Thursday, December 16, 2021

 

@avargal_unmaigal

இப்போது  தத்துவஞானி சாக்ரடீஸ் உயிரோடு இருந்து தமிழனாக இருந்திருந்தால் மோடியிடம் இந்த மூன்று கேள்விகளைக் கேட்டு இருப்பார்

தத்துவஞானி சாக்ரடீஸிடம் ஒருவர் பேச வந்த போது அவரிடம் சாக்ரடீஸ் எழுப்பிய மூன்று கேள்விக்கான கதையை  சாக்ரடீஸ் & மோடி பேசியதாக மாற்றி அமைத்திருக்கின்றேன்.. படித்துப் பாருங்கள் அதன் பின் புரியும் தமிழக மக்கள் ஏன் மோடியின் பேச்சுக்குச் செவி சாய்வில்லை என்பது

சாக்ரடீஸிடம் மோடி வந்து நேருவைப் பற்றி (சங்கிகள் எழுதிக் கொடுத்ததை ) நான்  சொல்லுகிறேன் என்றார்


உடனே  சாக்ரடீஸ்  மோடிஜி சற்று பொறுங்கள்,  நீங்கள் என்னிடம் சொல்வதற்கு முன், நான் உங்களுக்கு மூன்று சல்லடை   சோதனை கொடுக்க விரும்புகிறேன்.-

உடனே மோடி மூன்று சல்லடைகளா அது என்ன என்று கேட்டார்

 மற்றவர்களைப் பற்றி ஏதாவது சொல்லும் முன், நீங்கள் சொல்ல விரும்புவதை வடிகட்டுவதற்கு நேரம் ஒதுக்குவது நல்லது.


 முதல் சல்லடை சத்தியம். நீங்கள் என்னிடம் சொல்லப் போவது உண்மைதானா என்று சரிபார்த்தீர்களா?

- இல்லை, நான் அதைப் பற்றி மட்டுமே கேள்விப்பட்டேன் ...

- மிகவும் நல்லது. எனவே இது உண்மையா என்று உங்களுக்குத் தெரியாது. இரக்கம் என்ற இரண்டாவது சல்லடையைப் பயன்படுத்துவோம் . என் நேருவைப்  பற்றி நீங்கள் என்னிடம் சொல்ல விரும்புவது நல்லதா?

- இல்லை,

மாறாக!- எனவே நீங்கள் அவரைப் பற்றி என்னிடம் மோசமான விஷயங்களைச் சொல்ல விரும்புகிறீர்கள், அவை உண்மையா என்று கூட உங்களுக்குத் தெரியாது.

அது சரி கடைசி சல்லடையைப் பயன்படுத்துவோம் அதிலாவது ஒருவேளை நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறலாம், மூன்றாவது சல்லடை,  பயன்பாடு. இந்த நேருவைப் பற்றி நீங்கள் சொல்வதால் அதைக் கேட்கும் எனக்கு ஏதாவது பயன் இருக்குமா?
 
- உண்மையில் இல்லை.


அப்படியானால் நீங்கள் என்னிடம் சொல்ல விரும்பியதில் உண்மையும் இல்லை, நல்லதும் இல்லை, பயனுள்ளதும் இல்லை. அப்படியென்றால் நீங்கள் ஏன் என்னிடம் சொல்ல விரும்பினீர்கள்? மோடிஜி நீங்கள் இப்படி உளருவதை வடநாட்டோடு வைத்துக் கொள்ளுங்கள் தமிழ் நாட்டுப் பக்கம் வந்திடாதீங்க வந்தால் தமிழ்மக்களிடம் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போவீங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்

 

டிஸ்கி : இப்படித்தான் நம்மிடம் உளறவரும் நபர்களிடமும் ,சங்கிகளிடமும் மோடிஜியிடம் கேள்விகளை கேட்க வேண்டும் அப்பயி இல்லை என்றால் நாமும் சங்கிகளாகவே இருக்கவேண்டும்


1 comments:

  1. அறிதல் தெரிதல் புரிதல்

    இந்த பதிவின் சாரத்தை ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.