Thursday, January 20, 2022

  

@avargal unmaigal

விவாகரத்திற்குப் பின்னால் இந்தியா vs அமெரிக்கா தம்பதிகள்

இந்தியாவில் விவாகாரத்து பண்ணிக் கொள்ளும் தம்பதிகள் விவகாரத்திற்குப் பின்னால் ஒருவரை ஒருவர்  விரோதிகளாகப் பாவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தாரும் அதுபோலவே விரோதிகளாகப் பாவிக்கிறார்கள் அது ஏன்? வரதட்சணை மற்றும் மற்றவரை உடம்பால் கொடுமைப் படுத்துவது இது போன்ற காரணங்களால் விவகாரத்துப் பண்ணினால் விரோதிகளாகப் பாவிப்பது கூட தப்பில்லை.. ஆனால் மனசு ஒத்துவாரமல விவாகரத்து பண்ணிய பிறகும் விரோதிகளாகப் பாவிப்பது ஏன்?

எத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து குழந்தை பெற்று ஒரே வீட்டில் வசித்து வந்த பின் சில காரணங்களால் விவகாரத்துப் பண்ணினாலும் குழந்தைகளுக்காக விவகாரத்து பெற்ற பின்  நண்பர்கள் போல உறவுகளைத் தொடர்வதில் என்ன தயக்கம் இந்த இந்தியர்களுக்கு.


என்னுடன் வேலை பார்க்கும் அமெரிக்கர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஹாஸ்பிடலில் அவரை அனுமதித்து இருந்தனர். அவரை நானும் என் கூட வேலை செய்யும் இன்னொருவரும் பார்க்கச் சென்றோம். அப்போது அவருடன் இருந்து அவரை கவனித்துக் கொண்ட பெண்மணியை எங்களுக்கு அறிமுகம் செய்தார். அந்தப் பெண்மணி வேறு யாரும் அல்ல அவர் விவகாரத்து செய்த  முதல் மனைவிதான் அது எங்களுக்கு மிகவும் ஆச்சிரியம் அளித்தது..


அது போல அவரின் சர்பரைஸ் பிறந்த நாள் விழாவிற்கு அவரின் இரண்டாவது மனைவி ஏற்பாடு செய்து அவருடன் வேலை பார்க்கும் எங்களையும் அழைத்து இருந்தார்.. அங்குச் சென்று பார்த்த போது அவரின் முதல் மனைவியையும் அழைத்து இருந்தார். அவரும் அங்கு வந்து வாழ்த்தி நிகழ்வில் சந்தோஷமாக இருந்தார்.அதைப் பார்த்தது எங்களுக்கு மீண்டும் ஆச்சிரியமாக இருந்தது.

அவரிடம் நாங்கள் நேரிடையாக கேட்டும் விட்டோம் எப்படி அவரால் இங்கு வந்து மகிழ்வாக இருக்க முடிகிறது என்று. அதற்கு அவர் சொன்னது நாங்கள் மனவேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து கொண்டாலும் எனது குழந்தைக்கு அவர் தந்தையாக இருப்பதால் அந்த குழந்தையின் தந்தைக்கு ஒன்று என்றால் கவனிப்பதுதானே சரியாகும் அப்படிச் செய்தால்தானே அந்த குழந்தையின் மனநிலையும் எண்ணமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் அதனால்தான் நாங்கள் இப்படி உடல்நிலை சரியில்லை என்றாலும் பார்ட்டிகள் என்றாலும் வேறு பிரச்சனைகள் என்றாலும் ஒருவரை ஒருவர் நட்புடன் கவனித்துக் கொள்கிறோம் . அதைத் தவிர வேறு எந்த ஒரு உறவும் எங்களிடையே கிடையாது அது போல எனக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் அவரும் என்னை வந்து பார்த்துக் கவனித்துச் செல்வார் என்றார்

 
@avargal unmaigal
இந்த படத்தில் முகம் மறைக்கப்பட்டவர்தான் என்னுடன் வேலை பார்த்தவரும் அவரது இரண்டாம் மனைவியும் நான் பதிவில் சொன்ன &சென்ற பிறந்தநாள் விழா



அதற்கு மேல் வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்துப் போனோம்..

காலச்சாரம் எப்படி இருந்தாலும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதிக்காமலிருந்தால் அது எவ்வளவு பழமையான கலாச்சாரமாக இருந்தாலும் அதில் பெருமைப் பட எண்ண இருக்கிறது

உங்களுக்கு டைம் இருந்தால் நீயூயார்க் டைம்ஸில் வந்துள்ள இந்த பதிவையும் படியுங்கள்



After Divorce, Giving Our Kids Custody of the Home



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. நல்ல விஷயம் தான் நண்பரே...

    ReplyDelete
  2. சில விஷயங்கள் அவரவர் மனம் சம்பந்தப்பட்டது.

    ReplyDelete
  3. நல்ல விஷயம் அட்லீஸ்ட் குழந்தைகள் இருந்தால் குழந்தைகளுக்காகவாவது நட்புடன் இருக்கலாம்தான்.

    என்றாலும் இதுவும் தனிப்பட்ட விஷயம் அனுபவம் மனம் சார்ந்த விஷயம் பிரிந்த பின்னும் உதவி செய்வது உட்பட. ஆனால் விரோதியாகப் பார்க்காமல் இருப்பது நல்லதே.

    கீதா

    ReplyDelete
  4. விவாகரத்தே இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லதோ?

    நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து நல்ல கருத்து

    துளசிதரன்

    ReplyDelete
  5. மதுரை...

    இதை எல்லாம் இந்தியாவிலும் இப்ப செய்யுறாங்க.

    உதாரணம் :நம்ம மானஸ்தன் சரத்குமார் மற்றும் ராதிகா

    ReplyDelete
  6. இது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று தோன்றுகிறது. அங்கே சாதாரணமாக நடப்பது இங்கேயும் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.