Monday, December 13, 2021

 

@avargal_unmaigal

ஒரு குட்டி கதை.....


மதுரைக்  கோயிலில் கோபுரத்தில் நிறையப் புறாக்கள் வாழ்ந்து வந்தன, ஒரு நாள் அந்தக் கோயிலில்  திருப்பணி நடக்க ஆரம்பித்தன.  அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி அலைந்தன. அப்படி அலையும் நேரத்தில் பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும்


 ஒரு தேவாலயத்தைக் கண்டன. அங்கு சில புறாக்கள் இருந்ததன. அவைகளோடு இந்த புறாக்களும் அங்குக் குடியேறின, கொஞ்ச நாள்     கழித்து கிறிஸ்துமஸ் வர இருப்பதால்  தேவாலயம் புதுப்பிக்கத் தயாரானது. உடனே     இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடிப் பறந்தன . அப்படிப் பறக்கும் சமயத்தில் காஜிமார் தெருவில் இருக்கும் ல் ஒரு மசூதியைக் கண்டன அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின.

  சில காலம் கழித்து ரமலான் வந்தது.  அதனால் அவர்களும் மசூதியை புதுப்பிக்கத் தொடங்கினர்  உடனே புறாக்களும் வழக்கம் போல் இடம் தேடிப் பறந்தன.    இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் மீண்டும் கோவிலுக்குக்  குடியேறின.அப்படிக் குடியேறிய சமயத்தில்     கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு "குட்டி"ப்புறா தாய் புறாவுடன் கேட்டது ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள்?" என்று.   அதற்கு அந்த தாய் புறா சொன்னது நாம் இங்கு இருந்த போதும் புறா தான் தேவாலயத்துக்குப் போனபோதும் புறா தான், மசூதிக்குப் போன போதும் புறா தான்,


ஆனால் மனிதன் கோயிலுக்குப் போனால் இந்து,    சர்ச்க்கு போனால் கிறிஸ்தவன்,    மசூதிக்குப் போனால் முஸ்லிம் என்றது.


குழம்பிய குட்டி புறா    அது எப்படி நாம் எங்குப் போனாலும் புறா தானே, அதுபோல தானே மனிதர்களும் என்றது.

அதற்குத் தாய் புறா இது நமக்குப் புரிகிறது ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்குப் புரிவதில்லையே என்றது

உடனே குட்டிப் புறா கேட்டது அவர்கள் சோறுதானே திங்கிறார்கள் அல்லது வேறு ஏதுவும் திங்கிறார்களா என்று கேட்டப்படி பறந்து செல்ல ஆரம்பித்தது

அன்புடன்
மதுரைத்தமிழன் 

 

டிஸ்கி : பதிவிற்கான படம் டெக்னிக்கல் "ERROR' ஆல் வந்து இருக்கிறது. டெக்னிக்கல் டீம் அதை சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹீஹீஹீ

நெட்டில் படித்ததில் பிடித்தது ,அதை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி பகிர்ந்துள்ளேன்

3 comments:

  1. பகிர்ந்த கதை மிக மிக அருமை!

    ஆனா நீங்க டிங்கரிங்க் பண்ணியது அந்த சிவப்புக் கொட்டை எழுத்து எரர் என்று சொல்லும் பகுதிதானே!!!!! இந்த அழகான கதைக்கு 'குட்டி' கதை (குட்டி யை இன்வெர்ட்டடில் போட்டு) என்று தலைப்பு அதுக்கு ஒரு படம்!!! வேறு!!

    கீதா

    ReplyDelete
  2. அனைவரும் உணர வேண்டிய பாடம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.