Saturday, January 1, 2022

 

@avargal unmaigal

ஜோசியம் பார்ப்பதால் நல்லாண்டு வந்துவிடாது

ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட புள்ளியில் முடிவதைத்தான் ஆரம்பம் முடிவு என்கிறோம். அதைப் போல ஒரு குறிப்பிட்ட காலவரையைத்தான் நாம் ஆண்டு என்கிறோம். அதாவது  ஒரு குறிப்பிட்ட காலவரை முடிந்து புதிய காலவரை தொடங்குவதைத்தான் புத்தாண்டு என்கிறோம்.. அவ்வளவுதானே தவிர அது ஏதும் நமக்குப் புதிதாக அதிர்ஷ்டங்களை அள்ளி தந்துவிடுவதில்லை.. புதிய ஆண்டுகள் நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகிறது என்று சும்மா எதிர்பார்த்து ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்காமல் அந்த புத்தாண்டு தொடக்கத்தில் என்ன விதைக்கப் போகிறீர்கள் அதாவது  நீங்கள் புத்தாண்டுக்கு என்ன கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்து அந்த ஆண்டு நல்ல ஆண்டாகவோ அல்லது கெட்ட ஆண்டாகவோ மாறும் / இருக்கும்


ஆண்டின் முடிவு என்பது ஒரு முடிவோ அல்லது தொடக்கமோ அல்ல, ஆனால் அனுபவம் நமக்குள் விதைக்கக்கூடிய அனைத்து ஞானத்தையும் கொண்டு நடக்கிறது. புதிய ஆண்டு மீண்டும் அதைச் சரியாகப் பெற நமக்கு  மற்றொரு வாய்ப்பு அவ்வளதான். அந்த வாய்ப்பை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது

2020 ல் கொரோனா நம்மில் பெரும் அழிவை ஏற்படுத்தியது அதன் மூலம் நாம் அதிலிருந்து தப்பிப்பது என்று பெரும் அறிவை பெற்றோம்.. ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்தி 2021ல் வாழ முயலவில்லை என்று சொல்லாம். அப்படிச் செய்து இருந்தால் 2021 நல்ல ஆண்டாகவே இருந்திருக்கும் ஆனால் அப்படிச் செய்யாமல் இருந்து விட்டு 2022 ஆண்டை சந்தேகத்துடன் வரவேற்கிறோம்..

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நம் மனதில் நல்ல எண்ணங்களை விதைப்போம் அதன் தொடர்ச்சியாக  நல்லதை அறுவடை செய்வோம்.

 
@avargal unmaigal




"ஒவ்வொரு நாளும் ஆண்டின் சிறந்த நாள் என்று உங்கள் இதயத்தில் எழுதுங்கள்.



அன்புடன்
மதுரைத்தமிழன்

புத்தாண்டை வழக்கமாகச் சந்தோஷமாக வரவேற்கும் நாம் இந்த ஆண்டு சந்தேகமாக வரவேற்கிறோம்

6 comments:

  1. சிறப்பான கட்டுரை தமிழரே...

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. நல்ல சிந்தனை.   புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மிகவும் அழகான கருத்து. சிந்தனை, மதுரை. மீண்டும் அந்த ப்ரௌன் போல்ட் வரிகளை டிட்டோ செய்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  5. மதுரைதமிழன்! மிக அருமையான பதிவு. நல்ல சிந்தனைகள். பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    துளசிதரன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.