உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, December 31, 2011

புத்தாண்டு தினத்தில் என்ன மாதிரியான தீர்மானம் (New Year's Resolutions) எடுக்க வேண்டும்புத்தாண்டு தினத்தில் என்ன மாதிரியான தீர்மானம் (New Year's Resolutions) எடுக்க வேண்டும்

வணக்கம் அவர்கள்...உண்மைகள் வலைத்தள வாசகர்களே & நண்பர்களே !இந்த  பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வலைப்பக்கத்திற்க்கு அன்பும் ஆதரவும் அளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பொதுவாக ஓவ்வொரு ஆண்டின் ஆரம்ப நாளில் சில தீர்மானங்கள்(New Year's Resolutions) எடுக்கின்றோம். ஆனால் நாட்கள்  செல்ல செல்ல நாம் எடுத்த தீர்மானங்கள் மாதம் முடிவுதற்குள்  காற்றோடு காற்றாய் கரைந்துவிடுகிறது. இந்த பதிவில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை வழங்குவதோடு இந்த புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் நாம் கடைசி வரை கடைபிடிக்க கூடிய தீர்மானத்தை தேர்ந்தெடுக்கும்  சில வழிகளை பார்ப்போம்.

1. இந்த வருடம் கண்டிப்பாக 15 KG எடை அதிகரிக்க முயற்சி செய்வோம்.
2. உடற்பயிற்சி செய்வதற்கான நாட்களை குறைத்து கொள்வோம்.
3. குறைந்த அளவு புத்தகம் படிப்பதால் சிந்தனை வளரும் என்பதை புரிந்து அதை கடை பிடிப்போம்
4 .பக்கத்து வீட்டுகாரிக்கு போட்டியாக நான் பொருட்களை வாங்க மாட்டேன். அதற்கு பதிலாக நான் வாங்குவதை பார்த்து அவள்     பொறாமை படும்படி நடந்து கொள்வேன்.
5. இந்த வருடம் டிவியில் வரும் சிரியல் மட்டுமல்லாமல் அதில் வரும் விளம்பரங்கள் அனைத்தையும் கண்டிப்பாக பார்ப்போம்.
6. அடுத்த ரூமில் வேலை செய்து கொண்டிருக்கும் மனைவிக்கு அடிக்கடி இமெயில் அனுப்புவதை நிறுத்துவோம்
7. நாம் எதற்கு 10க்கும் மேற்பட்ட இமெயில் ஐடி வைத்திருக்கிறோம் என்பதற்கான காரணத்தை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்
8. வேலைக்கு செல்லும் போது வீட்டில் இருந்து மதிய உணவு எடுத்து செல்ல மாட்டோம் என்பதை கடைப் பிடிப்போம்
9 .மனைவி ஆசையாக மதிய உணவு கட்டி கொடுத்தால் அதை தெரு முனையில் இருக்கும் நாய்க்கு போட்டு புண்ணியம் தேடி கொள்வோம்
10 .தண்ணி அடித்தால் கண்டிப்பாக ஐந்து ரவுண்டுக்கு மேலாக அடிக்கமாட்டோம் என்று சபதத்தை 6வது ரவுண்டுக்கு அப்புறம் ஏற்போம்
11. பதிவுகள் படிப்பதை குறைத்து கொண்டு பின்னூட்டம் அதிகம் இடுவோம்.
12. முதல் வடை, சூப்பர் மச்சி, கலக்கிட்டிங்க, சூப்பர் என்ற பின்னுட்டங்களை காப்பி & பேஸ்ட் செய்ய மாட்டோம் அதற்கு பதிலாக புதிய வரிகளை சேமித்து வைத்து அதை காப்பி & பேஸ்ட் பண்ணுவோம்

என்ன மக்காஸ் இந்த மாதிரி நல்ல  தீர்மானங்களை நாம் எடுத்தால் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கலாம்.  அதைவிட்டு விட்டு சில கெட்ட பசங்க  சிகரெட் குடிப்பதை நிறுத்துவோம், மது அருந்துவதை நிறுத்துவோம், வேலையில் இருந்து வீட்டுக்கு சிக்கிரம் செல்வோம், தினசரி உடற்பயிற்சி செய்வோம், அதிகம் படிப்போம், டிவி பார்ப்பதை குறைத்து கொள்வோம், மனைவியிடம் அன்பாக நடந்துகொள்வோம், மற்றவர்களுக்கு உதவுவோம் என்று பல கெட்ட பழக்கவழக்கங்களை கடைபிடிப்போம் என்று பல அற்ப தீர்மானங்களை  சொல்லுவார்கள் அதையெல்லாம் நம்மால் ஆண்டு முழுவதும் கடைபிடிக்க முடியாது.

