Wednesday, August 5, 2020

I dont unserstand
சத்தியமா ஒன்றும் புரியலே.



சிலர் கவிதைன்னு எழுதறாங்க சிலர் கதைன்னு  எழுதுறாங்க சிலர் கட்டுரைன்னு எழுதுறாங்க.. சிலர் இலக்கியம் என்று எழுதுறாங்க... சிலர்  தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைன்னு எழுதுறாங்க  சிலர் நகைச்சுவையாக எழுதுகிறோம் என்று தமிழை தப்பு தப்பாக எழுதுறாங்க ஆனால் அவங்க எழுத்துக்களை படிக்கும்  எனக்கு சத்தியமா ஒன்றுமே புரியலே.  ஆனால் என்ன அவங்க எழுதினது தமிழ்ல இருக்கறதனால  படிக்க மட்டும் முடியுது. அதைத் தவிர வேற ஒரு மண்ணும் விளங்கவில்லை.
 
 நிஜமாகவே  கேட்கறேன், நாம் எழுதுவது அடுத்தவங்களுக்கு  படிச்சு புரிஞ்சு சிந்திகணும் என்றுதானே  எழுதறோம், ஆனால் அப்படியில்லாமல் புரியாம எழுதிதள்ளினா யாரு படிப்பாங்க எத்தனை பேரு படிப்பாங்க அப்படியே படிச்சாலும் எத்தனை பேரு புரிஞ்சிப்பாங்க. படிச்சா மட்டும் ஒரு வேளை போதுமோ என்னவோ?

இதுல வேற என் எழுத்தை படித்துவிட்டு விமர்சிக்கவில்லை கருத்து சொல்லவில்லை என்று மட்டும் குற்றம் சொல்லுறாங்க.. இதுல வேற இப்படி எழுதுவதையும் எழுதிவிட்டு நம்மை ஒரு சிறந்த எழுத்தாளராக கற்பனை பண்ணிக் கொண்டு தமிழக மக்கள் மட்டும் எழுத்தாளர்களை ஆதரிக்கவில்லை அதனால் அவர்கள் ஏழையாக இருக்கிறார்கள் என்று மக்களையும் படிப்பவர்களையும் குற்றம் சொல்லுகிறார்கள்....


அடேய் எழுதும் போது எல்லோருக்கும் புரியும்படியாக எளிமையான தமிழில் எழுதுங்கள் ...இல்லையென்றால் தமிழ் உங்களாலே சாவும்


அவ்வளவுதான் சொல்லுவேன்



அன்புடன்
மதுரைத்தமிழன்

05 Aug 2020

18 comments:

  1. மதுர....

    தெரியாம ஒரு கருத்தை சொல்லிட்டேன்.. அதுக்குன்னு இப்படியா?

    :)

    உங்கள் கருத்தை படித்தேன். தமிழ்மணம் போனதில் இருந்து வருகையாளர்கள் ரொம்ப குறைந்து விட்டது என்று தான் உணர்கிறேன்,

    ReplyDelete
    Replies
    1. விசு இது நான் எழுதி ட்ராப்டில் இருந்த பதிவு..... உங்களுக்காக எழுதியதுன்னு நினைக்காதீங்க உங்களிடம் ஏதும் சொல்ல வேண்டுமென்றால் தனி மடலில் சொல்லிவிடுவேன். இது வேறு சிலருக்காக எழுதிய பதிவு... ஆனால் யாருக்காக எழுதியன்னு கேட்காதீங்க அடி வாங்கினாலும் சொல்ல மாட்டேன்.

      Delete
  2. மதுர,

    புரண்டு புரண்டு படுக்கிறேன் தூக்கமே வரமாட்டேங்குது. யாருக்கு எனக்கு மட்டும் சொல்லிடு. யார் அடிச்சி கேட்டாலும் சொல்லவே மாட்டேன்.

    :)

    ReplyDelete
  3. மய்யம் மீது ஏனிந்த கோபம்...?

    ReplyDelete
    Replies
    1. ஓஹோ!! அப்பூடியா?

      கீதா

      Delete

    2. மய்யம் அல்ல மய்யம் மாதிரி எழுதிக் கொண்டிருப்பவர்களைத்தான் இங்கே சொல்லி இருக்கிறேன்

      Delete
  4. இன்னும் நான் மாணவனே.

    ReplyDelete
    Replies

    1. நீங்க மாணவனா? நீங்கள் எல்லாம் குரு அய்யா

      Delete
  5. இப்ப எங்களுக்குத்தான் சத்தியமா ஒன்னுமே புரியலை மதுரைதமிழன்!!

    யாரைச் சொல்லுறீங்களோ?!! ஹா ஹா ஹா

    துளசிதரன்

    கீதா

    அத்தோடு இதுல உள் குத்து வெளிக்குத்து, முன் குத்து, பின் குத்து, லெஃப்ட் ரைட்டு சைடு குத்து எதுவும் இல்லைதானே!! ஹாஹாஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னது என் பதிவு புரியலையா??? அப்ப நீங்க என்னையும் அந்த லிஸ்டில் சேர்த்துட்டீங்களா? அட ராமா!!!!!!!

      Delete
  6. ஹலோவ் ட்ரூத் நலமா ..
    ஹையோ நானில்லை ஏன்னா எனக்கு கதை கவிதைல்லாம் எழுத தெரியாதே :)மிஞ்சிமிஞ்சி போனா ஆடு பூனை மாடு  நாய் எலி பறவைகள்தான் எனக்கு பரிச்சயம் 

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்தை எழுதியது ஏஞ்சலா அல்லது அட்மினா??? உலக அதியசமாக இருக்கே........

      Delete
  7. நான் கவிதைன்னு எழுதறேன்தான்.  ஆனால் அது வசனத்தை மடக்கிப்போட்டு எழுதுவதுதான்.   அதனால் இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்தேன்தான்!  ஆனால் படித்தால் புரியற மாதிரிதானே எழுதறேன்!!

    ReplyDelete
    Replies

    1. ஹலோ உங்களை எல்லாம் சொல்லவில்லை... புரியாமல் எழுதுபவர்களைத்தான் அதுவும் இலக்கியம் என்ற பெயரில் கிறுக்குபவர்களைத்தான் குறிப்பாக சொல்லி இருக்கிறேன்.. நம்ம ஆட்கள் எழுதிய என்றால் நேராகவே அய்யா அம்மா நீங்க எழுதிய எனக்கு புரியவில்லை ஒரு கோனார் நோட்ஸையும் சேர்த்தே பதிவிடுங்கள் என்று சொல்லிவிடுவேன்

      Delete
    2. அப்பா...டி... 
       
      நானா இல்லையா என்று தெரிந்து கொள்ள செய்த முயற்சி வெற்றி!  ஆனாலும் நான் எழுதுவது பற்றி நான் சொல்லி இருப்பது உண்மை!

      Delete
  8. புரியாத புதிராக சிலரின் எழுத்து! :) இந்தப் பதிவின் வழி யாரைச் சொல்ல வருகிறீர்கள் என்று புரியாதது போலவே! :) நடக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நான் சொல்லியது சிலரின் எழுத்துகளைத்தான் ஜி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.