Thursday, August 27, 2020

 

are you from tamil nadu?

நீங்க  தமிழ் நாட்டை சேர்ந்தவரா என்ன?
 
மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி பங்கீட்டை எப்போது தருவீர்கள் 

அதற்க்கு  எங்களிடம் காசு இல்லை.  

ஆனால், ஜி.எஸ்.டி.என் வழியாக மொத்த பணமும் உங்களிடம் தானே வந்தது ?

 ஆமா வந்தது. செலவழிச்சுட்டோம். இப்ப காசு இல்லை.

 
ஆமா எப்படிச் செலவழிச்சீங்க.
நாங்கள் நிறைய மக்களுக்காகத் திட்டம் போட்டோம்.
ஆமாம் நீங்கள் போட்ட திட்டம் எல்லாம் ஊடகங்களில் மட்டுமே வந்ததது ஆனால் அது எல்லாம் மக்களிடையே வந்து சேரவில்லையே..

  


நீங்கள் மக்களுக்காகப் போட்ட திட்டம் என்றால் மக்களிடையே அந்தத் திட்டம் வந்து அல்லவா சேர்ந்து இருக்கும்... ஆனால் நீங்கள் போட்ட திட்டம் எல்லாம் மக்கள் பேரால் பணத்தைச் சுருட்ட நீங்கள் போட்ட திட்டமாக அல்லவா இருக்கிறது...


ஹீ ஹீ நீங்க ஸ்மார்ட் அதனாலா நீங்க புரிஞ்சுகிட்டீங்க என்னை முழுமையாக நம்புகிற சங்கிகள் கூட்டத்திற்கு அதெல்லாம் புரியாது... அதுதான் எங்கள் பலம். அதுமட்டுமல்ல அதை எல்லாம் நாங்கள் எப்படி வெளிப்படையாகச் சொல்லுறது. அது அரசாங்க ரகசியம் அல்லவா...

அப்ப நீங்கள் மக்களுக்காகப் போட்ட திட்டம் எல்லாம் PM Care திட்டம் போலத்தான் என்கீறீங்க சரிதானே?

 ஹீஹீ நீங்க ரொம்ப ஸ்மார்ட்டான ஆளாக இருப்பிங்க போல இருக்கே ஆமாம் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறீங்களே நீங்க என்ன தமிழ் நாட்டைச் சார்ந்தவரா என்ன?

என்னது உங்களைக் கேள்வி கேட்டால் அது தமிழகத்தைச் சார்ந்தவரா என்று திருப்பிக் கேட்கிறீங்க? ஆமாம் நாங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அப்படித்தான் கேள்வி கேட்போம் அதுமட்டுமல்ல இன்னும் அதிகக் கேள்வி கேட்போம்.

இப்ப சொல்லுங்க


மாநிலங்களுக்கான நேரடி வருவாய் ஆதாரங்களை முழுமையாகப் பிடுங்கிக் கொண்டு, இப்போது மாநிலங்கள் வழியாக வந்த வரி வருவாயையும் செலவழித்து விட்டு, மாநிலங்களுக்கான பங்கினை தர முடியாது, ஒன்றியத்தில் பணமில்லை என்று சொன்னால், மாநிலங்கள் தங்களுடைய செலவுகளை எப்படிப் பார்க்கும் ?

ஹீஹீ அதுக்கும் நாங்கள் ஒரு திட்டம் போட்டு வைச்சிருக்கோமே...வேண்டுமானால் ஒன்று பண்ணுங்கள், நாங்கள் ரிசர்வ் வங்கியோடா பேசறோம். நீங்கப் போய்ச் சந்தையில் கடன் வாங்கி ஈடு கட்டிக்கோங்க. அதை எப்படி compensate பண்றதுன்னு பின்னாடி சொல்வோம்.


என்ன ஜி நீங்கள் தானே ஜி.எஸ்.டி வந்தால் மாநிலங்கள் வளமாகும், ஒன்றியம் பூலோக சொர்க்கமாகும் என்று அளந்து விட்டவர்கள். இப்போது மாநிலத்திலிருந்து கட்டப்பட்ட வரி வருவாயில் எங்களுடைய பங்கிற்கே பிச்சை எடுக்க வைக்கிறீங்க அதை ஈடு கட்ட மாநிலங்களையே கடன் வாங்க சொல்கிறீங்க

இந்த மாதிரியான அடாவடி ஆட்டமெல்லாம் நீங்கள் ஆடுவீங்க என்று தெரிந்து தான் 2017லேயே தமிழ்நாடு ஜி.எஸ்.டியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கழுதையாய் கத்தினோம். ஜெயலலிதா முதல்வராக இருந்த வரைக்கும் அது நடக்கவே இல்லை.

துக்குதானோ அந்த அம்மாவை நாங்கள் அப்போலோவில் இட்லி சாப்பிட வைச்சோம்..

அதுமட்டுமா செய்தீர்கள் எடப்பாடியை எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்டு தலையாட்டி வைக்கச் செய்து , தமிழ்நாட்டின் நிதி சுதந்திரத்தை அடகு வைக்கச் செய்து. அடகு வைத்தது எப்படி மூழ்கிப் போகுமோ அது போலத் தமிழகமும் மூழ்கிப் போக வைக்கச் செய்து வீட்டீர்களே மகா பிரபு..


இதற்கெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் பேசாமல் நீங்கள் சங்கிளாக மாறிவீட்டீர்கள் என்றால் உங்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது .. அது மட்டுமல்ல உங்களுக்குச் சூடு சுரணை ஏதும் இருக்கவே இருக்காது..


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. வேதனைக்குரிய பல உண்மைகள்...

    ReplyDelete
  2. உண்மைகள் உலகறிந்து பயனில்லை. இந்திய மா"க்கள் உணரவேண்டும்.

    ReplyDelete
  3. அர்த்தமுள்ள ஆதங்கம்.

    ReplyDelete
  4. வணக்கம் சார்.என்னால் தமிழ்மணம் ஓப்பன் செய்ய முடியவில்லை.URL ஏதும் மாறியிருக்கிறதா ? நீண்ட நாள் வராமல் இருந்ததால் தெரியவில்லை.

    ReplyDelete
  5. வணக்கம் சார்.தமிழ்மணத்தில் நீணட காலம் எழுதாமல் இருந்ததால் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை.ஜனவரியில் என் பதிவுக்கு நீங்கள் மறுமொழிந்துள்ளதால் உங்களிடம் விசாரிப்போம் என நினைத்து இந்த கேள்வி.தமிழ்மணம் பக்கம் ஏன் திறக்கவில்லை உரல் மாறிவிட்டதா எனக்கூறவும்

    ReplyDelete
    Replies

    1. தமிழ்மணம் அதன் சர்வீஸை நிறுத்திவிட்டது. அதற்கு மாற்றாக https://tamilcharam.com/ தமிழ்சரம் இணையதளம் செயல்பாட்டிற்கு வந்து இருக்கிறது... இதை பயன்படுத்தி பாருங்கள் . தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.