Saturday, December 4, 2021

 


@avargal unmaigal

மோடியை நல்லவராக்கும் தகுதி யோகி  ஆதித்யநாத்க்கு மட்டுமே உண்டு.


இந்தியாவில் மோடி பக்தர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மோடியை மிக மோசமான பிரதமராகவே பார்க்கிறார்கள் அது பற்றியும் பேசுகிறார்கள். இப்படித்தான் மன்மோகன் சிங்கையும் நாம் ஒரு காலத்தில் பேசி காறித் துப்பிக் கொண்டிருந்தோம்.. அப்படிப்பட்ட மன்மோகன் சிங்கையும்  இப்போது  நாம் அதிகம் பாராட்டவில்லை என்றாலும் அவரை ஒரு நல்ல பிரதமராகப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறோம்.. அது போலத்தான் வருங்காலத்தில் மோடியும் பேசப்படுவார் என நினைக்கின்றேன். அதற்கான காலத்திற்குத் தூரம் அதிகம் இல்லை அது வெகு விரைவில்  தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்பதை இந்தியாவிலிருந்து வரும் செய்திகளை வைத்து அறிந்து கொள்ள முடிகிறது

அப்படி மோடியை மிகச் சிறந்த முன்னாள் பிரதமர் என்று பாராட்டுக்கு உரியவராக ஆக்கும் சக்தி யோகிக்கு மட்டுமே உண்டு, அடுத்த தேர்தலில் அவர் பிரதமராகி ஆட்சி அமைத்தால் மோடி மிக மிக நல்லவராகிவிடுவார். இதைக் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது நமக்குத் தோன்றுகிறது.



அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. நீங்க சொல்வதைப் பார்த்தால் ஐம்பது சதவிகித இந்தியர்களுக்கு மேல் மோடி பக்தர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறதே.

    ReplyDelete
    Replies

    1. நான் கணக்குல வீக் அதனால எனக்கு இந்த சதவிகித கணக்கு புரியல. ஆனால் நடப்பதை கணிக்க தெரியும்...எப்படி அத்வானி பக்தர்கள் மொடி பக்தர்களாக மாறினார்களோ அது போல மோடி பக்தர்கள் யோகி பக்தர்களாக ஆகும் நாளுக்கு தூரம் அதிகம் இல்லை

      Delete
  2. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தாரா? 

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னது சுதந்திர இந்தியாவின் பிரதமரை ஹீஹீ

      Delete
  3. Replies

    1. இப்போது சங்கிகளுக்கு மட்டும் நல்லவராக இருப்பவர் அவரை விட மோசமான ஒருத்தர் வரும் போது மனித மனம் புதிதாக வந்தவரோடு ஒப்பிட்டு பழையவரை நல்லவர் என நினைக்க வைக்கும் இது மனித இயல்பு இப்ப பாருங்க வாயையை திறக்காத இந்தியாவை விற்பதில் முன்னோடியாக இருந்த மன்மோகன் சிங்கை பலர் மோடியோடு ஒப்பிட்டு நல்லவர் மாதிரி பேசிவருகிறார்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.