சரியான மொபைல் போன் பிளானை தேர்ந்துதெடுப்பது எப்படி?(இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்)
நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்து நீங்கள் செல்போன் வைதிருப்பவர்களாக இருந்தால்( இது என்ன கேள்வி ஓவ்வொரு பாக்கெட்டுக்கும் ஒரு போன் வைத்திருப்பவர்கள் நாங்கள் என்று நீங்கள் கொடுக்கும் குரல் அமெரிக்காவுக்கே கேட்கிறது..சரி நான் இப்படியெல்லாம் கேள்வி கேட்கமாட்டேன் ஓகேவா) உங்களுக்காக நான் நெட்டில் கண்டுபிடித்த ஒரு பயனுள்ள தளம். இங்கே சென்று உங்களுக்கு தேவையான காஸ்ட் எஃபெக்ட் பிளானை உங்கள் உபயோகத்திற்கு ஏற்ப கண்டு அறியலாம்.
Find the Perfect Mobile Plan
உங்களுக்கு தேவையான மிக சிறந்த பிளான் எது? (Find the Perfect Mobile Plan )
எது மிக சிறந்த பிளான் என்பதை கம்பேர் செய்து பார்க்க நீங்கள் ஆன்லைனுக்கு சென்று பார்க்க வேண்டிய வலைத்தளம் Komparify.com அல்லது நீங்கள் ஆண்ட்ராய்டு(Android phone) போனை வைத்து இருந்தால் இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்து உபயோகிக்கவும் mobile app
நீங்கள் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துவிட்டவுடன் உங்களுடைய ரீஜெனை அல்லது டெலிகாம் சர்கிளை (region or telecom circle )செலக்ட் செய்யவும் அதன் பின் அதில் வரும் உங்களது கரெண்ட் செல்போன் சர்விஸ் கொடுப்பவரை செலக்ட் செய்யவும். இந்த அப்ளிகேஷன் உங்கள் போனில் இருக்கும் கால்லாக்கை கலெக்ட் செய்து( உள்நாட்டு/வெளிநாட்டு) உங்கள் உபயோகிக்கும் அளவிற்கு தகுந்து எந்த சர்வீஸ் கம்பெனி மிக காஸ்ட் எஃபெக்டாக இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ண வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் நேரடியாக அந்த வலைத்தளத்திற்கு சென்று தேவையான விபரங்களை கொடுத்தால் அது மேற்கூறிய விபரங்களை உங்களுக்கு தரும்.
ஸ்விட்சிங் சர்விஸ் கம்பெனி இப்போது மிகவும் ஈஸி என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லைதானே?
உங்களுக்கு உண்மையிலேயே மொபைல் பில்லை குறைத்து பணம் சேமிக்க வேண்டும். இது மிக சிறந்த தளம் என்று நான் கருதுகிறேன்.
எனக்கு தெரிந்த தகவலை நான் இங்கு கூறியுள்ளேன். அதை பரிசோதித்து முடிவு எடுக்க வேண்டியது உங்கள் முழு பொறுப்பு.
அதில் ஏதும் குறை ஏதும் கண்டால் பின்னுட்டமாக பதிலிடுங்கள் அது பின் வந்து படிப்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். நான் இந்தியாவில் இருந்து மொபைல் போன் உபயோகித்தால் அதையும் நான் பரிசோதித்துவிடுவேன். நான் அங்கு வசிப்பவன் இல்லை என்பதால்தான் உங்களேயே நான் பரிசோதித்து கொள்ள சொல்கிறேன்.
சோதனை செய்து பின்னூட்டமிடுகிறேன்
ReplyDeleteமின்சாரத் தடையால் மிக மிக அவதியுருகிறோம்
ஆற்காடு வீராச்சாமியை நல்லவராக்கிவிடுவார்கள் போல்
உள்ளது இங்குள்ள நிலைமை
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல, பயனுள்ள பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
தனியார் நிறுவனங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கொள்ளை ஆரம்பித்து விட்டார்கள்.. நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் என்பது ரூபாய் தான் டாக் டைம்... பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஆறு ரூபாய் தான்... இதில் வரி பத்து சதவிகிதம் என்பதால், புல் டாக் டைம் கொடுப்பதை சரிசெய்யவே இந்த கொள்ளையில் இறங்கி உள்ளனர்...
ReplyDeleteஇதில் இன்னும் கொடுமை என்ன என்றால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தாமலே அதன் தரம் சரியில்லை என்று புலம்புவது தான்... திருவண்ணமாலை தீப நாளில் air tel நிறுவனம் tower கிடைக்காமல் ரீசார்ஜ் கூட செய்ய முடியாமல் மக்கள் அவதிப் பட்டது மறந்து விடுவார்கள்..
ReplyDeleteஅப்போ வெளிநாட்டுல இருக்குற எங்களுக்கு...??
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇங்கு மின் தடை பாடாய் படுத்தி வருகிறது. என் வலைப்பக்கமே வருவதில்லையே? ஏன்? அன்புடன் vgk