Friday, December 31, 2021


புத்தாண்டை வழக்கமாகச் சந்தோஷமாக வரவேற்கும் நாம் இந்த ஆண்டு சந்தேகமாக வரவேற்கிறோம்

 

@avargal unmaigal


2021 ஆம் ஆண்டை சந்தோஷமாக வரவேற்ற நாம் இப்போது சத்தமில்லாமல் கழட்டிவிடப் போகிறோம்... நல்ல ஆண்டாக இருந்தால் அதற்கான நாட்களை மாதங்களை அதிகரிக்கச் செய்து அதை நம்மோடு வைத்துக் கொள்ளப் போவதில்லை அப்போதும் நாம் அதனைக் கழட்டி விடத்தான்  போகிறோம் அது போலக் கெட்ட ஆண்டுகளாக இருந்தாலும் நாட்களை மாதங்களைக் குறைத்து அதை உடனே கழட்டிவிடவும் முடிவதில்லை.


நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நமது எண்ணமும் செயல்களும்தானே தவிர புதிய ஆண்டுகள் அல்ல... ஆனால் புதிய ஆண்டின் தொடக்கத்திலாவது நாம் வாழப் போகும் ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்துத் தொடங்குவோம்.


2020 ஆம் ஆண்டு கொரோனா தீவிரமாகப் பரவி பலர் மடிந்தனர் அந்த ஆண்டை வேண்டுமானால் மோசமான ஆண்டாகக் கருதலாம் ஆனால் 2021  ல் நாம் கொரோனா மூலம் பாடம் கற்றுக் கொள்ளாமல் நாம்தான் 2021  மோசமான ஆண்டாக ஆக்கினோம்.


நாம் மட்டும் முககவசங்களை ஒழுங்காக அணிந்து, பொது இடங்களில் அதிமாக கூடாமல் ,அப்படிக் கூடும் போது இடைவெளிவிட்டு மக்கள் நின்று இருந்து, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இருந்தால் 2021 ஆம் ஆண்டும் மிகச் சிறப்பான ஆண்டாகவே இருந்திருக்கும்

அதனால் நல்ல ஆண்டு கெட்ட ஆண்டு என்று குறை கூறாமல் நாம்  நல்ல எண்ணத்துடனும் பழக்கவழக்கத்துடனும் இருந்து எல்லா ஆண்டையும் நல்ல ஆண்டாக இருக்கச் செய்வோம்


அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்!

    துளசிதரன்

    ReplyDelete
  2. பதிவின் கருத்து அருமை மதுரை! கடைசி போல்ட் எழுத்துகளுடனான வரிகளை வழி மொழிகிறேன்

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை தமிழரே..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. நல்ல ஆண்டு கெட்ட ஆண்டு என்று சொல்வது சரியல்ல. ஆண்டினை நல்லதாக்குவதும் கெட்டதாக்குவதும் நம் கையில் தானே. சிறப்பான பகிர்வு.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.