தரம் குறைந்து விட்டதா இந்தியன் கல்லூரிகள்??
தமிழன் :ஹலோ மதுரைத்தமிழா என்ன கடந்த ஒரு வாரமா உங்க பதிவு எதையும் காணுமே என்ன ஆச்சு?
மதுரைத்தமிழன்: ஐயா.கடந்த வாரம் முழுவதும் மனசு சரியில்லை ஐயா அதுதான் பதிவு ஏதும் போடவில்லை.
தமிழன்: அப்படி என்ன்ய்யா ஆச்சு உங்களுக்கு?
மதுரைத்தமிழன்: எல்லாம் வாழ்க்கைதான் ஐயா?நான் யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை ஐயா. நாம நல்லது செய்தாலும் உறவுகள் நாம என்னமோ கெடுதல் செய்வது போல நினைக்கிறார்கள் ஐயா. இந்த காலத்தில் வாழ போலித்தனம் தேவையா இருக்கைய்யா. நல்லதுக்கு காலம் இல்லை என்பது மிகவும் உண்மையாகிவிட்டது போல இருக்கிறது.என்ன வாழ்க்கை என்ன வாழ்க்கை?? நாம் பெற்ற குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது ஐயா. அதனால்தான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
தமிழன்: மதுரைதமிழா வருத்தப்படாதீர்கள் காலப்போக்கில் எல்லாம் சரியாகி போய்விடும்.
மதுரைதமிழன்: ஐயா மன்னிக்கவும் உங்களிடம் போய் எனது கவலையை சுமத்துகிறேன் மன்னித்து கொள்ளுங்கள் ஐயா
தமிழன்: அதெல்லாம் ஒன்றுமில்லை மனது பாரத்தை யாரிடாமாவது இறக்கி வைக்கணும அப்பதாம் மனது நிம்மதியா இருக்கும்.
மதுரை தமிழன்: நீங்க சொல்லவது சரிதான் ஐயா..
மதுரைதமிழன்: ஓகே சார் நாம கொஞ்சம் வேற விஷயங்கள் பற்றி பேசுவோம் ஐயா. நான் படித்த செய்தியை உங்களிடம் சொல்லவில்லை என்றால் என் மண்டையே வெடித்துவிடும் ஐயா
தமிழன்: சொல்லுங்க மதுரைதமிழன் நீங்க எப்போதும் விதவிதமான தகவல்களை பகிர்ந்து கொள்வீர்கள் இன்று எந்த செய்தியை பகிர்ந்து கொள்ள போகிறீர்கள்?
மதுரைத்தமிழன்: எல்லாம் நம்ம நாட்டில் உள்ள கல்லூரிகளின் தரத்தை பற்றிதான் ஐயா. நம்ம ஊரில் உள்ளவர்கள் எப்போதும் நம் பள்ளிகள் கல்லூரிகள்தான் மிக உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். மதுரைக்காரன் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போதும், சென்னையில் உள்ளவர்கள் லயோலா கல்லூரியில் படிக்கும் போதும், இந்தியாவில் உள்ளவர்கள் IIT-யில் படிக்கும் போதும் காலரைத் தூக்கி ரொம்ப பந்தா பண்ணுவார்கள். அவர்கள் என்னவோ மிக தரமான கல்லூரியில் படிப்பதாக ஒரு மிதப்பில் திரிவார்கள்.அவர்கள் எல்லாம் கீழ்கண்ட வலைத்தளத்திற்கு சென்று பார்த்தால் இந்தியாவின் கல்லூரிதரம் உலகில் எந்த அளவில் இருக்கிரது என்பது புரியும்.
உலகின் டாப் 200 யூனிவர்சிட்டியில் இந்தியாவில் உள்ள எந்த கல்லூரியும் இல்லை. The Indian Institute of Technology, Bombay, widely regarded as India’s most prestigious engineering and technology school, இந்த கல்லூரிகூட டாப் 200 லிஸ்டில் இல்லை என்பது மிகவும் வருந்தக்க கூடிய தகவலாகும். இந்த கல்லூரி டாப் 400 கல்லூரியில்(யூனிவர்சிட்டியில்) 301-350 லிஸ்டில்தான் வந்துள்ளது.
இந்தியாவில் கல்லூரிகளில் படித்து வரும் இளைஞர்களின் விகிதம் வேண்டுமானால் அதிகரித்து இருக்கிறது. ஆனால் அவர்களின் தரம் மிக குறைவாகாத்தான் இருக்கிறது என்பது மிகவும் கவனிக்கதக்கதாகும்
இங்கே இன்போஸிஸ் சேர்மன் சொன்னதை நான் இங்கே குறிப்பிடவிரும்புகிறேன். அவர் சொன்னதாவது The quality of education even in the illustrious Indian Institutes of Technology is actually getting worse. Part of the problem is the admission criteria, which Mr. Murthy said isn’t strict enough. As a result, “the quality of students entering IITs has gone lower and lower,” Mr. Murthy said to a gathering of IIT alumni in New York, according to the PressTrust of India “They somehow get through the joint entrance examination. But their performance in IITs, at jobs or when they come for higher education in institutes in the US is not as good as it used to be,” he said.
