Sunday, December 19, 2021

நாட்டு நடப்புச் செய்திகள் கேள்விகளாகவும் அதற்கான கிண்டலான  பதில்களும்
 

@avargal unmaigal



ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர்? பிரசாந்த் கிஷோர் வியூகம் இந்த கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் மதுரைத்தமிழன்?

மதுரைத்தமிழன் : ஸ்டாலினிடம் இருந்து பல கோடிகளைக் கறக்க பிரசாந்த் கிஷோரின்  வியூகமாகத்தான் இருக்கிறது இது


உதயநிதி அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?

மதுரைத்தமிழன் : கோரிக்கைகள் படிப்படியாகத்தான் வைக்கப்படும் இப்போது 'முதலில் அமைச்சர்' கோரிக்கை அதன் பின் முதலமைச்சர் கோரிக்கை



தக்காளி விலை குறையாதது ஏன்: உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரைத்தமிழன் : தக்காளியை மட்டும் சொந்த காசு கொடுத்து வாங்குகிறார் போல அதனால்தான் கேள்வி கேட்கிறார்  பெட்ரோல் டீசல் விலை ஏன் குறையவில்லையென்று கேட்கத் தோணாது. அதுக்குத்தான் சம்பளத்துக்கு மேல் அலவன்ஸ்ன்னு ஒன்று கிடைக்குமே.

தனித்து நின்றிருந்தால் ஆட்சியைக் கைப்பற்றி இருப்போம்: ராமதாஸ்

மதுரைத்தமிழன் : ராமதாஸ்ய்யா தனித்து இருக்கும் போது எந்த ஆச்சியும் நெருங்கி வர வேண்டாம்

_____________________________________________________________


சீக்கியர்களின் குருத்தாவார் பொற்கோயிலில் இந்து ஒருவர் கொல்லப்பட்டதும் அதற்கான  காரணங்களும் 


________________________________________________________


Lawyer Radhakrishnan :உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எத்தனை  FIR Quash வழக்குகள்  நிலுவையில் உள்ளன? மாரிதாஸ் வழக்கில் மட்டும் ஏனிந்த மின்னல் வேகத் தீர்ப்பு? உயர் நீதிமன்றம் விளக்கவேண்டும்.


மதுரைத்தமிழன் : பைத்தியக்காரர்களுக்கு முன்னுரிமை என்று சட்டத்தில் ஏதாவது இடம் இருக்க வேண்டும் அதனால்தான் மின்னல் வேகத் தீர்ப்பாக இருக்கும்


உண்மையைக் கண்டு மோடி அரசு பயப்படுகிறது: ராகுல்


மதுரைத்தமிழன் : பொய்யர்களுக்கு உண்மையைக் கண்டால் அலர்ஜிதானே அதனால்தான் பயம்


பெண்களுக்கான திருமண வயது உயர்வு இது பற்றி உங்கள் பார்வை என்ன?

மதுரைத்தமிழன் : மோடி ஆட்சியில் இதாவது உயர்ந்து இருக்கிறதே இதனால் இந்தியப் பொருளாதாரம் உயரும் என்று சங்கிகள் முட்டுக் கொடுக்காமலிருந்தால் சரி


_____________________________________________________________

ஸ்டாலின் அரசைக் கிண்டல் செய்வதாக மோடி அரசைக் கிண்டல் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை


__________________________________________________________


"கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை" - உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?


மதுரைத்தமிழன்  உடல் இயக்கம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன  நோயாளிதான் கோமாவில் இருக்கிறார் என்று மருத்துவர் சொல்லுவது போல இருக்கிறது

 2024 ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று நீடிக்கலாம் பைசர் நிறுவனம் அறிவிப்பு

மதுரைத்தமிழன் : போகிற போக்கில் பார்த்தால் கொரோனா Graduation வாங்காமல் போகாது போல இருக்கிறதே

ஜனவரி 12 ல் மோடி தமிழகம் வருகிறார் அவரை எப்படி வரவேற்கப் போகிறார்கள் தமிழக மக்கள்?


மதுரைத்தமிழன் : இப்போது #GoBackModi என்று போடப் போவது சங்கிகளாகவும் #WelcomeBackModi என்று உபிக்களும் இருக்கப்  போகிறது. காலம் எப்படி எல்லாம் மாறுகிறது... ஆமாம் இப்ப நீங்கப் பதியப் போவது  #GoBackModi யா அல்லது  #WelcomeModi யா?


__________________________________________________________

தத்துவஞானி சாக்ரடீஸ் உயிரோடு இருந்து தமிழனாக இருந்திருந்தால் மோடியிடம் இந்த மூன்று கேள்விகளைக் கேட்டு இருப்பார்

__________________________________________________________

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. கொரோனா ஒவ்வொரு கட்டத்திலும் மறைவது போல சென்று உருமாறிக்கொண்டே இருக்கிறது.  வெவ்வேறு வடிவங்களில் அந்நியன் போல வந்து பயமுறுத்துகிறது.

    ReplyDelete
  2. யதார்த்தத்தைப் பகிர்ந்த விதம் சிறப்பு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.