Sunday, December 25, 2011

கிறிஸ்மஸ் நாளில் பதிவாளருக்கு பாடம் கற்பித்த குழந்தையின் ஸ்மார்ட்னஸ்


மதத்தால் அல்ல மனித மனத்தால்  ஓன்று பட்டு கூடுமிடம் எங்கள் வீடு.  எம்மதமும் எனக்கு சம்மதம் என்று நினைத்து வாழுவதால் என் வீட்டில் கிறிஸ்மஸ் சமயம் வீட்டு வாயிலை அலங்கார லைட்டுகளால் அலங்கரித்தும் வீட்டின் உள்ளே 8 அடி உயரத்துக்கு எப்போதும் கிறிஸ்மஸ் மரம் வைத்து அலங்கரித்து வைப்போம். அதன் அடியில்  முதல் நாள் இரவு குழந்தை பாலையும் பிஸ்கட்டையும் Santa வுக்காக வைத்துவிட்டு தூங்க செல்வாள் அதன் பின் நாங்கள் பரிசு பொருட்களை வைத்து விடுவோம். அடுத்த நாள் குழந்தை தூங்கி எழுந்திருந்து பார்த்து ஆச்சிரியம் படும்போது சாண்டா க்ளாஸ் (Santa Claus) வந்து என் பெண்ணுக்காக வைத்து விட்டு சென்றதாக சொல்வோம். இது ஓவ்வொரு வருடமும் நடக்கும் செயல். இந்த நிகழ்ச்சி கிறிஸ்மஸ் நேரத்தில் வழக்கமாக மேலைநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சி. அது எங்கல் வீட்டிலும் நடக்கும். குழந்தைகள் சிறிதும் வளர்ந்ததும் Santa Claus என்பது உண்மையல்ல என்று தெரிந்துவிடும்.

 


கடந்த வருடம் நண்பர்களுடன் சர்ச்சுக்கு போய்விட்டு நண்பரின் வீட்டில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்ப 2 மணிக்கு மேலாகிவிட்டதால் குழந்தையுடன் நேராக தூங்க சென்றோம். அதனால் அடுத்த நாள் காலையில் சிறிது லேட்டாக எழுந்ததால் பரிசு பொருட்களை கவர் செய்ய நேரமில்லாததால் காரில் இருந்து அப்படியே எடுத்து வைத்து கொண்டிருந்த சமயத்தில் குழந்தை எழுந்து வந்தாள் அப்போது அவளிடம் Santa Claus ஒவ்வொரு வீடாக செல்வதால் ரொம்ப டையர்டாக இருப்பாதால் வீட்டு வாசலிலேயே வைத்து விட்டு போய்விட்டார் என்று சமாளித்தோம். அப்போது அவளுக்கு புரிந்தும் புரியாமல் இருந்த நேரம்.



இந்த வருடம் நண்பர்களுடன் சர்ச்சுக்கு போய்விட்டு (இந்த சர்ச்சுக்கு நமது தமிழகமக்கள் குறிப்பாக நெல்லை, மதுரை கன்னியாகுமரி நாகர்கோவில் ஆட்கள் வருவதுண்டு) எனது வீட்டில் நடந்த இரவு விருந்து முடிந்தது வந்தவர்களும் சென்றார்கள் ஆனால் இந்த ஆண்டு சிறிது வளர்ந்துவிட்டதால் Santa  உண்மையல்ல என்று தெரிந்துவிட்டதால் அவளுக்கு சர்பரைஸாக காலையில் கொடுக்கலாம் என்று நினைத்து இருந்தோம். ஆனால் வழக்கம் போல Santa வுக்கு இரவில் பாலையும் பிஸ்கட்டையும் வைத்துவிட்டு தூங்க சென்றாள். எனக்கும் ஆச்சரியம் அவளிடம் கேட்டேன் அதற்கு அவள் காலையில் பதில் சொல்வதாக சொல்லி தூங்க சென்றுவிட்டாள்.





அவள் சென்ற சிறிது நேரத்தில் நானும் குழந்தை வைச்ச பால் வீணாக போய்விடக்கூடாது என்று வழக்கம போல குடித்து விட்டு சென்றேன். கிறிஸ்மஸ்நாள் அன்று பரிசு பொருட்களை பார்த்து சந்தோஷப்பட்ட பெண்ணிடம் கேட்டேன் Santa தான் உண்மை இல்லையே அப்ப நீ ஏன் இரவு பாலையும் பிஸ்கட்டையும் வைத்தாய் என்று கேட்டேன் அதற்கு அவள் சொன்னால் அப்பா நீ தானப்பா என் Santa நீ இவ்வளவு ஆண்டு நான் வைத்த பாலை குடித்தாய் இந்த ஆண்டும் பால்பிஸ்கட் இல்லை என நீ நினைத்து வருந்த கூடாது என்றுதானப்பா வைத்தேன்



என்ன சொல்வதன்றே தெரியாமால் வாய் அடைத்து நின்றேன். இந்த கால குழந்தைகளின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது.

குழந்தைகள் நமக்கு பாடம் கற்றுதரும் நாட்கள் இது


 

4 comments:

  1. நீங்கள் இருவருமே கொடுத்து வைத்தவர்கள்.
    கண்டிப்பாக இக்காலக் குழந்தைகள் வாழ்க்கைப் பார்வை வேறு .
    yes smart & cute kids !

    ReplyDelete
  2. அவங்க யோசிக்கர அளவுக்கு நாம யோசிப்பதில்லை...என்ன தான் சொல்லுங்க குழந்தைங்க அளவுக்கு நமக்கு யோசிப்பு தன்மை இல்லை!

    ReplyDelete
  3. aamaam romba naalaka "kuzhandai eppadi vanthathu" enra kelvikku "kaakkaa konduvanthu pottathu" enru sollamudiyaathuthaan.!!!!

    ReplyDelete
  4. உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான அன்பின் வெளிப்பாடு மனதை நெகிழவைக்கின்றது....இனிய அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.