அதனால் நீங்கள் உங்களால் எதை செய்ய முடியுமோ & வேண்டுமோ  அதை தீர்மானமாக எடுத்து கடை பிடிக்க முயற்சி செய்து வெற்றி பெறுங்கள். மேலே நான் எழுதியவை எல்லாம் நகைச்சுவைக்காக எழுதியது அது படித்து நகைக்கவே அதனால் அதை சிரியஸாக எடுத்து பதில் அளிக்க வேண்டாம்.

உலகின் பல நாடுகளில் வசிக்கும் மக்கள் புதிய ஆண்டில்(2012) அடி வைத்து நடக்க தொடங்கி இருக்கிறீர்கள் ஆனால் நான் இன்னும் பழைய ஆண்டில்( 2011) ல் தான் இருக்கிறேன்.(புதிய ஆண்டில் அடி எடுத்து வைக்க இன்னும்  நாலரை மணி நேரம் இருக்கிறது) உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இதுதான் 2011 ல் இறுதியில் இட்ட பதிவு என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்Friday, December 30, 2011

மது அருந்தும் பதிவாளர்களுக்கான பதிவு (Drinks Recipe) New year Eve's spacial


மது அருந்தும் பதிவாளர்களுக்கான பதிவு (Drink Recipe) New year Eve's spacialகுடிப்பது மிக தவறு என்று கருதுபவர்கள் & குடித்தே குடும்பங்களை அழிப்பவர்களுக்கான பதிவு அல்ல இது. எப்போதாவது நண்பர்களுடன் சேர்ந்து  மது அருந்துபவர்களுக்கான பதிவு இது.


புத்தாண்டை மது அருந்தி கொண்டாடி வரவேற்கும் பதிவாளர்களுக்காக எனக்கு பிடித்த சில டிரிங்க்ஸ் மற்றும் அதனை எப்படி கலந்து அளவோடு குடிப்பது என்பதற்கான டிப்ஸ்

மார்ட்டினி ( Martini )

தேவையானவை Ingredients:


1 1/2 அவுன்ஸ் வோட்கா
1 1/2 அவுன்ஸ் க்ரான்பெறி(Cranberry Juice) ஜூஸ்


மிக்ஸிங் களாஸில் அரை க்ளாஸ் அளவு ஐஸ் போட்டு அதில் மேல் சொன்னவற்றை எல்லாம் அதில் கலந்து நன்கு குலுக்கி  குளிர்ந்த க்ளாலில் பறிமாறி குடிக்கவும்.

கேம் ஒவர்(Game over)


0.5 அவுன்ஸ்  ஜின் (Gin)

0.5 அவுன்ஸ் மெலன் (Melon )

0.5 அவுன்ஸ் ரம் (Rum)

0.5 அவுன்ஸ் தக்கிளா(Tequila)

0.5 அவுன்ஸ் வோட்கா(Vodka)

இதையெல்லாம் பைன் ஆப்பிள் ஜுஸுடன்( Pineapple juice) கலந்து அருந்தவும்

மொஜிட்டோ ( Mojito)

தேவையானவை Ingredients:

2-3  அவுன்ஸ் லைட் ரம் (Light rum)
1 அவுன்ஸ் லைம் ( Lime )
2  tsp  சுகர் (Sugar )
2-4 புதினா( Mint )sprigs
சோட வாட்டர் (Soda water) 

Mixing instructions:

 மிக்ஸிங் க்ளாஸில் சோடவை ஊற்றி அதில்  புதினா & சுகரை போட்டு சுகர் கரையும் வரை மிக்ஸ் செய்யவும். அதன் பின் லைம் ஜூஸை விட்டு அதனுடன் ரம் & ஐஸ் கட்டிகளை சேர்த்து நங்கு ஷேக் செய்யது அதனை வடிகட்டி அதனை க்ளாஸில் விட்டு அதனுடன் உடைத்த ஐஸ் துண்டுகளை போட்டு அதின் மேல் சிறிது சோட ஊற்றி புதினா இலையை அதின் மேல் கார்னிங்க்ஸ்க்காக போட்டு உங்கள் நண்பர்களுக்கு பறிமாறவும்.


