Sunday, December 5, 2021

 தந்தையைப் பறிகொடுத்த பெண்ணிடம் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நடந்து கொள்ளும் கிழ்தரமான செயல்


மோடியின் புதிய இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் தன் தந்தையின் மரணத்திற்குச் செல்ல வேண்டி விசாவிற்கு விண்ணப்பித்த பெண்ணிடம் நாகரிகமற்ற முறையில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார். இவர் இந்திய மக்களுக்காகச் சேவை செய்யத்தான் இங்குப் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் தன் நிலை மறந்து மற்றொரு படித்த இந்தியக் குடிமகளிடம்  இப்படியா நடந்து கொள்வது அதுவும் தந்தையை இழந்த சோகத்தில் இருக்கும் பெண்ணிடம் வெட்கமாக இல்லை இதைப் பார்ப்பதற்கு

   



அது அங்குமட்டுமல்ல எல்லா தூதரகமும் அப்படித்தான் நடந்துகொள்கிறது ஏதோ அவர்கள் போனாபோகுது என்கிற மனநிலை அதிகார திமிரில்தான் அனுகிறார்கள். விபரம் அறிந்தவரிடமே இப்படி நடந்துகொண்டால் எப்படி மற்றவர்களிடம் ? மாறவேண்டும் அல்லது மாற்றவேண்டும்


இங்கு மட்டுமல்ல எல்லா  இந்தியா தூதரகங்களிலும்  இந்தியர்களே சக இந்தியர்களை இப்படித்தான் நடத்துகிறார்கள்
நமக்கு அது மனவருத்தத்தைத் தருகிறது. இது இன்றல்ல பல வருடங்களாக இப்படித்தான் நடக்கின்றன

mcdonalds, burger king, Pizza hut போன்ற இடங்களில் மிகக் குறைந்த அளவு படித்தவர்கள், அதுவும் ஹைஸ்கூல் படித்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்கள் இவர்களை விட  அன்பாக வரவேற்பு, சிரித்த முகத்துடன், நமக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கிறார்கள்

அவர்களை பார்த்தாவது அல்லது அவர்களிடம் கற்றுக் கொண்டாவது புதிய இந்தியத் தூதரக அதிகாரிகள் செயல்பட வேண்டும்


இந்த அதிகாரியின் பெயர் Vijay Shankar Prasad - the visa officer in charge


அன்புடன்

மதுரைத்தமிழன்

05 Dec 2021

5 comments:

  1. எனக்கும் இந்த க்ளிப்பிங்க் வந்திருந்தது. அவர் முறையாக நடந்து கொள்ளவில்லை. அவர் அப்ப்டி நடந்து கொண்டதற்கு அவர்தான் காரனம். இல்லையா? அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் அறிந்தேன் மதுரை.

    கீதா

    ReplyDelete
  2. இடையில் தமிழில் பேசுகிறாரோ... என்ன மனிதர்களோ.. அதிகார இடத்தில் இருக்கும் ஆணவம்.

    ReplyDelete
  3. காணொளி பார்த்தேன், பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. உலகிலேயே கேவலமான தூதரகம் நமது இந்தியர்களதுதான் எல்லா நாடுகளிலுமே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.