நமது தலைவர்களுக்கு இதைபற்றியெல்லாம் கவலையில்லை. அவர்கள் எல்லோருக்கும் எப்படி குறுக்கு வழியில் தாம் குறைந்தகாலத்தில் அதிகம் பணம் சம்பாதிப்பது என்பதுதான். வெகு விரைவில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து அவர்கள் பணம் சம்பாதிப்பதுதான் அவர்களது குறிக்கோளாக இருக்கும்.
நீங்கள் நினைக்கலாம் அப்படி தரம் வாய்ந்த கல்லூரிகள் வந்தால் நம் மாணவர்களின் தரம் உயர்ந்துவிடுமென்று. நீங்கள் அங்குதான் தவறு செய்கீறிர்கள் எப்போது வெளிநாட்டுகல்லூரிகள் நம் நாட்டிற்குள் நுழைகிறதோ அப்போதே அதற்கான கல்வி கட்டணமும் தானாகவே உயர்ந்துவிடும். அப்படி ஒரு நிலை வரும் போது நம் நாட்டில் இப்போது மிக கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெறும் குப்பணும் சுப்பனும் எதிர்காலத்தில் நல்ல பட்டம் பெற முடியாது. அப்படியே கஷ்டப்பட்டு பட்டம் பெறுபவர்களும் தாங்கள் கல்லூரிக்காக செலவழித்த பணத்தை தாங்கள் பெற்ற வேலையினால் கிடைக்கும் சம்பளத்தை கொண்டு வாழ்நாள் முழுவதும் அடைக்கும் நிலை ஏற்படும். அப்படிபட்ட நிலைதான் இன்று அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதில் இங்குள்ள இந்திய மாணவர்கள் விதிவிலக்கு காரணம் இங்குள்ள இந்தியர்கள் தங்களின் குழந்தைக்கான படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்று கொள்கிறாரகள். ஆனால் அமெரிக்க மாணவன் நிலமையோ அவர்கள் "பிட்ஸா ஹட்" போன்ற இடங்களில் உழைத்துதான் செலவை சரிகட்டவேண்டும். காரணம் அமெரிக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கான கல்ல்லூரி செலவை தாங்கள் செய்யமாட்டார்கள் இதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் தாங்கள் படித்தற்கான செலவிற்கான கடனை இன்னும் செலுத்தி கொண்டிருப்பதுதான்.
இறுதியாக நான் இங்கு சொல்ல வருவது அரசாங்கத்திடம் இருந்து இலவசங்களுக்காக போராடுவதைவிட்டு விட்டு நல்ல கல்விகிடைக்க போரட வேண்டும் என்பதுதான். இதை செய்தால் உங்கள் வருங்கால சந்ததி உங்களை வாழ்த்தி வணங்கும் என்பதுதான்.
தமிழன்: மதுரைத்தமிழன் உங்கள் கவலைகளுக்கிடையே நீங்கள் ஒரு நல்ல தகவலை சொல்லியிருக்கிறீரகள் . நன்றி ஐயா.
டிஸ்கி: பதிவுகள் போடுவதை நிறுத்திவிடலாம் என்று நினைத்து சில தினங்களாக பதிவுகள் போடாமல் இருந்த எனக்கு இன்று ஆயிரம் பதிவுகள் போட்ட ஒரு பதிவாளாரின் பதிவை படிக்க நேர்ந்தது. அவர் அந்த 1000மாவது பதிவை மிக அழகாக எழுதியிருந்தார். அதை படித்த பின் தான் பதிவை தொடர வேண்டூம் என்ற எண்ணத்தில் விளைந்த பதிவே இந்த பதிவு.
கல்விதரம் குறித்த தங்கள் கவலையுடன் கூடிய
ReplyDeleteபதிவு அதிகம் சிந்திக்கவைத்துப் போகிறது
உண்மையில் என்னைப் போன்ற பலர்
தங்கள் பதிவின்மூலமே பல அரிய விஷயங்களை
அறிந்து கொள்கிறோம்.தயவு செய்து வாரம் ஒன்று என்ற
கணக்கிலாவது பதிவுகள் தொடர்ந்து தரவும்
வாழ்த்துக்கள்....
ரமணி சார் உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக நன்றிகள்
ReplyDeleteதோழர்,
ReplyDeleteஉங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பதிவு எழுதுங்கள்.. கலக்கலாக வரும் உங்கள் எழுத்துக்களை படிக்க நிறைய நபர்கள் காத்திருக்கிறார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்... உங்கள் தளத்துக்கு பலர் திரும்ப திரும்ப வந்து புதுசா ஏதாவது போட்டிருக்கிறாரா என்று பார்த்துவிட்டு ஏமாந்து செல்லக் கூடும்.. அவர்களுக்காவது எழுதுவதை நிறுத்தாதீர்கள்
MTG ,
ReplyDeleteகல்வியைப் பற்றி தெரிந்திராத பல தகவல்களை உங்கள் பாணியில்
சுவராஸ்யமாக சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது.
தொடருங்கள்.