இதெல்லாம் பெரிய வேலை என்று நினைத்தால் ரம்மில் குளிர்ந்த கோக் ஊற்றி அதில் வட்டவடிவில் கட் செய்த லெமனை போட்டு  அதனுடன் சில ஐஸ் துண்டுகளை போட்டு அருந்தவும்.மதியம் ஒழுங்காக சாப்பிடாமல் வயிற்றை காய போட்டு இரவு நேரத்தில் குடிக்காதீர்கள் மேலும் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அருந்தவும். குடிக்கும் போது தேவையான அளவு சைடிஸ் எடுத்து கொள்ளுங்கள். குடித்த பின் மொத்தமாக உணவை போட்டு தாக்காதீர்கள். இப்படி செய்தால் நீங்கள் வாந்தியெடுக்காமல் மது அருந்தி மகிழலாம்.

இங்கு தவறுதலாக வந்தவர்கள் சென்னையில் வசிப்பவர்கள் என்றால் மயிலாப்பூர் டேங்க் எதிரில் உள்ள கடைக்கு போய் ப்ருட் மிக்ஸர் வாங்கி குடித்தும் மதுரையில் உள்ளவர்கள் பஸ்ஸாண்டு கடைகளில் விற்கும் பழ ரசம் வாங்கி அருந்துங்கள்.

Life is short... so enjoy as much you can....டிஸ்கி : நான் வசிக்கும் ஊரில் உள்ளவர்களுக்காக (நியூஜெர்ஸி) ஒரு முறை On The Border மெக்ஸிகன் ரெஸ்டரெண்டுக்கு சென்றால் போர்டரிடா ராக்(Borderita on the rock) வாங்கி அருந்துங்கள் சூப்பர் ட்ரிங்

மன்னிக்கவும் தமிழ்நாட்டு மக்காஸ் இதையெல்லாம் பார்சல் வாங்கி அனுப்ப முடியாது.

Wine vs water ….. எது நல்லது? குடிகார மக்களுக்காக......

To my friends who enjoy a glass of wine.. and those who don’t.

As  Franklin said: In wine there is wisdom, in beer there is freedom, in water there is bacteria.

if we drink 1 liter of water each day, at the end of the year we would have absorbed more than 1 kilo of Escherichia coli, (E. coli) bacteria found in feces.

However, we do NOT run that risk when drinking wine & beer (or tequila, rum, whiskey or other liquor) because alcohol has to go through a purification process of boiling, filtering and/or fermenting.

Remember: Water = Sick ,Wine = Health

Take it easy!!!!!!!!!!!!!!!!!!!!!
GOOD Bye 2011.

அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

 

Thursday, December 29, 2011

பண்பாடு தவறிய தமிழக தலைவர்கள்


பண்பாடு தவறிய தமிழக தலைவர்கள்நம் வீட்டில் ஆயிரம் சண்டைகள் சச்சரவுகள் இருக்கலாம் ஆனால் அந்த நேரத்தில் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் சண்டை சச்சரவுகளை மறந்து  வந்தவர் முன்னால் இன்முகம் காட்டி இருப்பதுதான் காலம் காலமாக நம் தமிழர்கள் கடைபிடிக்கும் பண்பாடு.நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக தலைவர்களான ஜெயலலிதா, அழகிரி, டி.ஆர் பாலு அனைவரும் நம் நாட்டு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரின் முன்னால் நடந்து கொண்ட விதத்தை பற்றிதான்  இங்கு. குறிப்பிடுகிறேன். அப்போது நடந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது இந்த சிறு பிள்ளைகளையா நாம் தலைவராக தேர்ந்தெடுத்தோம் என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் மனது வேதனைப்படுவதை மறைக்க முடியவில்லை.முதலில் ஜெயலலிதா அவர்களைப் பற்றி இங்கு பார்ப்போம். இவர் தமிழக மக்களின் ஆமோக ஆதரவைப் பெற்று தமிழக முதல்வாராக தேர்ந்தெடுக்கப்பட்டு "அம்மா" என்று அழைக்கப்படுபவர் எதிர்கட்சி தலைவரின் மகனும் மத்திய அமைச்சருமான அழகிரியை பார்த்த போது என்னப்பா செளக்கியமா? நல்லா இருக்கிறாயா என்று ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து கேட்டு தமது மதிப்பை உயர்த்தி இருக்கலாம்.சரி அதைவிடுங்க.. நம்ம அழகிரி அண்ணை இப்பபோ பார்ப்போம்.தமிழ் தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்று மூச்சுக்கு முன்நூறு தடவை பேசிவரும் கலைஞர் தன் குழந்தைகளை தமிழக தலைவராக்குவதற்கு முயற்சி எடுத்த அளவு தமிழ் பண்பாட்டை கற்று கொடுத்து இருக்கலாம். அதுதான் நடக்கவில்லை

அதனால்தான் ஜெயலலிதா அவர்களை அழகிரி பார்த்த போது அம்மா வணக்கம் செளக்கியமா இருக்கிறிர்களா என்று கேட்கவில்லை.இப்படி இந்த தலைவர்கள் பொது இடத்தில் சந்திக்கும் போது பண்பாடோடு நடப்பதனால் அவர்களின் தரம் குறைந்து போவதில்லை மாறாக தரம் உயர்ந்து மக்கள் மனதில் நல்ல இடத்தை பெறுவது மட்டுமல்லாமல் மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருந்திருக்கலாம்.

