டீன்ஏஜ் வயதில் குழந்தைகள் செய்யும் மனம் பதைக்க வைக்கும் செயல் (குழந்தைகள் உள்ள பெற்றோரின் கவனத்திற்கு)
(Parents Beware)
"எங்கே கட்டுபாடுகள் அதிகம் உள்ளதோ அங்கேதான் தாண்டி குதிக்கும் கால்கள் மிக உறுதியாக உள்ளன "என நான் சிறுவயதில்  எங்கோ படித்தாக ஞாபகம். அதிலும் இந்த கால இளம் வயது குழந்தைகளை சொல்லவே வேண்டாம்.. இப்போது உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள க்ரியேடிவ் முளையை பயன்படுத்தி  தடைகளை எளிதில் உடைத்து எறிந்துவிடுகிறாரகள்.
அந்த க்ரியேட்டிவ் மூளையை தவறான செயலுக்கு பயன்படுத்தி ஒரு அறுவருக்க செயலை செய்ய ஆரம்பித்தது இந்த மேலைநாட்டில் உள்ள பள்ளி குழந்தைகள்(டீன் ஏஜ்) அது படிபடியாகி பரவி நம் இந்திய இளம் மாணவர்களிடமும் பரவி வருகின்றது என்பது மிக அதிர்ச்சிக்குரிய ஓரு செய்தியாகும்.
அந்த அருவருக்க செயல் வேறு ஓன்றுமில்லை பெண்கள் அந்த மூன்று நாட்களில் உபயோகிக்க பயன்படுத்தப்படும்  Tampons யை வோட்காவில் ஊற (Vodka Soaked Tampon)வைத்து பெண் குழந்தைகள் அவர்கள் பிறப்பு உறுப்பிலும் (vagina.)ஆண்கள் தங்களது மலத்துவாரத்தில் (rectall)செலுத்தியும் போதையை ஏற்றிக்  கொள்கின்றனர். இதனால் அவர்கள் வெகு விரைவில் உச்ச போதையை அடைவதுமட்டுமல்லாமல் குடித்தால் ஏற்படும் வாசனையை இதன் மூலம் மறைக்கப் பயன்படுத்துகின்றனர் என்ற செய்தியை   அமெரிக்காவில் படிக்கும் ஒரு இந்திய கல்லூரி இளைஞனிடம் இருந்து கேட்டு அறிந்தேன். அவன் மூலம் தான் இந்த முறை இந்தியாவில் சில கல்லூரிகளிலும் பரவி வருகின்றது என்ற உண்மையையும் அறிந்தேன் இந்த பழக்கம் மேலைநாடுகளில் இருந்து  இந்தியாவிற்கு விடுமுறைக்கு செல்லும் இளைஞர்கள் மூலம் அங்குள்ளஅவர்களது நண்பர்களுக்கும் பரவி வருகின்றது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முறைகளின் மூலம் இரத்ததில் ஆல்ஹால் வெகு எளிதாக பரவி விடுகிறது. இளைஞர்கள்தான் இந்தமாதிரி அருவருக்க சில செயல்களில்தான் ஈடுபடுவார்கள் என்று நினைத்து இருந்த எனக்கு இளைஞிகளும் ஈடுபடுகிறாரகள் என்பதுதான்  மிக அதிர்ச்சிக்குள்ளாகிய செய்தியாகும்
அந்த இளைஞன் சொல்லிய செய்தியை என்னால் நம்பமுடியவில்லை இருந்தபோதிலும் நான் ஆன்லைனில் தேடிய போது அமெரிக்க டிவிகளில் வந்த செய்தியை வைத்து பார்க்கும் போது என்னால் இதை மறுக்க முடியவில்லை.
டிவிகளில் வந்த செய்தியை உங்கள் பார்வைக்காக கிழே  இணைத்துள்ளேன். Parents Beware of Tampons Soaked in Vodka

 
 
 
 Posts
Posts
 
 
இதுவரை அறியாத தகவலாகவும்
ReplyDeleteஅதிர்ச்சியான தகவலாகவும் உள்ளது
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
எச்சரிக்கைப் பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
ரூம் போட்டு யோசிக்கிராங்களோ. உலகம் போர போக்க பாத்தா...ம்ம்ம்ஹ்ம் சேரும், சகதியும் இருக்குன்னு நாம் ஒதுங்கி போனாலும் இவனுங்க விடமாட்டானுங்க
ReplyDeleteAZIFAIR-SIRKALI.BLOG
ஐயயோ இது என்ன புது வித அசிங்கமா இருக்கே? அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.
ReplyDeleteGod, we Indians copied stupid things from west, one more :( ...
ReplyDeleteஏ யப்பா இது பயங்கர அதிர்ச்சி தகவலா இருக்கே....!!!
ReplyDelete