Monday, January 10, 2022

 

@avargal unmaigal

ராஜேந்திர பாலாஜி என்ன நீதிக்காக நெடும் பயணம் மேற்கொண்டவரா அவர் மீது உச்ச நீதிமன்றம் தனித்துவ  அக்கறை காட்டுவதற்கு?

எந்த குற்றவாளியையும் அவரை சார்ந்தவர்கள் நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதில்லை. தன் மகன் பிற பெண்ணை பாலியல் பலாத்காரம் பண்ணி இருந்தாலும் எந்த பெற்றோர்களும் அவனை நீதிமன்றத்தில் கொண்டு வந்து ஒப்படைப்பதில்லை.. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மற்றவர்கள் அல்லது அவர்களுக்கு எதிரானவர்கள்தான் அப்படிச் செய்வார்கள்.. அப்படி யாரும் செய்யும் போது நீதிமன்றத்தில் உள்ளவர்கள் ‘எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள். என்று அவர்களைப் பார்த்துக் கேட்பதில்லை.

அவன்  தவறுகள் செய்து இருக்கின்றானா  குற்றவாளிதானா எனத்தான் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் விசாரிப்பார்கள் அதுதான் உலக நியாயம்.. ஆனால் தவறுகள் செய்தாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு முன்னாள் அமைச்சர் தானே முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜராகித் தான் குற்றம் செய்யவில்லை என்றால் நிராதிபதி என்று நிறுபித்து வெளியேறி இருக்க வேண்டும் ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் சந்தணக்கட்டை வீரப்பன பொல ஓடி ஒளிந்து  கொண்டு இருக்கிறார். அவரை தேட காவல் துறை பல வகைகளில் முயன்று ,கடைசியில் கண்டுபிடித்து ,கைது செய்தால் எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாகத் தமிழக அரசைக் கேள்வி கேட்கிறது உச்ச நீதிமன்றம்


ராஜேந்திர பாலாஜி மீது ஏன் இவ்வளவு அக்கறை இந்த உச்ச நீதிமன்றத்திற்கு? பொங்கலுக்குப் பொங்கல் பொங்குவது போல  மோசடி குற்றங்கள் செய்து ஓடி ஒளிந்த ராஜேந்திர பாலாஜிக்காக இவ்வளவு பொங்குகிறதே நீதிமன்றம்  . பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது ராஜேந்திர பாலாஜியின் இந்த ஜாமீன் மனு வழக்கை, இவ்வளவு அவசரமாக  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே எடுத்துக் கொண்டதுமட்டுமல்லாமல் ”நீதிமன்றத்தை ஏன் தர்ம சங்கடப் படுத்துகிறீர்கள் எனக் கேட்கிறார் தலைமை நீதிபதி?



ராஜேந்திர பாலாஜியின் கைது நீதிமன்றத்தைத்  தர்ம சங்கடப் படுத்துகிறதா அல்லது இந்த நீதிமன்ற நீதிபதியின் பேச்சு தமிழகக் காவல்துறையையும் நீதியையும் தர்ம சங்கடப்படுத்துகிறதா அல்லது கேலி செய்கிறதா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

அரசு சாசணப்படி உறுதி மொழி எடுத்து பதவி ஏற்று சட்டமன்ற உறுப்பினர் & அமைச்சர் மற்றும் கட்சியின் மாவட்டத் தலைவர் என்ற பெரும் பொறுப்புகளிலிருந்தவர் தேடப்படும் குற்றவாளியாக ஆகி உள்ளார், தன்னுடைய இந்துத்துவ வெறிப் பேச்சுகளுக்கான வெகுமதியாகத் தான் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும், காப்பாற்றப்படுவோம் என்ற  நம்பிக்கையில் பல பாதகச் செயல்களைத்  தயக்கமின்றி அரங்கேற்றி வந்து இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்ட வந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தவர்கள்  வேறு யாரும் அல்ல தங்களைத் தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும்  பல  பாஜகவினர்தான் உதவியுள்ளனர் அதிலும் . கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகள், கர்நாடகாவின் பாஜக நிர்வாகிகள் அவரை காப்பாற்ற பெரும் பிரயத்தனம் செய்துள்ளனர்!

உச்சநீதிமன்றமோ, ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்வதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை எழுப்பியதோடு  அவரது உதவியாளர்களைக் கைது செய்யப்படுவதற்கும் இடைக் காலத் தடை அறிவித்துள்ளது. இதைப் பார்க்கும் போது நீதிமன்றம் எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது

முந்தைய ஆளும் கட்சியான அதிமுக தலைமை இது குறித்து இது வரை வாய் திறக்கவில்லை. ஒரு வேளை ராஜேந்திரபலாஜி தன் கட்சியாளாரக இருந்திருந்தால் ஒருவேளை அவரை கண்டித்து  இருக்குமோ என்னவோ ஆனால் அவர் பாஜகவின் பக்காத் தொண்டனாகக் காண்பித்து மோடி என் டாடி என்று சொன்னதால் அதிமுக தலைமை மௌனமாக இருக்கிறதோ என்னவோ


 ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கமாக அந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம் தானே இந்த வழக்கும்  ஒப்படைக்கப்படும். ஆனால் அப்படி இல்லாமல் தலைமை நீதிபதி தானே அவசரமாக எடுத்து விசாரித்தது ஏன்?அப்படி அவர்  எடுத்து விசாரிக்கச் சொல்லி வற்புறுத்தியது எந்த அதிகார்பதவியில் உள்ளவர்  என்பதும் பலரால் விவாதிக்கப்படுக் கொண்டுதான் இருக்கிறது

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வதற்கிணங்க மேலும், ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கள்  விவகாரத்தில் அவர்கள் முறையாக உயர்நீதிமன்றத்தில் ஜாமீனுக்காக அணுகி அது மறுக்கப்பட்டு இருந்தால் தான் உச்ச நீதிமன்றம் வரலாம். ஆனால், அவர்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்கள் இது மரபு மீறல். இது நன்றாகத் தெரிந்த எந்த நீதிபதியும் அவர்களை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கண்டித்து அனுப்பி இருப்பார்கள் . ஆனால், இந்த நீதிபதியோ இந்த உதவியாளர்களுக்கு முன் ஜாமீன் தந்ததோடு அல்லாமல்  ராஜேந்திர பாலாஜியால் ஏமாற்றப்பட்ட  நல்ல தம்பிக்கு ஜாமீன் மறுத்துள்ளார். இந்த லாஜிக் படிக்காதவனுக்குக் கூட புரியும் ஆனால் சட்டம் படித்த நீதிபதிக்குப் புரியவில்லையே இதை எப்படி எடுத்துக் கொள்வது???

நல்லா இருந்த நாடும் அதை நாசமாக்கும் இருவர்கள் இருக்கும் வரை நீதி எப்படி எல்லோருக்கும் சரியாக கிடைக்கும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.