சீக்கியர்களின் குருத்தாவார் பொற்கோயிலில் இந்து ஒருவர் கொல்லப்பட்டதும் அதற்கான காரணங்களும்
இந்த செய்தியைப் படித்த நமக்குத் தோன்றுவது அந்த மனிதர் தப்பு செய்து இருந்தால் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வேண்டும் என்பதுதான் .அதுதான் சரியான முறை .. ஆனால் நடந்தது என்னவோ அவர் அங்குக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அது சரியா என்றால் தவறு என்பதுதான் எல்லோரின் கருத்தாக இருக்கும்.இதை நான் மட்டுமல்ல படித்த எவருமே ஒப்புக் கொள்வார்கள் ஆனால் அங்கு ஏன் அப்படி நடந்தது என்று பார்ப்போமானால் நமக்குத் தெரிவது இதுதான்
மதங்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது அதைப் பின்பற்றுபவர்கள் கண்மூடித்தனமாக அதாவது குருட்டுத்தனமாகப் பின்பற்றுவார்கள் அப்படி இருக்கும் போது அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது நடந்தால், சவால் செய்தால் அல்லது அவமரியாதை செய்தால் அவர்கள் பைத்தியமாகிவிடுவார்கள் என்பதுதான் கசக்கும் உண்மை. மதங்கள் அன்பை போதித்த போதிலும் அதைப் பின்பற்றுபவர்கள் அதைப் பின் பற்றி நடப்பதில்லை. மதங்கள் மதவழிபாடுகள் எந்த மனிதனையும் நல்ல மனிதர்களாக உருவாக்கியதில்லை அப்படி உருவாக்கி இருந்தால் மதங்களை இழிவு படுத்தினாலும் அதைக் கடந்துதான் செல்வார்கள்.
இப்படி ஒரு சம்பவம் நடக்கும் போது உடனே மாற்று மதத்தினரால் அல்லது பாதிக்கப்பட்ட மதத்தினரால் உருவாக்கப்படும் செய்தி அவர் மனநலம் குறைவுள்ளவர் அதனால் அப்படி நடந்து இருக்கிறது என்று சொல்வதுதான் அப்படியான ஒரு செய்தி இருந்து அது உண்மையானால் அது மிகவும் வருத்தப்படவைக்கும் செயல்தான்
ஆனால் அப்படி இல்லாமல் யாரோ ஒருவரால் அல்லது ஒரு இயக்கத்தால் அல்லது கட்சியால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஒருவனை அனுப்பி இருந்தால் இப்படி நடந்ததற்கு வருத்தப்பட முடியாது. இப்படி நடந்து இருக்க வாய்ப்புக்கள் இருக்குமா என்றால் மிக அதிகளவு வாய்ப்புக்கள் இருக்கவே வாய்ப்புக்கள் உண்டு.
குறிப்பாக இரு முக்கிய மாநிலங்களில் தேர்தல் வருவதால் இப்படி ஒரு செயலைச் செயல்படுத்தி அதன் மூலம் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தி தாங்கள் வெற்றிக் கனியைப் பறிக்கலாம் என நினைப்போர்கள் உண்டு.( மதக் கலவரம் ஏற்படுத்தியும் ராணுவவீர்களை பலி கொடுத்தும் வெற்றி பெற்றவர்களுக்கு இப்படி ஒருவரை பலி கொடுத்து பிரச்சனையை உருவாக்கி வெற்றி பெற நினைப்பது இயல்பே )
அப்படியானால் இதைச் செய்ய வாய்ப்புக்கள் யாருக்கு அதிகம் உண்டு என்றால் மத்தியில் ஆளும் கட்சிக்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம். காரணம் வர விருக்கும் பஞ்சாப் மற்றும் உபி தேர்தலை இதற்குக் காரணமாகச் சொல்லாம். பஞ்சாபில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்கள் மிகக் குறைவே காரணம் அதற்கு விவசாயிகள் போராட்டத்தைச் சொல்லாம். விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் பெற்ற வெற்றி என்பது சீக்கியர்கள் பெற்ற வெற்றியாகவே கருதப்படுகிறது.அப்படிப்பட்ட சீக்கியர்கள் வாழும் பகுதிகளில் மத்திய அரசு வெற்றி பெற இயலாது. அடுத்த தேர்தல் நடக்க இருக்கிறது மாநிலம் உபி அங்கு வெற்றி பெற்றால் முன்பு போல அதிக அளவில் வெற்றி பெற முடியாது அங்கு ஆளும் கட்சிக்கு எதிரான வெறுப்பு அதிகமாக இருப்பதாகவே அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன. இன்னும் எவ்வள்வுநாள்தான் அங்கு இந்து முஸ்லீமுக்கு எதிராக பிரச்சைகளை கிளப்பி வாக்கு சேர்க்க முடியும் அதனால் இந்து சீக்கியர்களிடையே பிரச்சனையை எழுப்பினால் அது அவர்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும்.