இந்த பழக்கத்தை நம் வட நாட்டு தலைவர்களிடமும் மேலை நாட்டு தலைவர்களிடமும் காணலாம் ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழ் "குடி'மகன்களிடம் மட்டும் இந்த பண்பாடு இல்லை. இது நமக்கு வெட்கமாக தோன்றவில்லையா?கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணாவின் வழியை பின்பற்றும் இந்த இரண்டு கட்சி தலைவர்களும்  அடுத்த முறையாவது எங்காவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பண்பாடோடு நடந்து, எதிர்கட்சியாளர்கள் என்பவர்கள் கருத்துகளுக்கு மட்டும்தான்  எதிரி மனிதர்களுக்கு எதிரிகள் அல்ல என்று   மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

Wednesday, December 28, 2011

தமிழ் திரைப்பட கூத்தாடிகளின் போலி முகங்கள்


தமிழ் திரைப்பட கூத்தாடிகளின் போலி முகங்கள்முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்து கொண்டு வருகின்றனர்.  கேரளாவின் பொய்ப் பிரச்சாரம், விஷமத்தனம், தமிழகத்தின் உரிமையை பறிக்க அவர்கள் நடத்தும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் பணியில் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி இயக்குநர்கள் பலரும் இதில் அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால் தமிழக நடிகர்களோ இந்த விஷயத்தை உலகின் மூலையில் உள்ள ஏதோ ஒரு சிறு கிராமத்தில்  நடக்கும் ஒரு சிறு நிகழ்ச்சியாக கருதி வாய் மூடி  இமய மலை அடிவாரத்தில் இருக்கும் யோகிகள் போல அமைதிகாத்து கொண்டிருக்கின்றனர்..இந்த மெளன யோகி நடிகர்களுக்கு தமிழகத்தில் தேர்தல் வரும் ஒர் ஆண்டுகளுக்கு முன்புதான் முதலைமச்சராகும் ஆசையில் மெளனத்தை கலைத்து சமுக பிரச்சனைகளுக்காக ஆதரவு தருவார்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசுவாரகள்.இந்த கூத்தாடிகளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் முல்லை பெரியாறு விஷயமாக தமிழ் மக்களுக்கோ அல்லது கேரளாகாரர்களுக்கு ஆதரவாக பேச வேண்டாம். நியாம் எந்த பக்கம் உள்ளதோ அதை ஆதரித்து பேசுங்கள். இதை செய்ய உங்களால் முடியுமா?நிச்சயமாக உங்களால் முடியாது ஏனென்றால் படத்துக்கு படம் அரிதாரம் பூசி தினம் நடித்து வரும் நீங்கள் வேசதாரிகளாகவே மாறிவிட்டீர்கள். அதனால் உங்களால் நியாம் எது என்று உங்களால் அறிய முடியாது. உங்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்கள் படங்கள் வெற்றியடைய வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்விர்கள்.ஏன் உங்கள் தாய் குடி இருக்கும் வீட்டை இடிப்பவன் உங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடைய செய்பவன் என்றால் அதையும் பார்த்து கொண்டிருப்பிர்கள் இல்லை உங்கள் தாயை பலாத்தகாரம் செய்பவன் உங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடைய செய்பவன் என்றால் அதையும் மெளன யோகிகள் போல பார்த்து கொண்டிருப்பிர்கள் என்பது உண்மைதானே.உன்னை வளர்த்தவள் தாய் என்றால் உன் நடிப்பை பார்த்து உன்னை இந்த பிரபல நிலைக்கு வளர்த்த இந்த தமிழகமும் தமிழ்மக்களும் உனக்கு தாய்தானே.

நீங்கள் எல்லாம் ஒரு ஆண்மகன் என்றால் வாய் திறந்து தமிழகத்துக்காக அல்ல கேரளாகார்களுக்காக அல்ல நியாத்துக்காக குரல் கொடு...அது உன்னால் முடியுமா? ஆண்மகன் என்று உன்னால் இந்த சமுகத்துக்கு நிருபிக்க முடியுமா?

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog