுகாப்பான வழி என்று அறிந்த பின்தான் மேலும் அந்த பாதையில் செல்வது பற்றி முடிவு எடுத்துச் செல்வார்கள் அப்படி வழியில் ஏதாவது தடைகள் உள்ளனவா என்பது குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கவில்லையா என்பது தெரியவில்லை. அப்படி விசாரித்து இருந்தால் அந்த பகுதியில் ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில் இருப்பது தெரிந்திருக்கும் தானே?
பிரதமர் பாதுகாப்புப் படையினர்.. இவர்கள் உள்ளூர் காவல் துறை மற்றும் மாநில அரசின் கீழ் கட்டுப்படாத அமைப்பு... அதனால்
பஞ்சாப் அரசு மீது குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக உண்மையாக நடந்தது என்ன வென்று விசாரணை நடத்த வேண்டும். ஏன் இந்த நிகழ்வு அமித்ஷாவால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகக் கூட இருக்கலாமே. என்னதான் அமித்ஷா மோடியுடன் நட்பு உறவு கொண்டிருந்தாலும் எவ்வளவு நாள்தான் தான் உழைக்க இன்னொருத்தர் தலைவனாகவே தொடர்ந்து இருப்பது என்று நினைத்து இருக்க கூடிய வாய்ப்புக்கள் இருக்கலாம்தானே .மனித மனம் வஞ்சகம் நிறைந்ததுதானே .அதற்கு அமித்ஷா என்ன விதிவிலக்கா என்ன? எத்தனை நாளைக்குத்தான் இரண்டாம் இடத்திலே இருப்பது என்று நினைத்து இப்படி நடவடிக்கையில் இறங்கி ஆழம் பார்த்து இருக்கலாமே/
யோசிங்க மக்களே யோஸ்யுங்க
அன்புடன்
மதுரைத்தமிழன்

நாடக உலகம்...
ReplyDeleteஉலகத்திலேயே அதிகமான அலங்காரங்கள் செய்தது நம் வெங்கோலன் தான்...
தங்களது கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.... மறுப்பதற்கில்லை.
ReplyDelete