அது எப்படி சீக்கியர் உபியில் அதிகம் வசிக்கவில்லையே என்ற கேள்வி எனலாம்
பஞ்சாபில் சீக்கியர்களால் காங்கிரஸுக்கு ஏற்படும் வெற்றி வாய்ப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சீக்கியர்களுக்கு ஆதரவாக இருக்கிறது அவர்கள் இந்துக்களுக்கு ஆதரவாக இல்லை ,இந்துக்களைக் காக்க வேண்டுமானால் இப்போதையை ஆட்சியே தொடர வேண்டும் என்று மக்களை உசுப்பேற்றினால் நிச்சயம் அதற்குப் பலன் கிடைக்கும் என்றுதான் ஆளும் கட்சி நினைக்கிறது. இப்போதையை ஆளும் கட்சிக்கு மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தி அதன் மூலம் பலன் பெறுவதைவிடக் குழப்பத்தைப் பிரச்சனைகளை உருவாக்கி அதன் மூலம் பலன் பெறுவது அதிகமாகவே எளிதாகவும் இருப்பதால் அந்த முறையைக் கையாளுகிறது என கருத முடிகிறது
இதன் காரணமாகவே இந்து ஒருவனைச் சீக்கியர் கோவிலுக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி அங்குப் பிரச்சனையை உருவாக்கி அவனைச் சாக அடிக்கவிட்டிருக்கிறது பாவம் ஆளும் கட்சியின் வெற்றிக்காகப் பலி கொடுக்கப்பட்ட ஒரு அப்பாவி இளைஞரின் ஒரு உயிர்ப் பலியாகி இருக்கிறது.
பஞ்சாபில் தீயை கொளுத்தி போட்டது யாரோ ஒருவரின் தீய சதி. இதை எதிர்கொள்வதற்கு அதிக முதிர்ச்சி, எச்சரிக்கை மற்றும் வலிமை தேவை. அது இந்தியர்களுக்கு இருக்கிறதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்
இந்துத்துவா சக்திகளுக்கு அமைதி பிடிக்காது & கேவலமான தேர்தல் அரசியல் மீண்டும் விளையாடுகிறது அவ்வளவுதான் மேட்டர்
இதைவிட வேறு எந்த காரணமும் இந்த பிரச்சனைக்கு இருக்க முடியாது .
அன்புடன்
மதுரைத்தமிழன்
இந்துத்வாவிற்கு அமைதி பிடிக்காது.இது தேர்தலில் வெற்றிபெற நடத்தும் நாடகம்.
ReplyDeleteஆட்சியை பிடிக்க யாரையும் காவு கொடுக்க தயங்க மாட்டார்கள் அரசியல்வாதிகள்.
ReplyDelete√
ReplyDeleteஅனைத்து மதக்காரர்களும் அடுத்த மதத்தை குற்றம் சுமத்திக்கொண்டே இருக்கின்றனர். மனிதர்களின் மனங்களில் பிடித்திருக்கும் மதம் மறையவேண்டும். மனிதம் மலரவேண்டும்.
ReplyDelete