Thursday, August 20, 2020

 மாற்றம் முன்னேற்றம் என்பது?

 

மாற்றம் முன்னேற்றம் என்பது? Is change progress?

சிறுவயதில் ஏழ்மை நிலையிலிருந்த மோடி ரயில்வே நிலையத்தில் டீ விற்றார்... ஆனால் இப்போது பாரதப் பிரதமராக  ஆனபின்  மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் வாயில வடை சுடுகிறார். இதுதான் மாற்றம் முன்னேற்றம் என்பது


பாட்டி வடை சுட்டு விற்ற கதையைக் கேட்டு குழந்தைகள் வளர்ந்தது ஒரு காலம்.. ஆனால் மோடி வாயில வடை சுடுவதைக் கேட்டு குழந்தைகள் வளர்வது  இந்தக் காலம்

  
மாற்றம் முன்னேற்றம் என்பது? Is change progress?

மோடி பேசுவது தமிழக மக்களுக்குப் புரியாது அது போலத் தமிழக மக்களின் பிரச்சனைகள் மோடிக்குச் சுத்தமாகப் பிடிக்காது,



அடேய் பேசாமல் தமிழக தலைநகரம் யாழ்ப் பாணம் என்று அறிவித்துவிடுங்கள்

zoom மூலம் தமிழர்கள் மற்றும் தமிழக தலைவர்கள்  பண்ணாதது  உண்ணாவிரதம் இருப்பது மட்டுமே



இந்திகாரப்பய புள்ளைங்களுக்கு வடை சுடுவது என்றால் எப்படி என்று தெரியாது. அதனால்தான் அவர்கள் வாயிலேயே வடை சுடுவார்கள் அதில் மோடி மிக கெட்டிக்காரர்


சென்னை: தூத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த விதிமுறைகளைப் பின்பற்றவே இல்லை என்றும், அதனால், அந்த ஆலையை மூட உத்தரவிட்டது செல்லும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பு சட்டசபைத் தேர்தலுக்கு அப்புறம் 'ஸ்டெர்லைட்' ஆலையைத் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.... அந்த தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கைச் சரியாக விசாரிக்காமல் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள் அது மிகவும் தவறான தீர்ப்பு அதனால் அந்த தீர்ப்பைத் திருத்தி ஆலை திறக்க உச்ச நீதிமன்றம் ஆணையிடுகிறது என்று தீர்ப்பு வரும்..

அடே வெண்ணைங்களா உச்ச நீதிமன்றத்தைப் பற்றி நமக்குத் தெரியாதா என்ன?


 
மாற்றம் முன்னேற்றம் என்பது? Is change progress?


மறுபரிசீலனையைச் சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் செய்வோம் வெயிட்





ஏப்ப தமிழ் மக்கள் எல்லாம் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை பண்ணுகிறார்களோ அப்போது உடல் நிலை பாதித்தவர்கள் மீண்டு  வந்ததாகச் சரித்திரம் இல்லை # எடுத்துக்காட்டாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர். எனக்குத் தெரிந்து எல்லாம் கூட்டுப் பிரார்த்தனையால் பிழைத்து வந்தவர் என்று ஒருத்தர் உண்டு என்றால் அவர் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மட்டுமே..




அட சங்கிகளே இந்து மத பண்டிகை தினத்தின் போது  மாற்று மதத்தினர் மாமிசம் சாப்பிடக்  கட்டுப்பாடு கொண்டு வரும்  உங்களுக்கு  மாற்று மதத்தினர் கொண்டாடும்  பண்டிகையின் போது நீங்கள் அனைவரும் மாமிசம் கண்டிப்பாக சாப்பிடனும் என்று சட்டம் கொண்டு வந்தால் ஒகேவா


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:


  1. நீண்ட காலம் கழித்து வருகிறேன். இன்னும் நீங்கள் பாரதப் பிரதமரை நக்கலடிப்பதை நிறுத்தவில்லை போல இருக்கிறதே..... நீங்கள் திமுக கட்சியை சார்ந்த உடன் பிறப்பா?

    ReplyDelete
  2. எம்ஜிஆர் அவ்வாறு இல்லையே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.